★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 28, 2016

குற்றப்பரம்பரை அரசியல் - பெருங்காமநல்லூர் வீரம்

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு, கி.பி. 1800களில் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. மாகாணத்தை உருவாக்கியதுமே, காலனிய அரசு, கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் அரசின் நிதி நிலையை உயர்த்திட ரெவின்யூ போர்டு (Board of Revenue), டிரேட் போர்டு (Board of Trade & வணிகம்) ஆகியவற்றை நிறுவித் தங்களது நலன்களைப் பெருக்குவதில் தனிக்கவனம் செலுத்தியது. இதே நேரத்தில் உதயமான இந்தியத் தேசியக் காங்கிரஸ்’ (1885) கட்சியின் செயல்பாட்டினால் கலக்கமுற்ற காலனிய அரசு, தன்னுடைய அதிகாரத்தை மேலும் பலப்படுத்த எத்தனித்தது.- குறிப்பாக, ‘சூரத் மாநாட்டில் (1907) காங்கிரசாரிடையே ஏற்பட்ட மிதவாத & தீவிரவாதப் பிளவின் காரணமாக உருவான திலகரின், தலைமையிலான தீவிரவாத அமைப்பினரின் செயல்பாட்டினை எதிர் கொள்ள முடியாது அது திணறியது.

இத் தீவிரவாத அமைப்பை ஒடுக்கி அடக்குவதற்காகச் சட்டவிடிவிலான பல்வேறு சதிகளைப் பிரிட்டிஷ் அரசு தீட்டியது. இதன் மறு பகுதியாக, இங்குப் பரம்பரையாக உடல் வலிமை கொண்டு செல்வாக்குச் செலுத்திவந்த சில தீரமான உள்நாட்டுக் குழுக்களையும் எதிர் கொள்ளும் வகையில் & அவர்களையும் தம் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தும் நோக்கில் & பல குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் காலனிய அரசு குற்றவியல் பரம்பரைச் சட்டம் & 1871’ (Criminal Tribes Act 1871) போன்ற சட்டங்கள், மேலும், உள்ளூர் பிரஜைகள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தவும், முஸ்லீம்களைக் காங்கிரசிலிருந்து தனிமைப்படுத்தவும் பல்வேறு தந்திரோபாயங்களை மேற் கொண்டது. (தமிழகத்தில், பிறமலைக் கள்ளர்கள் காங்கிரசில் சேருவதைப் பெரும்பாலும் தடுத்து நிறுத்தியதற்காகக் கள்ளர் சமூக அபிவிருத்திஅதிகாரியாகப் பணி புரிந்த கி.ரி. இராஜா அய்யருக்கு வெள்ளைய அரசு ராவ்பகதூர்பட்டம் வழங்கியது. முஸ்லீம்களுக்குச் சலுகைகள்அளித்துக் காங்கிரசிலிருந்து பிரித்ததை, ‘மிண்டோ மார்லிசீர்திருத்தம் அம்பலப் படுத்தியது. இவற்றையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

Thursday, November 17, 2016

தூரி இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட மறத்தமிழர் சேனை கோரிக்கை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இன்று (17.11.16) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

Monday, November 14, 2016

சீர்மரபினர் மக்களின் உண்ணாநிலை அறப்போராட்டம்

ரமக்குடி, 13.11.016 அன்று சீர்மரபினர் பட்டியலில் இருக்கக்கூடிய சாதியினர்களை மீண்டும் டி.என்.டி என அறிவித்து சாதிச் சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி தேவரினப் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் தலைமையில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், தேவரினப் புலிப்படை மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சீர்மரபினர் சாதிப் பட்டியலில் வரக்கூடிய 68 சாதிகளுக்கும் துரோகம் இழைக்கும் விதமாகப் போடப்பட்ட அரசாணை எண் 1310 / நாள்: 30.07.1979 ஐ ஆளுகின்ற அதிமுக அரசு உடனே ரத்து செய்திடவும், பத்து சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிடவும் வலியுறுத்தி அனைவரும் பேசினர்.

மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் பேசுகையில் மறவர் கள்ளர் இன மக்களின் பண்டைய வாழ்க்கை முறை பற்றியும் அவர்களின் மீது குற்றப்பரம்பரைச் சட்டம் புகுத்தப்பட்டதன் காரணங்கள் குறித்தும், இன்றைய தேவரின இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டங்கள் குறித்தும், சுதந்திரத்திற்காக ஒரு சிறு அசைவைக்கூட செய்திடாத தலித் மக்கள் இன்று இட ஒதுக்கீட்டு முறைகளால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிரம்பி வழிகிற நிலைகுறித்தும் விளக்கிப் பேசியதோடு, தமது நீண்ட நாளைய கொள்கை முழக்கமான விகிதாச்சார இட ஒதுக்கீடு கோரிக்கையில் இருந்து தற்போதைய தேவையான டி.என்.டி போராட்டங்களின் அவசியம் குறித்தும் பேசினார்.

Sunday, November 13, 2016

இராமநாதபுரம் சீர்மரபின நல சங்க உண்ணாநிலை போராட்டம்

இராமநாதபுரம் மாவட்ட சீர்மரபினர் நல சங்கம் 13.11.016 அன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பாக உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல தலைவர் மு.செந்தூர்பாண்டியன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி செந்தில் அவர்கள் வழக்கறிஞர் ஜோதிபாசு அவர்கள், மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க செயலாளர் இராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கு எதிராகப் போடப்பட்ட அரசாணை 1310 / 30.07.1979 ஐ உடனே ரத்து செய்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி அனைத்து இயக்க முன்னோடிகளும் சிறப்புரை ஆற்றினார்கள்.

Thursday, November 10, 2016

ஸ்ரீ ராஜராஜ தேவர் 1031 வது சதய விழா

உலகப்புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் எழுப்பி, அனைத்து மதங்களுக்கும் பொதுவான கொடையளித்து, வரலாற்றில் இனியொருவன் வீரத்திற்காகப் பேசப்படாதபடி சோழப்பேரரசை கலிங்கம் முதல் ஈழம் வரை விரித்த மாமறவன் ஸ்ரீ ராஜராஜ தேவர் என்கிற அருண்மொழித்தேவர் பிறந்த நாள் விழா ஐப்பசி சதய நாளான நவம்பர்-09-2016 அன்று தஞ்சை மண்ணில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களும், மராட்டிய மன்னர் வழி அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களும், உதவி ஆணையர் ஜெ.பரணிதரன் அவர்களும் முன்னின்று ராஜராஜ சோழனின் 1031 வது சதய விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.