குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
முன்நின்று கல்நின் றவர்.
விளக்கம் : பகைவரே! இதற்குமுன் என் தலைவனது வலிமை அறியாமல் அவனுக்கு எதிர் நின்று போரேற்று இறந்த பின்பு நடுகல்லில் நின்ற மறவர் பலராவர் ஆகையால் நீவிரும் அங்கனம் நடுகல்லில் நில்லாமல் உம் உடலோடு நிற்க விரும்பினால் என் தலைவன் எதிரே போரேற்று நிற்காதீர்.
குறள் 772: கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
விளக்கம் : காட்டில் ஓடும் முயலின் மேல் குறி தவறாமல் எய்த அம்பை ஏந்துவதைவிட வெட்ட வெளியில் நின்ற யானைமேல் எறிந்து குறி தவறிய வேலை ஏந்துவது பெருமை தருவதாம்.
குறள் 773: பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
ஊராண்மை மற்றதன் எஃகு.
விளக்கம் : அஞ்சாமலும் இரக்கமின்றியும் பகைவரோடு போரிடும் கடுமறத்தை பேராண்மை என்று சொல்லுவர் ஆயினும் அப்பகைவருக்கு ஒரு தாழ்வு வந்த போது இரக்கப்பட்டு அதை நீக்கும் பொருட்டு அவர்க்கு உதவி செய்வதை அப்பேராண்மைக்கு கூர்மை ( உச்சந்லை ) என்பர் மறநூலார்.
குறள் 774: கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
மெய்வேல் பறியா நகும்.
விளக்கம் : தன் கையிலிருந்த வேலைத் தாக்க வந்த போர் யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு அடுத்து வந்த வேறொரு யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு அடுத்து வந்த வேறொரு யானையைக் கொல்வதற்கு வேல் தேடித் திரும்பி வருகின்ற மறவன் தன் மார்பில் பாய்ந்த வேலைக்கண்டு பறித்து மகிழ்சியடைவான்
குறள் 775: விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
விளக்கம் : பகைவரை சினந்து நோக்கி விரிவாகத் திறந்த கண் அவர் ஒளி வீசும் வேலைப் பளிச்சென்று எறிய அதற்குக்கூசி முன்பு திறந்திருந்த நிலைக்கு மாறாக மூடி இமைக்குமானால் அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்தலாகுமன்றோ!
குறள் 776: விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
வைக்கும்தன் நாளை எடுத்து.
விளக்கம் : கடந்துபோன தன் வாழ்நாட்களை எல்லாம் எடுத்து எண்ணி அவற்றுள் போரில் புண்படாத நாட்களை எல்லாம் வீணாகக் கழிந்த நாட்களோடு சேர்ப்பான் உண்மை மறவன்.
குறள் 777: சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
விளக்கம் : உலகெங்கும் பரந்து நிற்கும் புகழை விரும்பி இங்கு உயிர் வாழ விரும்பாத மறவர் தம் காலில் வீரக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் ஒரு தனி அழகாம்.
குறள் 778: உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
செறினும் சீர்குன்றல் இலர்.
விளக்கம் : போர் வந்தால் சாவுக்கு அஞ்சாமல் போர்க்கலத்திற்குச் செல்லும் மறவர் தம் அரசன் அது வேண்டாம் என்று சினந்து தடுத்தாலும் தம் மறம் தளர்தல் இல்லை.
குறள் 779: இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
விளக்கம் : தாம் கூறிய சூள் ( வஞ்சினம் ) தப்பாதபடி போர் செய்து சாகவல்ல
மறவரை அவ்வஞ்சினம் தப்பியதற்காகத் தண்டிக்க வல்லவர் யாவர் ?
மறவரை அவ்வஞ்சினம் தப்பியதற்காகத் தண்டிக்க வல்லவர் யாவர் ?
குறள் 780: புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
விளக்கம் : படைமறவர் தமக்கு வாழ்வளித்துக் காத்த அரசரின் கண்களில் நீர் பெருகுமாறு போர்க்களத்தில் சாகப்பெற்றால் அச்சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத்தக்க பெருமை உடையது.இரந்துகோள் தக்கது உடைத்து.