அகில இந்திய
பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டமும், இராமநாதபுரம் மாவட்ட அரசியல் ஆலோசனை கூட்டமும் 03-07-2012
அன்று கமுதி தேவர் மகாலில்
மாலை 03.00 மணியளவில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் P.V.கதிரவன் M.L.A
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மறத்தமிழர் சேனையின்
மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பார்வர்ட் பிளாக் மாநில தலைவர்
M.K.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில தலைமைசெயற்குழு உறுப்பினர்கள்
R.மாயத்தேவன், திருப்பூர் ராஜசேகர், திண்டுக்கல் ஜெயராமன், கமுதி ராஜேஸ்வரன், முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநில தொழிலாளர் அணிச்செயலாளர் ஆனந்தமுருகன் இராமநாதபுரம் மறவர் முன்னேற்ற
சங்கம் தலைவர் முத்துப்பாண்டி, செல்வக்குமார், தெளிச்சாத்தநல்லூர் மாரிசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கமுதி கோட்டைமேட்டில் அமைந்துள்ள தெய்வீகத்திருமகன்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எவ்வித வளர்ச்சியுமின்றி இருப்பதால் உடனடியாக
அரசு தலையிட்டு I.A.S அளவில் நிர்வாக அதிகாரியை நியமித்து பல்வேறு சிறப்பு பாடபிரிவுகள்
மற்றும் கட்டிடம் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறத்தமிழர் சேனை
மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் “பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர் அவர்களாலும், வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்
அவர்களாலும் வழிநடத்தப்பட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியானது, தேவர் தந்த தேவர் P.K.மூக்கையாத் தேவர் அவர்களுக்குப்
பிறகு ஒரு திறமையான, வலிமையான தலைவர் இன்றி திணறிவருகிறது. அதன்
காரணமாக தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியான பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டி
தொகுதிக்குள் மட்டுமாக முடங்கி போய்விட்டது. இந்நிலை மாறவேண்டுமெனில் அந்தந்த பகுதிக்கான
அரசியலை முன்னெடுக்க வேண்டும். விரிவான செயல்திட்டமும், செயல்
படுத்துவதற்கு ஆனந்தமுருகனைப் போன்ற தன்னலமில்லா போராளிகளையும் உருவாக்க வேண்டும்.
வலுவான போராட்டங்களும், முறையான நடைமுறை விதிகளும் பின்பற்றப்படாத
எந்த இயக்கமும் பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு பார்வர்ட் பிளாக் முன்னுதாரணம் ஆகிவிட்டது.
தற்பொழுது திரு கதிரவன் அவர்கள் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
ஆளும் கூட்டணி அரசிலும் அங்கம் வகிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக முதல்வரிடம் நம்
இனம் சார்ந்த, நலன் சார்ந்த முக்கியமான முடிவுகளில் ஒப்புதல்
வாங்கிவிடலாம். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அவர்களின் திருநாமத்தை சூட்ட
வலியுறுத்தி கடந்த 20 வருடங்களாக போராடிவருகிறோம். தமிழக அரசிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவேயில்லை.
ஆனால் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தாமலே இம்மானுவேலுவின் சமாதிக்கு 2.60 கோடி பணத்தை
பொதுப்பணித்துறை மூலமாக பெற்றுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட அரசாணையின்
மூலமாக, சேதுபதிசீமையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின்
சிலை அமைக்கப்பட்டு விடும் என்கிற நம்பிக்கையில் மண் விழுந்ததுதான் முக்கியம்.
இன்றைய தமிழக அரசு
நமது உரிமைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. உண்மையான தியாகிகளுக்கு மதிப்பளிக்கப் போவதுமில்லை.
ஆக இந்த குள்ளநரித்தனங்களை தட்டிக்கேட்கும் இடத்திலே இருக்கக்கூடிய தாங்கள் தான் இதனை
சீர்செய்திட வேண்டும். அப்படி செய்கின்ற பொழுதில் இந்த இயக்கம் தானாகவே வலுப்படத் தொடங்கும்
என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.