★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, April 27, 2012

இந்தியக் குழுவின் சுற்றுலாப் பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம்

அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்காவிற்கு பயணத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் மகிந்தாவின் அமைச்சர்களையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளையும் கேட்டுத்தான் மூச்சுக்கூட விடுகிறார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள்.
இந்தியக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து இடங்களும் இதற்காகவே முன்னரே தயார் செய்யப்பட்டவை. என்ன பேச வேண்டும் என்கிற பாடம் எடுத்த பின்னரே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் மட்டுமே இந்தியக் குழுவினருடன் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

Monday, April 23, 2012

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை நிறுவ வேண்டும்

சுதந்திர போராட்ட வீரரும்,  இராமநாதபுரம்  மாமன்னருமாகிய  ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருவுருவ சிலையை   இராமநாதபுரத்தில் அமைக்க வேண்டும்





Tuesday, April 17, 2012

தமிழ்நாட்டில் கல்வித்துறை சீர்கேடு அடைந்துள்ளது

தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை. 

Monday, April 16, 2012

மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

மறத்தமிழர் சேனையின்  மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா நமது அமைப்பின் மூலம் வெகுவிமரிசையாக கொண்டாடப் படுகிறது. பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.


Friday, April 13, 2012

கச்சத் தீவு மீட்க R.சரத்குமார் - புதுமலர் பிரபாகரன் சந்திப்பு

கி.பி. 1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும். அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள்ளன, இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

இந்தத்  தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு என்பது. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது. இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3,75 சதுர மைல். அவ்வளவுதான்.  உள்ள கச்சத்தீவை சுற்றிய கடற்பகுதி, மீன் வளம் நிறைந்தது. சேதுபதி மன்னர்களின் சொத்தான கச்சத்தீவு சுமார் 350 மீட்டர் அகலமும், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. மொத்த பரப்பளவு 285 ஏக்கர். கச்சன்- கச்சம் என கடல் ஆமையை அழைப்பார்கள். இந்தத் தீவில் ஒரு காலத்தில் ஆமைகள் அதிக அளவில் வசித்ததால், இதைக் கச்சத்தீவு என்று அழைக்கின்றனர்.


குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய 8 தீவுகளும்,  69 கடற்கரை ஊர்களும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத்தீவு.
 தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

   இந்தத் தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமாக இருந்தன. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னருக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன. 1947 இல் நாடு விடுதலை அடைந்ததும், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் வந்தது. அதனால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது. சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக் குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த மருத்துவத்திற்குப் பயன்படும் மூலிகைகளின் சோலை வனமாகவும் இருந்தது. இராமநாதபுரம் மக்கள் உமிரி என்ற செடிவகையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக நம்பினர். அத்துடன் சாயவேர் போன்ற வேர் வகைகளும் பயன்பட்டன.

இந்தத் தீவுக்குச் சென்று இந்த மூலிகைகளைக் கொண்டு வருவதையே தொழிலாகச் சோழ மண்டல மரக்காயர்கள் கொண்டிருந்தனர். இங்கே, முத்துக் குளிக்கவும், மூலிகைகளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெறவேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளார்.

1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல் புனித அந்தோணியார் ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்… ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு,       “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனர். அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.
இதைச் சொந்தம் கொண்டாட இலங்கை அரசு கடந்த 100 ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆனால், இந்தத் தீவு ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர் பரம்பரையினருக்கு உரியது.  இந்தியாவின் கிழக்குக் கடலோரத்தில் பாக் நீரிணைப்பில் உள்ள கச்சத்தீவு, தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.


இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார். ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.

 “கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், இலங்கை கடற்படையை கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில்  கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபதி மன்னர்களின் பரம்பரை சொத்தான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பேசிவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமார் அவர்களை மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tuesday, April 10, 2012

மதுரை அமெரிக்கன் கல்லூரியை இழுத்துப் பூட்டினர்

மதுரை அமெரிக்கன் கல்லூரியை இழுத்துப் பூட்டினர்





கல்லூரி முற்றுகை போராட்டம்

Monday, April 2, 2012

நான் ஒரு குற்றப் பரம்பரையினன் . . .

                          நான் ஒரு குற்றப் பரம்பரையினன் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால் இந்த சட்டம்தான் எங்களின் எதிர்ப்பு அரசியலின் வீரத்தையும், விவேகத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வருகின்ற ஏப்ரல்-03 அன்று பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு நாள்.

                          இயற்கையின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக, பழங்குடிகளில் ஒன்றான பிரமலைக் கள்ளர் இனத்தின் மீது சுரண்டல்களின் ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததிலிருந்து, ஆண்ட பரம்பரையின் ஆளுமை வேகத்தை அடக்கி வைப்பதற்காக சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம்.

                         
                              காடுகட்டி நாடாண்ட கள்ளர்கள் கைநாட்டு வைப்பதா ? அகிலம் ஆண்ட நம் மீது கரும்புள்ளி வைத்திட, வந்தேறிக் கூட்டத்தின் வழிகாட்டுதலின் படி, வியாபார நோக்கில் வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கொண்டு வந்த  குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, மானத்தைக் காக்க மரணத்தை முத்தமிட்ட பெருங்காமநல்லூர்  மாமறவர்கள் 17 பேர்களையும்  வணங்கி, வீர வணக்கம் செலுத்துவோம்.

                                20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலக அரசியல் அரங்கில் ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்படும் நிலை வந்தது. நாட்டுப் பற்றுடன் அரசாங்கத்தை எதிரியாக நினைத்து சட்டங்களையும் அதிகாரங்களையும் வெறுத்து வரும் தன்னரசு பற்றுதல் கொண்ட மானமுள்ள மறத்தமிழர் சேனைக் கூட்டங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சட்டப் பூர்வமாக ஒடுக்கி வைத்திருக்க முற்பட்டனர்.

                    அதன் காரணமாகவே இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தூர் முதலிய இடங்களில் ரேகைச் சட்ட அமுல் பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய தமிழீழம் முள்வேலி முகாம்களைப் போல 1930 களில் 1,35,000 பேர்  கைரேகைகள் பதியப்பட்டு தடுப்புக் காவலில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் காங்கிரசும், திராவிட இயக்கத்தினரும் அதிகாரத்திற்காக ஆங்கிலேயரிடம் கை கட்டி நின்றுகொண்டிருந்தனர்.