★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, April 2, 2012

நான் ஒரு குற்றப் பரம்பரையினன் . . .

                          நான் ஒரு குற்றப் பரம்பரையினன் என்று மார்தட்டிச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். ஏனென்றால் இந்த சட்டம்தான் எங்களின் எதிர்ப்பு அரசியலின் வீரத்தையும், விவேகத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தியது. வருகின்ற ஏப்ரல்-03 அன்று பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு நினைவு நாள்.

                          இயற்கையின் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த சமூக, பழங்குடிகளில் ஒன்றான பிரமலைக் கள்ளர் இனத்தின் மீது சுரண்டல்களின் ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்ததிலிருந்து, ஆண்ட பரம்பரையின் ஆளுமை வேகத்தை அடக்கி வைப்பதற்காக சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குற்றப்பரம்பரைச் சட்டம்.

                         
                              காடுகட்டி நாடாண்ட கள்ளர்கள் கைநாட்டு வைப்பதா ? அகிலம் ஆண்ட நம் மீது கரும்புள்ளி வைத்திட, வந்தேறிக் கூட்டத்தின் வழிகாட்டுதலின் படி, வியாபார நோக்கில் வந்து நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையன் கொண்டு வந்த  குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, மானத்தைக் காக்க மரணத்தை முத்தமிட்ட பெருங்காமநல்லூர்  மாமறவர்கள் 17 பேர்களையும்  வணங்கி, வீர வணக்கம் செலுத்துவோம்.

                                20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, உலக அரசியல் அரங்கில் ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்படும் நிலை வந்தது. நாட்டுப் பற்றுடன் அரசாங்கத்தை எதிரியாக நினைத்து சட்டங்களையும் அதிகாரங்களையும் வெறுத்து வரும் தன்னரசு பற்றுதல் கொண்ட மானமுள்ள மறத்தமிழர் சேனைக் கூட்டங்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சட்டப் பூர்வமாக ஒடுக்கி வைத்திருக்க முற்பட்டனர்.

                    அதன் காரணமாகவே இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தூர் முதலிய இடங்களில் ரேகைச் சட்ட அமுல் பிரகடனம் செய்யப்பட்டது. இன்றைய தமிழீழம் முள்வேலி முகாம்களைப் போல 1930 களில் 1,35,000 பேர்  கைரேகைகள் பதியப்பட்டு தடுப்புக் காவலில் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் காங்கிரசும், திராவிட இயக்கத்தினரும் அதிகாரத்திற்காக ஆங்கிலேயரிடம் கை கட்டி நின்றுகொண்டிருந்தனர்.