★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 20, 2017

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்

தமிழக அரசியல் களம், ஆட்சி அதிகாரம், வர்த்தகம், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அடகு தொழில்  என வெளி மாநிலத்தவர்களின் கோரப்பிடிக்குள் தமிழகம் சிக்கித்திணறி வருகிற இன்றைய சூழல்களில் மேலும் தமிழர்களின் வாழ்வியலை முடக்கும் விதமாக தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் வெளி மாநிலத்தவர்களுக்கு அரசுப்பணிகளை திறந்து விட்டிருக்கிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வில் வென்றால் போதும் என்கிறது.

தமிழகம் தவிர்த்த மற்ற மாநில அரசுகள் அனைத்தும் மொழிவழி தேசிய கருத்தியலோடு தனது இனம், தனது மொழி, தனது மக்கள், தனது நாடு என மிகச் சரியாக செயல்படுவதோடு, தமது மாநில எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய மத்திய, மாநில அரசுகளின் வேலைகளோடு தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மீதமாகி கடலிலே கலந்துகொண்டிருக்கும் நீரைக்கூட தருவதற்கு தயாராக இல்லை.

இத்தகைய சூழலில், தமிழகம் மாற்று மொழியினர்களின் வேட்டைக்காடாக தொடர்ந்து நீடித்து வருவதும், தமிழர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டிய தேர்வாணையமே உடன்போவதும் கண்டனத்துக்குரியதாகும். ஏழை எளிய மக்களை எல்லாவற்றிற்கும் வங்கிகளுக்கு இழுக்கும் நிலையில், படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே தேசிய வங்கிகளில் தமிழறியாத அலுவலர்களின் கூட்டம் நிரம்பி வழிவதும், ஆட்சிப்பணி, காவல்பணி போன்ற உயர்பதவிகளில் மாற்று மொழியினர்கள் அதிகரித்து வருவதும் கண்டு வருகிறோம். எஞ்சி மிஞ்சி நிற்கும் ஒன்றிரண்டு அரசுப்பணிகளுக்கும் ஓட்டுமொத்த தமிழ்ச் சாதியினர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அரசுப்பணி என்பது பெருங்கனவாய் ஆக்கப்பட்டிருக்கிறது.


தமிழர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கவிருக்கும் இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தை மறத்தமிழர் சேனை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

சங்கரபதி கோட்டை வரலாற்று மீட்பில் - அரசின் மெத்தனம்

சிவகங்கை மாவட்டம் கரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் வழியில் முட்புதர்களுக்குள் சிதைந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கிறது சங்கரபதி கோட்டை. இப்போது ஆள் நடமாட்டமின்றி குடிமகன்களின் புகலிடமாக இருந்துவரக் கூடிய இக்கோட்டையானது, பல வரலாற்று வீரம் மிகுந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றுகொண்டிருப்பதை நாம் மறந்துவிட இயலாது.

பதினாராம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோட்டை மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற அளவில் பெரிய தூண்களையும், கட்டிட அமைப்பையும் கொண்டதாகும். கட்டிடம் மற்றும் தூண்கள் சுடாத செங்கற்கல், கருப்பட்டி, கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை கலந்து கட்டப்பட்டுள்ளன. சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டைக்குள் குளம்போல பெரிய பள்ளம் வெட்டப்பட்டு அதற்குள் போர்ப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு தொண்டியை சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் இருநூறு குதிரைகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த குதிரைகளை தமது படைப்பிரிவில் இணைத்து பராமரிக்க; பயிற்சி அளிக்க திறமையான ஆள் தேடினார் சேதுபதி மன்னர். குதிரைகளை பராமரிக்க ஹைதர் அலி தமது தளபதிகளில் ஒருவரான சங்கரபதியை அனுப்பி வைத்துள்ளார். அவரது நினைவாகவே அக்கோட்டையானது சங்கரபதிகோட்டை என வழங்கலாயிற்று.

மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான, வரலாற்று நாயகி வேலுநாச்சியார் அவர்களை சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தபொழுது சீதனமாக சங்கரபதிக் கோட்டையை வழங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திரண்ட சிவகங்கை வீரர்களுக்கு மருது சகோதரர்கள் இக்கோட்டையில் தான் வாள் பயிற்சி அளித்து வந்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கெட்டிபொம்மு நாயக்கரின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க இவ்விடத்தை பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதிக்கோட்டை தற்போது சிதிலமடைந்து இடியும் தருவாயில் இருந்து வருகிறது. இக்கோட்டையை அரசு சீரமைத்து, சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பலதரப்பட்ட மக்களும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் சங்கரபதி கோட்டையை சீரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்தார்.

இந்நிலையில் நான்காண்டுகளைக் கடந்தும் சங்கரபதி கோட்டை சீரமைக்கப்படாமல் முட்செடிகளுக்குள் முழுமையாக அழியும் நிலையிலேயே இருந்து வருகிறது. தற்போது அறிவிப்பினை வெளியிட்ட ஜெயலலிதா அவர்களும் மறைந்து விட்டார். மேலும், காலம் தாழ்த்தாமல் அறிவிக்கப்பட்ட நிதியினை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில் முட்புதர்களால் மறைக்கப்பெற்று, பராமரிப்பின்றி அழியும் நிலையில் சங்கரபதிக் கோட்டை இருந்து வருகிறது. இந்த கோட்டையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த கோட்டையானது 16-ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற தூண்களோடு கட்டிட கலையின் அடையாளமாகவும் இருந்து வருகிறது. சேதுபதி மற்றும் சிவகங்கை ஆட்சியாளர்களின் கீழ் போர்ப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், ஆயுத கிடங்காவும் இருந்து வந்திருக்கிறது. மருதுசகோதரர்கள் சிவகங்கை படை வீரர்களுக்கு போர்பயிற்சி அளித்துவந்ததுடன், ஊமைத்துரைக்கு அடைக்கலமும் கொடுத்த மிகப்பெரிய அரணாகும்.

தற்போது, சங்கரபதிக்கோட்டையானது முற்றிலும் அழிந்து போகும் நிலையில் இருந்து வருகிறது. தேவர் சமூகத்தை சார்ந்தவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த கோட்டையை சீரமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் அப்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் இந்த கோட்டையை சீரமைக்க கோரிக்கை விடுத்தார்.

14.05.013 அன்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சங்கரபதிக் கோட்டையை சீரமைக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்து ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது வரை வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்டையானது சீரமைக்கப்படாமல் சிதைந்துகொண்டே வருகிறது.

ஆகவே, தாங்கள் இதனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நிதியினை உடனே ஒதுக்கீடு செய்து கோட்டையை புனரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு செய்துடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அன்புடன் கோருகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, September 19, 2017

நிலத்தடி நீர் பாதுகாப்பு போராளிகள் கைது

ஸ்ரீவைகுண்டம், செப்-18-017. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் மக்கள் திண்டாடி வரும் சூழலில் பணமுதலைகளின் தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடின்றி நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ள அனுமதித்து, ஆடு மாடுகளுக்கு கூட நீர் இல்லாதபடி விற்பனை செய்வதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் குடிபுகும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி இராஜா தலைமையில் 18-09-17 அன்று ஸ்ரீவைகுண்டம் நகரில் இருந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவல்துறை அனுமதி மறுத்துவிட காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மறத்தமிழர் சேனை துணைப் பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், பச்சை தமிழன் இயக்க மாநில தலைவர் சுப.உதயகுமார், விவசாய சங்கத் தலைவர் அலங்காரம், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் பாகல் சமீர், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன், பசும்பொன் ரத்ததான கழக மாவட்ட செயலாளர் சுப்பையா, மக்கள் தேசிய தீ கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நாம் உழவர் பாதுகாப்பு அணி பொதுச்செயலாளர் மாணிக்கசாமி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, திராவிட தேசம் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


முன்னதாக, நிலத்தடி நீர் திருட்டுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியபடி பத்துக்கும் மேற்பட்ட நாய், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல போராட்டக்காரர்கள் முயன்றனர். அப்போது அனுமதியின்றி ஊர்வலமாக செல்வதாக கூறி துணை கண்காணிப்பாளர் திபு தலைமையில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், சார்பு – ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட 165 பேரை கைது செய்தனர்.

போராட்டம் குறித்து நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது “தாமிரபரணி ஆற்றின் நீர்வரத்தைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கார், பிசானம், முன்கார் என மூன்று போக சாகுபடிகள் இருந்த நிலைமாறி தற்போது ஒரு போக விவசாயத்திற்கு கூட தண்ணீரை பெற முடியாத அவல நிலையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் காலி குடங்களுடன் பல மைல் தூரம் நடந்து சென்று தண்ணீருக்காக காத்திருக்கும் நிலையும், குடிநீருக்காக போராட்டம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நடைபெற்று வரும் நிலத்தடி நீர் திருட்டை நிரந்தரமாக தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்துப் பார்த்தோம். போராட்டங்களும் செய்து பார்த்து விட்டோம். இதனைத் தொடர்ந்தே கால்நடைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடிபுகும் முடிவிற்கு வந்தோம். தற்போது காவல்துறை திருட்டை தடுக்காமல் எங்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். எங்கள் மீது போராட்டத்தில் கலந்து கொண்ட தோழமை இயக்கத்தினர்கள் மீதும் வழக்கு போட்டிருக்கின்றனர். ஆயினும் எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

Thursday, September 14, 2017

60 ஆம் ஆண்டு கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க கூட்டம் மறத்தமிழர் சேனை சார்பில் நடைபெற்றது.

பரமக்குடி, செப்.14, பரமக்குடியில் கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க அறுபதாம் ஆண்டு நாளை முன்னிட்டு மறத்தமிழர் சேனை சார்பில் பரமக்குடி தேவர் மகாலில் கீழத்தூவல் தியாகிகள் ஐவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ஐவர் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் அமைக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் உடல்குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். வறுமையில் வாடும் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடும், தகுதிக்கு ஏற்ப அரசுப்பணியும் வழங்கிட வேண்டும். பரமக்குடி வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி குடிநீர் திருட்டை தடுத்திட வேண்டும். வைகை ஆற்றில் கட்டிட, குப்பை கழிவுகளை கொட்டுகிறவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை தேவர், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் சி.எம்.டி.ராஜா, மறத்தமிழர் சேனை மாநில துணைப்பொதுச் செயலாளர் முத்துக்குமார பாண்டியன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நவநீதன், மறத்தமிழர் சேனை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுரைவீரன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் தேவன், தேசிய முக்குலத்தோர் கழகம் மாநில பொதுச்செயலாளர் மனோஜ்பாண்டியன், மூமுக மாவட்ட செயலாளர் வீ.எம்.சேகர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவர் அணி செயலாளர் அடைக்கலம், அதிமுக நகர் மீனவரணி துணை தலைவர் இராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் கார்த்திக்சேதுபதி, துரைப்பாண்டியன், பசும்பொன் தேசிய கழகம் சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய.பாரதி தேவர், வெள்ளைச்சாமி தேவர் பாசறை சிவகங்கை வடக்கு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் பெரியமந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மறத்தமிழர் சேனை பரமக்குடி ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

Sunday, September 10, 2017

கீழத்தூவல் படுகொலை

கீழத்தூவல் துப்பாக்கி சூடு மாமறவர்கள் ஐவர் வீரவணக்க நாள் நிகழ்வில் மறத்தமிழர் சேனை பங்களிப்புகள்



Thursday, August 3, 2017

எது அரசியல் ?


ரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு நிகழ்வும் அது நிகழும் காலத்தில் இயல்பாக நடந்தது போலத்தான் தோன்றும். ஆனால், அது இயல்பானதல்ல. ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றோடொன்று தொடர்பாக எதையோ நோக்கி நகர்ந்து கொண்டுதானிருக்கும். அதுபோலவே,  உலகமெங்கும் கடல் பரந்து விரிந்து கிடக்கிறது என்றாலும், எங்கள் சேது நாட்டு கடலுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. கிடைப்பதற்கு அரிதான முத்து எங்கள் சேதுசீமையின் கடல்பரப்பில் கொட்டிக்கிடக்கிறது. அதைப்போல, உலகமெங்கும் இராமனை கடவுளாக வணங்கி வந்தாலும், அந்த இராமனே வணங்கிய லிங்கமாகிய இராமலிங்கம் எங்கள் நாட்டின் புண்ணியபூமியான இராமேஸ்வரத்தில் அமைந்திருக்கிறது.  கிடைப்பதற்கரிதான முத்தும் இராமனே வணங்கிய இராமலிங்கமும் இணைந்து முத்துராமலிங்கம் ஆக தேவர் குலத்திலே ஓர் மகனாக பிறப்பெடுக்க வைத்திருக்கிறது.

பசும்பொன் கிராமத்தில் பாண்டியர் மரபிலே மாசற்ற தங்கமென உதித்த துருவநட்சத்திரம் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். தேவர் திருமகனார் அவர்களுடைய வாழ்வியல் முறையென்பது முற்றிலும் அறம் சார்ந்தது. ஆட்சியாளர்களின் அதிகார பலமோ, அதையும் மீறிய பணமோ ஒருபோதும் தேவரை சமரசம் கொண்டுவிடச்செய்ய இயலாத வகையில் யாவற்றிலும் முக்தி பெற்றவராயிருந்தார்.

எந்த நிலையிலும் முறைதவறி விடாமல், ஏழை எளிய மக்களின் வாழக்கைத்தரம் உயர்வதற்கென தமது அரசியலை கட்டமைத்துக் கொண்டார். அதன் காரணமாகவே இன்றளவும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களது பேச்சுகளில் தேவரின் வாழ்வை; வாக்கை மேற்கோள்களாக காட்டி வருகிறார்கள்.

மறத்தமிழர் சேனை

மறத்தமிழர் சேனை
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர், பரமக்குடி 

maraththamizhar senai

maraththamizhar senai - மறத்தமிழர் சேனை
12/338, thiruvarangam salai,
nethaji nagar, paramakudi.

Friday, January 6, 2017

தூரி எம்.ஆர். இராமசாமித் தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி மீண்டும் கடிதம்

மறைந்த மாபெரும் தியாகியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் உற்ற நண்பருமாகிய முதுகுளத்தூர் தூரி கிராமத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திடவும், அவரது பிறந்த நாளில் அரசு விழா எடுத்திடவும் வலியுறுத்தி தமிழக முதலைச்சரின் தனிப்பிரிவில் மறத்தமிழர் சேனை சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு குறித்து பரிசீலிக்கும்படி இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் முதல்வர் அலுவலகம் கோரியிருந்த நிலையில், இராமநாதபுரம், (ஊராட்சிகள்) உதவி இயக்குநர் திரு ஆ.செல்லத்துரை அவர்கள் 28.12.16 அன்று மாநில அமைப்பாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று (06.01.2017) இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் “இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.