சிவகங்கை சீமை ஆண்ட வீரமறவன் மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவர், கௌரி நாச்சியார் அவர்களின் 240 வது நினைவுநாள் விழா 25-06-2012 அன்று மாலை 4.00 மணியளவில் காளையார்கோவில் மன்னர் மாலையீடில் நடைபெற்றது.
சங்க கால இலக்கியங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு எங்கள் சிவகங்கை சீமை மண்ணில் வெளிப்பட்டது.
இந்த வீரத்திருமகனின் வாழ்க்கையே , தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில், இலக்கியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை நிரூபணமாக்கியது.
மறத்தமிழர் சேனையை கட்டமைத்து ‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு, 240 வது நாளான இன்று (25-06-2012) மாலை 4.50 மணியளவில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
எதிர்வரும் காலங்களில் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் புகழை இளைஞர்களிடம் எடுத்துசெல்லும் விதமாக; மன்னரது வீரவரலாற்றை மாணவர்களிடம் பரப்பும் விதமாக இந்நிகழ்வை மிகப்பிரமாண்டமாக நடத்துவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.