★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, July 28, 2016

தேசிய சீர்மரபினர் ஆணையம் தமிழகத்தில் ஆய்வு

தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் ( Criminal Tribes Act ) நம்மீது புகுத்தப்பட்ட நூற்றாண்டினை கடந்து விட்டோம். ஆயினும், அந்த கொடிய சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நிலத்தின் பழங்குடிகளான நம்முடைய மக்கள் இன்னமும் அவற்றிலிருந்து மீட்சி பெறாமல் பொருளாதார நலிவடைந்த  சமுகமாகவே அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.

இந்தியாவை அடிமைப்படுத்தி அரசாட்சி நிகழ்த்திய பிரித்தானிய அதிகாரிகளின் கட்டளைகளுக்கு கட்டுப்படாத; அடிமையாக இல்லாத சமூகங்களைக் கட்டுப்படுத்துவதற்காக 1871 இல் முதன்முதலாக குற்றப்பரம்பரை சட்டம் நிறைவேற்றப்பட்டது. வட இந்திய மக்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டாலும் 1911 இல் தென் இந்தியாவிற்கும்; குறிப்பாக தமிழகத்தில் பிரமலைக்கள்ளர் சமூகத்தினர்களுக்கும் புகுத்தப்பட்டது.

1920 ஆம் வருடம் இந்த சட்டத்தினை எதிர்த்து திரண்ட பிரமலைக்கள்ளர்கள் மீது பெருங்காமநல்லூர் கிராமத்தில் வைத்து துப்பாக்கிசூடு நிகழ்த்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அரசுத்தரப்பில் பதினாறு வீரமறவர்கள் என்று உறுதி செய்யப்படுள்ளது. இவர்களில் மாயாக்காள் என்கிற வீரமங்கையும் ஒருவராவார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கள்ளர் குல தெய்வங்களுக்கு தாகம் தணிக்க நீர் ஊற்றியவர்தான் அந்த தாய். இந்த கொடுமையான சட்டத்தின் காரணமாக கள்ளரின வேங்கைகள் இரவானால் காவல்நிலையத்தில் தங்க வேண்டும். கைரேகை வைத்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் காவல் நிலையத்தில் சொல்லி அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும்.

ஆங்கிலேய அரசாட்சிக்கு எதிராக வலிமையோடு போராடிய சமூகங்கள் மீதெல்லாம் இந்த குற்றப் பரம்பரைச் சட்டம் பாய்ச்சப்பட்டது. தமிழகத்தில் மட்டும் கள்ளர், மறவர், குறவர், வலையர், ஒட்டர் உள்ளிட்ட 89 சாதியினர்கள் மீது புகுத்தப்பட்டது. இதன் காரணமாக கடுமையான துயரங்களையும், வலிகளையும் அனுபவித்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஜார்ஜ் ஜோசப் போன்ற ஆளுமைகளின் தொடர் போராட்டத்தினாலும், எதிர்ப்பினாலும் குற்றப் பரம்பரை சட்டம் 1947 இல் ஆங்கிலேய அரசால் திரும்பப் பெறப்பட்டது.

முறைகேடான சட்ட வடிவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களது வாழ்வை சீரமைத்துக் கொள்வதற்கு பள்ளிகளும், நிவாரண திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. அவைகளும் சுதந்திர அரசால் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டுவிட்டன. டி‌என்‌டி என்று வழங்கப்பட்டு வந்த சாதி சான்றிதழும் டி‌என்‌சி என வழங்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து மதுரை சீர்மரபினர் நல சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருவதோடு, மத்திய – மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்து முறையிட்டு வருகின்றது. திரு.காசிமாயன் போன்ற செயற்பாட்டாளர்களின் பெருமுயற்சியின் காரணமாக 23.07.2016 அன்று தேசிய சீர்மரபினர் நல ஆணையம் தமிழகம் வந்தது.

மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய சீர்மரபினர் நல ஆணைய தலைவர் பிகு ராம்ஜி இதாதே, பழங்குடியின சீர்மரபினர் நல உறுப்பினர் ஷரவன் சிங் ரத்தோட் தலைமையிலான குழுவினர் சீர்மரபின சமூகங்களிடம் குறைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர் இந்திரவள்ளி, கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் செல்வக்குமார், உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.

தேசிய ஆணையத்தலைவர் பிகுராம்ஜி இதாதே அவர்களிடம் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மறத்தமிழர் சேனை மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சார்ந்த பல்வேறு இயக்கத்தினர்கள் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக மனுவாக அளித்தனர். மேலும், தென்இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் கே.சி.திருமாறன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், பசும்பொன் தேசிய கழகம் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தேவரின கட்சிகளைச் சார்ந்தவர்களும் மனு அளித்தனர்.

கோரிக்கை மனுக்களை பெற்ற ஆணைய தலைவர் பிகு ராம்ஜி இதாதே அவர்கள் “அனைத்து மனுக்களையும் பரிசீலித்து மத்திய அரசின் கவனத்திற்கு நிச்சயம் எடுத்துச் சென்று இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுத்தருவேன்” என்று உறுதியளித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து குழுவினர் சீர்மரபின மக்களின் வாழ்விடங்கள், பணியிடங்களை நேரில் ஆய்வு செய்திட மதுரை செல்லூர், கீரைதுறை, வெள்ளக்கல் ஆகிய பகுதிகளை சென்று பார்வையிட்டனர். குழுவினர்களுடன் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகமுடையார் அரண் மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன், சீர்மரபினர் நல சங்க நிர்வாகிகள் திருமதி. மஞ்சு கணேஷ், காசிமாயன் மற்றும் பலர் உடன் சென்றனர்.

தேசிய சீரமரபினர் ஆணையத்தின் சார்பில் இரண்டாம் நாள் ஆய்வுப்பயணம் 24.07.2016 அன்று காலை தென்பரங்குன்றம் பகுதியில் இருந்து துவங்கியது. மறத்தமிழர் சேனை, அகமுடையார் அரண், அகில இந்திய பார்வர்ட் பிளாக், சீர்மரபினர் நல சங்கம் உள்ளிட்ட இயக்கங்களின் நிர்வாகிகளும் உடனிருந்தனர். தென்பரங்குன்றம் மலையடிவாரத்தில் குடில் அமைத்து தங்கியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடம், நினைவு தூண், உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி, 58 கிராம கால்வாய் திட்ட பணிகள், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் முடித்து இரவு கோடைக்கானல் வந்தடைந்தனர்.


25.07.2016 அன்று காலை கோடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்று நாள் ஆய்வுகளிலும் மறத்தமிழர் சேனை மாநில மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் சோ.பாலமுருகன், கள்ளர் நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள் காசிமாயன், திருமதி மஞ்சு கணேஷ், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் செட்டில்மெண்ட் துரைமணி, மறத்தமிழர் சேனை மாநில மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன், மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் ஜெயராஜ், ஆந்திர டி‌என்‌டி சங்க தலைவர் சுப்பாராவ், சீர்மரபினர் நலசங்க தலைவர் டாக்டர் ஜெபமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.