★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 20, 2017

தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்

தமிழக அரசியல் களம், ஆட்சி அதிகாரம், வர்த்தகம், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அடகு தொழில்  என வெளி மாநிலத்தவர்களின் கோரப்பிடிக்குள் தமிழகம் சிக்கித்திணறி வருகிற இன்றைய சூழல்களில் மேலும் தமிழர்களின் வாழ்வியலை முடக்கும் விதமாக தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் வெளி மாநிலத்தவர்களுக்கு அரசுப்பணிகளை திறந்து விட்டிருக்கிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வில் வென்றால் போதும் என்கிறது.

தமிழகம் தவிர்த்த மற்ற மாநில அரசுகள் அனைத்தும் மொழிவழி தேசிய கருத்தியலோடு தனது இனம், தனது மொழி, தனது மக்கள், தனது நாடு என மிகச் சரியாக செயல்படுவதோடு, தமது மாநில எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய மத்திய, மாநில அரசுகளின் வேலைகளோடு தனியார் துறைகளின் வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மீதமாகி கடலிலே கலந்துகொண்டிருக்கும் நீரைக்கூட தருவதற்கு தயாராக இல்லை.

இத்தகைய சூழலில், தமிழகம் மாற்று மொழியினர்களின் வேட்டைக்காடாக தொடர்ந்து நீடித்து வருவதும், தமிழர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டிய தேர்வாணையமே உடன்போவதும் கண்டனத்துக்குரியதாகும். ஏழை எளிய மக்களை எல்லாவற்றிற்கும் வங்கிகளுக்கு இழுக்கும் நிலையில், படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு சேவை செய்வதற்கென்றே தேசிய வங்கிகளில் தமிழறியாத அலுவலர்களின் கூட்டம் நிரம்பி வழிவதும், ஆட்சிப்பணி, காவல்பணி போன்ற உயர்பதவிகளில் மாற்று மொழியினர்கள் அதிகரித்து வருவதும் கண்டு வருகிறோம். எஞ்சி மிஞ்சி நிற்கும் ஒன்றிரண்டு அரசுப்பணிகளுக்கும் ஓட்டுமொத்த தமிழ்ச் சாதியினர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற அறிவிப்புகளால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அரசுப்பணி என்பது பெருங்கனவாய் ஆக்கப்பட்டிருக்கிறது.


தமிழர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கவிருக்கும் இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தை மறத்தமிழர் சேனை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

சங்கரபதி கோட்டை வரலாற்று மீட்பில் - அரசின் மெத்தனம்

சிவகங்கை மாவட்டம் கரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் வழியில் முட்புதர்களுக்குள் சிதைந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கிறது சங்கரபதி கோட்டை. இப்போது ஆள் நடமாட்டமின்றி குடிமகன்களின் புகலிடமாக இருந்துவரக் கூடிய இக்கோட்டையானது, பல வரலாற்று வீரம் மிகுந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக நின்றுகொண்டிருப்பதை நாம் மறந்துவிட இயலாது.

பதினாராம் நூற்றாண்டைச் சார்ந்த இக்கோட்டை மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற அளவில் பெரிய தூண்களையும், கட்டிட அமைப்பையும் கொண்டதாகும். கட்டிடம் மற்றும் தூண்கள் சுடாத செங்கற்கல், கருப்பட்டி, கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை கலந்து கட்டப்பட்டுள்ளன. சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டைக்குள் குளம்போல பெரிய பள்ளம் வெட்டப்பட்டு அதற்குள் போர்ப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கு தொண்டியை சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் இருநூறு குதிரைகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த குதிரைகளை தமது படைப்பிரிவில் இணைத்து பராமரிக்க; பயிற்சி அளிக்க திறமையான ஆள் தேடினார் சேதுபதி மன்னர். குதிரைகளை பராமரிக்க ஹைதர் அலி தமது தளபதிகளில் ஒருவரான சங்கரபதியை அனுப்பி வைத்துள்ளார். அவரது நினைவாகவே அக்கோட்டையானது சங்கரபதிகோட்டை என வழங்கலாயிற்று.

மன்னர் சேதுபதி தன்னுடைய மகளான, வரலாற்று நாயகி வேலுநாச்சியார் அவர்களை சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தபொழுது சீதனமாக சங்கரபதிக் கோட்டையை வழங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திரண்ட சிவகங்கை வீரர்களுக்கு மருது சகோதரர்கள் இக்கோட்டையில் தான் வாள் பயிற்சி அளித்து வந்துள்ளனர். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கெட்டிபொம்மு நாயக்கரின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க இவ்விடத்தை பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதிக்கோட்டை தற்போது சிதிலமடைந்து இடியும் தருவாயில் இருந்து வருகிறது. இக்கோட்டையை அரசு சீரமைத்து, சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டுமென பலதரப்பட்ட மக்களும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் சங்கரபதி கோட்டையை சீரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்தார்.

இந்நிலையில் நான்காண்டுகளைக் கடந்தும் சங்கரபதி கோட்டை சீரமைக்கப்படாமல் முட்செடிகளுக்குள் முழுமையாக அழியும் நிலையிலேயே இருந்து வருகிறது. தற்போது அறிவிப்பினை வெளியிட்ட ஜெயலலிதா அவர்களும் மறைந்து விட்டார். மேலும், காலம் தாழ்த்தாமல் அறிவிக்கப்பட்ட நிதியினை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில் முட்புதர்களால் மறைக்கப்பெற்று, பராமரிப்பின்றி அழியும் நிலையில் சங்கரபதிக் கோட்டை இருந்து வருகிறது. இந்த கோட்டையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த கோட்டையானது 16-ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் போன்ற தூண்களோடு கட்டிட கலையின் அடையாளமாகவும் இருந்து வருகிறது. சேதுபதி மற்றும் சிவகங்கை ஆட்சியாளர்களின் கீழ் போர்ப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், ஆயுத கிடங்காவும் இருந்து வந்திருக்கிறது. மருதுசகோதரர்கள் சிவகங்கை படை வீரர்களுக்கு போர்பயிற்சி அளித்துவந்ததுடன், ஊமைத்துரைக்கு அடைக்கலமும் கொடுத்த மிகப்பெரிய அரணாகும்.

தற்போது, சங்கரபதிக்கோட்டையானது முற்றிலும் அழிந்து போகும் நிலையில் இருந்து வருகிறது. தேவர் சமூகத்தை சார்ந்தவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த கோட்டையை சீரமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் அப்போதைய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் இந்த கோட்டையை சீரமைக்க கோரிக்கை விடுத்தார்.

14.05.013 அன்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் சங்கரபதிக் கோட்டையை சீரமைக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்து ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது வரை வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்டையானது சீரமைக்கப்படாமல் சிதைந்துகொண்டே வருகிறது.

ஆகவே, தாங்கள் இதனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட நிதியினை உடனே ஒதுக்கீடு செய்து கோட்டையை புனரமைப்பு செய்திடவும், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு செய்துடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அன்புடன் கோருகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.