★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, June 26, 2012

மன்னர் முத்துவடுகநாதத் தேவர் 240 வது நினைவுநாள் விழா

வானமே வசப்படினும், மானமே பெரிதென வாழும் மறத்தமிழர் கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனையின் வீரவணக்கம்.

சிவகங்கை சீமை ஆண்ட வீரமறவன் மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவர், கௌரி நாச்சியார் அவர்களின் 240 வது நினைவுநாள் விழா 25-06-2012 அன்று மாலை 4.00 மணியளவில் காளையார்கோவில் மன்னர் மாலையீடில் நடைபெற்றது. 

சங்க கால இலக்கியங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு எங்கள் சிவகங்கை சீமை மண்ணில் வெளிப்பட்டது.

இந்த வீரத்திருமகனின் வாழ்க்கையே , தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில், இலக்கியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை நிரூபணமாக்கியது.

மறத்தமிழர் சேனையை கட்டமைத்து ‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு, 240 வது நாளான இன்று (25-06-2012) மாலை 4.50 மணியளவில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


எதிர்வரும் காலங்களில் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் புகழை இளைஞர்களிடம் எடுத்துசெல்லும் விதமாக; மன்னரது வீரவரலாற்றை மாணவர்களிடம் பரப்பும் விதமாக இந்நிகழ்வை மிகப்பிரமாண்டமாக நடத்துவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

Tuesday, June 19, 2012

சேதுபதி தேசிய நெடுஞ்சாலை பெயர்ப்பலகை நீக்கம்

இராமநாதபுரம் பசும்பொன் நகர் சாலை விலக்கிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49 க்கு "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை" என்கிற பெயரை மத்திய அரசு சூட்டியது. இது அவர்களே வலிய சூட்டியதில்லை. பாம்பன் பாலம் கட்டிய தருணத்தில் அந்தபாலத்திற்கு இராமநாதபுரம் மன்னர்கள் சேதுபதி பெயர் சூட்ட தமிழ்நாடு தேவர் பேரவை கோரிக்கை வைத்தது. அதனை மறுத்து இந்திராகாந்தி பெயர் வைக்க முயற்சி மேற்கொண்டனர். இதனை கடுமையாக எதிர்த்த தேவர்களுக்கு அஞ்சி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாலம் திறக்கும் தேதியை தள்ளிவைத்து சமாதானம் பேச முற்பட்டதன் விளைவாக அந்த சாலைக்கு சேதுபதி பெயரும் பாலத்திற்கு இந்திராகாந்தி பெயரும் வைக்கப்பட்டது.
தற்போது தேசிய நெடுஞ்சாலையில் "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை எல்கை ஆரம்பம்" என்கிற பெயர் பலகையை நெடுஞ்சாலை துறையினர் நீக்கியுள்ளனர். இதனை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மறத்தமிழர் சேனையின் சார்பாக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து தேவர்களின் அடையாளங்களை அழிக்க முற்படும் மத்திய அரசை கண்டித்து போராட்டகளம் புக தயாராக இருங்கள்.
 
 
 

Monday, June 18, 2012

அகில இந்திய பார்வர்டு பிளாக் - மறத்தமிழர் சேனை சந்திப்பு


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக இலங்கை பயணம் மேற்கொண்டு, போரினால் காயம்பட்ட ஈழ மக்களை சந்தித்து ஆறுதல்கூறி, கள ஆய்வு நடத்தி அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை கண்டறிந்து இன்று (16-06-2012) காலை தாயகம் திரும்பிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமாகிய அண்ணன் P.V.கதிரவன் அவர்களை இன்று மாலை மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சந்தித்து நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் மாநில தொண்டர்சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள்.

மறத்தமிழர் சேனை கொடி விளக்கம்.

கொடியிலே இடம்பெற்றுள்ள சிவப்பு நிறம் நம் முன்னோர்களின் தியாகத்தையும், போரினால் இழந்த குருதியையும் நினைவு படுத்தும். மனிதன் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் கீழ்நோக்கி மண்ணிலே விழுகின்றன என்பதால் கொடியின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்தில் உள்ளது. மஞ்சள் நிறம் குருதி இழந்து நாம் அடையும் வெற்றியை குறிக்கும். வெற்றி க்கான , மங்களகரமான நிறம் மஞ்சள் , நாம் அடைந்த வெற்றியின் பயனாக ஏற்றப்படும் கொடியானது மேல்நோக்கியே ஏற்றப்படும். ஆகவே கொடியின் மேல்பகுதி மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவில் அமைக்கப்பட்டுள்ள வில், அம்பு, புலி மூவேந்தர்களையும், மூவேந்தர்களின் வழித்தோன்றல் நாம் என்பதையும் நினைவு படுத்தும் வகையிலே நமது கொடி அமைக்கப்பெற்றது.

மூவேந்தர்களாகவும் , மூவேந்தர்களின் படை மரபினர்களாகவும் வாழ்ந்த நம் முன்னோர்கள் போரும் , போர் நிமித்தமான வாழ்வுமாக இந்த உலகிலே நடமாடியவர்கள். அவர்கள் எந்த நிழையிலும் உலவுத்தொழிலை செய்தவர்கள் அல்ல. எனவேதான் நம் கொடியில் பச்சை நிறம் இடம்பெறவில்லை. மறத்தமிழர் சேனை கொடிக்கான விளக்கம் இதுவே, இந்த பதிவை வாசித்த, நேசித்த, துவேசித்த உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்.

Thursday, June 14, 2012

தொண்டி நகரம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை

தமிழ்நாட்டுப் பண்டை நகரங்களுள் ஒன்றாகிய தொண்டியின் வரலாறு தமிழ்நாகரிகத்தின் தொன்மைக்கு ஓர் அறிகுறி. இந்தப் பெயரை அறியாதவர்கள் மிகச் சிலரே. இராமநாதபுரம் ஜில்லாவில் இராமநாதபுரத்திற்குச் சில மைல் தூரத்தில் தொண்டி என்னும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. அதைத்தான் நம்மவர் சிலர் கேட்டிருக்கலாம். அதற்கு மிகமிக முற்பட்டு, சுமார் 2000 வருஷங்களுக்கு முன், சிறந்து விளங்கிய தொண்டி என்ற நகரம் ஒன்று மேல்கடற் கரையிலே இருந்தது. சேரனுக்குரிய ஒரு கடற்கரை பட்டினமாக இது விளங்கியது. இந்தப் பட்டினம் தமிழுலகில் மட்டும் பெருமை பெற்றிருந்தது அன்று. எகிப்திய கிரேக்கனொருவன் எழுதிய பெரிப்ளூஸ் என்ற பிரயாண நூலில் இந்நகரத்தைக் குறித்திருக்கிறான். இந்நூல் தோன்றிய காலம் சுமார் கி.பி.60. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று டாக்டர் ஷாவ் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில், தொண்டி கேரளபுத்திர ராஜ்யத்தைச் சார்ந்த மிகப் பிரசித்தி பெற்ற பட்டினம் என்றும், முசிறிப் பட்டினத்திற்கு 500 ஸ்டேடியா (சுமார் 57 1/2 மைல்) தூரத்தில் கடற்கு அருகில் தனிப்பட்ட சிறப்புடன் விளங்கி நின்றது என்றும், இரண்டு பட்டினங்களையும் இணைத்து ஓர் ஆறு ஓடியதென்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.