பரமக்குடி, செப்.14,
பரமக்குடியில் கீழத்தூவல் தியாகிகள் ஐவர் வீரவணக்க அறுபதாம் ஆண்டு நாளை முன்னிட்டு
மறத்தமிழர் சேனை சார்பில் பரமக்குடி தேவர் மகாலில் கீழத்தூவல் தியாகிகள் ஐவரின்
புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மறத்தமிழர்
சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ஐவர் நினைவு நாளை அரசு விழாவாக
அறிவித்து மணிமண்டபம் அமைக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன்பு
சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் உடல்குறித்த உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். வறுமையில் வாடும்
வாரிசுதாரர்களுக்கு இழப்பீடும், தகுதிக்கு ஏற்ப
அரசுப்பணியும் வழங்கிட வேண்டும். பரமக்குடி வைகை ஆற்றை தூய்மைப்படுத்தி குடிநீர்
திருட்டை தடுத்திட வேண்டும். வைகை ஆற்றில் கட்டிட, குப்பை
கழிவுகளை கொட்டுகிறவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில்
முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை தேவர், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில
அமைப்புச் செயலாளர் சி.எம்.டி.ராஜா, மறத்தமிழர் சேனை மாநில
துணைப்பொதுச் செயலாளர் முத்துக்குமார பாண்டியன், அகில இந்திய
பார்வர்ட் பிளாக் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நவநீதன், மறத்தமிழர்
சேனை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், வைகை பாசன
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுரைவீரன் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து
சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை மாநில மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்
தேவன், தேசிய முக்குலத்தோர் கழகம் மாநில பொதுச்செயலாளர்
மனோஜ்பாண்டியன், மூமுக மாவட்ட செயலாளர் வீ.எம்.சேகர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாணவர் அணி
செயலாளர் அடைக்கலம், அதிமுக நகர் மீனவரணி துணை தலைவர்
இராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் கார்த்திக்சேதுபதி, துரைப்பாண்டியன், பசும்பொன் தேசிய கழகம் சிவகங்கை
தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய.பாரதி தேவர், வெள்ளைச்சாமி தேவர்
பாசறை சிவகங்கை வடக்கு மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் பெரியமந்திரி ஆகியோர் கலந்து
கொண்டனர். இறுதியாக மறத்தமிழர் சேனை பரமக்குடி ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி
கூறினார்.