★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, June 24, 2016

கொடி வழி - புதுமலர் பிரபாகரன் குடும்ப மரம்

                     எனது கொடிவழி : முன்னவர் வேர்களைப் பற்றியது.

வாழையடி வாழையென வாழ்கவென பெரியவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். அதன் உள்அர்த்தங்களை அறிந்து கொள்ளும் முனைப்பின்றி கடந்து செல்பவர்களே அநேகம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தலைமுறைகளின் வரலாறு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நாகரீக உலகத்தின் அடையாளம் என்று பெற்ற தாய், தந்தையை கூட ஒதுக்கிவிட்டு தனிக்குடித்தனமாக வாழத் துவங்கிவிட்ட இன்றைய சூழலில் தலைமுறைகளின் வாழ்வியலும், அவர்களது கிளை உறவுகளும் தேவையற்ற சுமையாகிப் போனதில் வியப்பில்லை. குடும்ப விழாக்களுக்கு பெயர் போட்டு அச்சடித்து வரும் நிறைய பெரியவர்கள் தனது உறவுமுறை சொல்லி உங்க அய்யாவுக்கு தெரியும். உங்களுக்கு எங்க தெரியப்போகுது. வந்தா போனாத்தானே தெரியும் என நொந்து கொள்வார்கள். காரைக்குடி பகுதி செட்டியார்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் பத்து பதினைந்து தலைமுறைப் பெயர்களைச் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.

நாம் அத்தகைய எவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை என்பதைவிட அறிந்துகொள்வது கூட இல்லை. நம்முடைய பேரனுக்குப் பேரன் நம்மை அறிந்திருக்க மாட்டான் என்பது எவ்வளவு கொடுமையானதோ, அதற்கு இணையானது நாம் நமது முன்னோர்களை அறிந்திராமல் வாழ்வது. இன்றைய நாட்களில் ஒன்றிரண்டு தலைமுறை முன்னோர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் நபர்கள் மிகக்குறைவே. எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிவிட்ட நிலையிலும், எனது சொந்த கிராமத்தினர் கணேசத்தேவர் பேரன் என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். நீதிமன்றங்களிலே உரக்கச் சொல்வது போல நாகுத்தேவர் வகையறா என்றுதான் பேசுகிறார்கள். ஆக, நானென்பது நானல்ல இந்த வகையறாக்கள் தான் நான்! இவர்கள்தான் எனது ஆணிவேர். இவர்களது பழமையும், பெருமையும், குடும்ப முறைகளும் எனது குருதியிலே பதிந்து கிடக்கிறது.

Friday, June 17, 2016

முத்துவடுகநாதத் தேவர் 244 வது வீரவணக்க விழா அழைப்பு

சின்ன மறவர் நாடு, சிவகங்கை சீமை அரசாண்ட இரண்டாவது மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்களும், இளைய இராணி கெளரி நாச்சியார் அவர்களும் 1772 ஆம் ஆண்டு காளையார் கோவிலில் நடந்த போரில் நயவஞ்சகமாக ஆங்கிலேய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது நினைவு நாள் வீரவணக்க நாளாக ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், முக்குலத்தோர் கட்சித்தலைவர்கள், முக்குலத்தோர் அமைப்புகள், மறவர் அமைப்புகள் மற்றும் மன்னர் வம்சா வழியினர் பங்கேற்று விழாவினை சிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது 25.06.2016 அன்று காலை பத்து மணி முதல் மாலை வரை மன்னரது 244 -ஆவது ஆண்டு வீரவணக்க நாள் விழா காளையார் கோவிலில் அமைந்துள்ள முத்துவடுகநாத தேவர் மாலையீட்டில் நடைபெற உள்ளது.

Sunday, June 12, 2016

இராமலிங்க விலாசம் அரண்மனை

லகப்புகழ் பெற்ற போர் மரபினர்களில் முதன்மையானவர்கள் மறவர்கள் ஆவர். போரெனில் புகழும் புனைகழல் மறவர் கூட்டமென்று புறநானூறு பாடியது. தனக்குதானே தந்தலை கொய்து மன்னவர் மண்காக்க உயிரைக் கொடையாக தந்து நடுகல் ஆகிப்போன வீரமறவர்கள் ஏராளம். மறத்தமிழர் சேனை வந்தால் மண் சிவக்கும், பகைவர் குருதி தெறிக்கும்; சென்ற இடமெல்லாம் செருக்களம் அமைத்து வெற்றியை மட்டுமே வென்ற இனமாகிப் போன மறவர்களில் ஒரு பிரிவினரான செம்பிய நாட்டு மறவர்கள் அரசாண்ட சீமையாம் பெரிய மறவர் நாட்டின் தலைநகராக முதலில் விரையாதகண்டன் என்கிற ஊரும், பின்பு புகழுர் என்கிற இன்றைய போகலூர் கிராமமும் இருந்து வந்திருக்கிறது.

கி.பி.1678 ஆம் ஆண்டு முதல் 1710 வரை அரசாண்ட ஏழாவது மன்னராகிய கிழவன் சேதுபதி என்று வரலாறு போற்றுகிற இரகுநாத சேதுபதி தன்னுடைய தலைநகரை இராமநாதபுரத்திற்கு மாற்றி பாண்டியர்கள் காலத்திலே கட்டப்பட்டு சிதைவடைந்திருந்த மண்கோட்டையை அகற்றிவிட்டு, செவ்வக வடிவில் பலமான கற்கோட்டையாக அரண்மனையை எழுப்பியிருக்கிறார். 

Saturday, June 11, 2016

புத்தர் சிலை : புதிய வரலாற்று சான்று

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை அங்குள்ள வயல் வரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் ஏற்கனவே இராமேஸ்வரம் அரியான்குண்டு பகுதியிலும், திருவாடானை அருகே மணிகண்டியிலும், சுந்தரபாண்டியன்பட்டினத்தில் உள்ள சிவன் கோயிலிலும், கிடைத்துள்ளன. இலங்கையின் தொடர்பால் இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் புத்த மதம் செழித்து இருந்ததாக கூறப்பட்டாலும் அதற்கான தடயங்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. ஏற்கனவே கிடைத்த  சிலைகளும் கடலோரப்பகுதிகளில் கிடைத்துள்ள நிலையில் இச்சிலை மாவட்டத்தின் உள்பகுதியில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

ஐந்தடி உயரம் உள்ள இச்சிற்பத்தில் புத்தர்  அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளார். இதன் கீழ்பகுதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. மார்பில் சீரை என்ற மேலாடையையும், இடுப்பில் ஆடையையும் அணிந்து நீண்ட காதுகளுடன் காணப்படுகிறார். அவர் கையில் உள்ள தர்மச் சக்கரமும், தலையில் உள்ள சுருள்முடியும் சிதைந்த நிலையில் உள்ளன. சுருள்முடிக்கு மேல்  தீச்சுடர் காணப்படுகிறது.  அதில் துளை உள்ளது. இது நவரத்தினக் கற்கள் பதிப்பதற்காக உருவாக்கப் பட்டிருக்கலாம். புன்னகை புரியும் இதழ்களுடன் மிக அழகாக  சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 8, 2016

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் மூன்று

                                                        -புதுமலர் பிரபாகரன் 

“சுதந்திரமானது இன்னும் களத்தடி நெல்லாகவே இருக்கிறது. கருக்காய், கரும்புழுதி, இடையிடையே வைக்கோல், செத்தையெல்லாம் நிரம்பியதாகவே இருக்கிறது. இது அப்படியே களஞ்சியத்திற்கு போய் சேருமா? சேராது. சேரக்கூடாது. காலம் வரும்போது காற்றில் தூற்றி கழிக்க வேண்டியவற்றைத் தானாகவே கழித்து விட வேண்டும்.”
                   -தேவர் திருமகனார்.

 உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்கிற பெருமிதங்களுக்கு மத்தியில் சுதந்திர இந்தியாவில் பிறந்திருந்தும், மக்கள் செல்வாக்கு அமைந்திருந்தும் தம் வாழ்நாள் முடிவதற்குள் ஒருமுறையேனும் சட்டமன்ற: நாடாளுமன்ற அவைகளுக்குள் நுழைந்து விட முடியாதா என்கிற ஏக்கத்துடன் தமது அரசியல்  சுதந்திரத்தின் எல்லை குறித்த எவ்வித விவாதமுமின்றி கடந்து செல்லும் தலித்துகள் அல்லாத 83சதவிகித இந்திய பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களும்,  கிருத்துவ, முஸ்லீம் சிறுபான்மை மக்களும் மிகக்சரியாக தமது எதிர்கால அரசியல் குறித்த பார்வைகளை / உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. 
        இந்திய அரசியலமைப்பை ஒருங்கிணைத்த அம்பேத்கார்கூட தனித்தொகுதி ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். அடிமை இந்தியாவில் முஸ்லீம்கள் கிருத்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் தலித்துகள் என அனைவருக்குமே இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டன. கால நீட்சியில் அவை ஒவ்வொன்றாக நீக்கப்பட்டுவிட்டன. ஆனால், சுதந்திர இந்தியாவில் சகல அறங்களையும் துடைத்துவிட்டு தலித்துகளுக்கு மட்டுமே இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
        தலித் என்கிற அடையாளத்தின் பிறிதொரு முகமாக நிரந்தர வாய்ப்புகள் என்பது வலுவாக கட்டமைக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களும் எஸ்.சி./எஸ்.டி ஊழியர்களால் நிரம்பி வழியும் இன்றைய சூழலிலும், அரசியலில் முழுமையான ஆதிக்கசக்தியாக தலித்துகள்  மாறிவிட்ட நிலையிலும்   தனித்தொகுதி அரசியல் நீக்கப்படாமல், காலநீட்டிப்பு செய்யப்பட்டு நூற்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. அதனினும் கொடுமையாக பல தொகுதிகள்  தொடர்ந்து 53 வருடங்களுக்கும் மேலாக தனித் தொகுதிகளாகவே இருந்து வருவதும், அவை மீண்டும் மீண்டும் பொதுத்தொகுதிகளாக மாற்றப்படாமல் தனித்தொகுதிகளாகவே நீட்டித்து வரப்படுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் இரண்டு

                                               -புதுமலர் பிரபாகரன் 

“கொள்கை புனிதமாக இருந்தால் மட்டும் போதாது; அதற்கான வேலைத்திட்டமும் தூய்மையானதாக இருக்க வேண்டும்”
        –மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இந்திய அரசியல் சூழலுக்குள் சிக்கித் திணறும் தமிழக பெரும்பான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை பறித்துவரும் தனித்தொகுதிகளின் பரிணாம வளர்ச்சியானது ஆங்கிலேய சுரண்டல் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து பிறப்பெடுத்த வறட்டுவளர்ச்சி சிந்தனையாகும்.

தமிழ் மண்ணில் சுதந்திரமாக ஆட்சி செலுத்திய அரசர்கள் ஆலயங்களுக்கும், அந்தணர்களுக்கும் கணக்கற்ற கொடைகளை வழங்கிட, ஏனைய தமிழ்ச்சாதியினர் உற்பத்தி, வணிகத்தில் தன்னிறைவாக செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். கால ஓட்டத்தில் மதத்தால் வேறுபட்ட நவாபுகள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட பிராமணர்கள் வருமானத்திற்கான மாற்று வழி தேடலாயினர்.
ஆங்கிலத்தை நீச மொழி யென்று விமர்சித்து வந்திருந்த நிலையில், கடுமையான உடல் உழைப்பின்றி மாத ஊதியம் பெறும் புதிய ஊழிய வர்க்கத்தின் துவக்கம் அறிந்து, ஆங்கிலம் கற்று ஆங்கிலேயர்களுக்கு தொண்டு புரியலாயினர். இதே ஊழியத்தில் வேளாளர், முதலியார் சாதிகளும் முன்னணியில் இருந்தன. ஆங்கிலேய உற்பத்தியின் விற்பனை சந்தையாக தமிழகம் மாறிய போது, இங்குள்ளவர்களின் பொருளாதாரம் நசிவடைந்து வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. கொஞ்சம் காலந்தாழ்ந்து ஆங்கிலம் கற்கவும் வேலையில் சேரவும் மற்ற சமூகங்களும் முற்பட்டபோது பிராமணர்களின் ஆதிக்கம் அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆகவே மற்ற சமூகங்கள் பகைமை கொண்டதோடு பிராமணர்களின் ஆதிக்கத்தை அடக்கவும், முடக்கவும் அனைத்து வகைகளிலும் போராடி வந்தன.

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் ஒன்று

                                  -புதுமலர் பிரபாகரன்    
                       
                         மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
                      பழித்தது ஒழித்து விடின்  –குறள்

       லகிலேயே மக்களாட்சி நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா ஆகுமென பள்ளிப்பருவம் முதல் பாடத்திட்டம் வாயிலாக நமக்குள் புகுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை அதுவாக இல்லாமல் வாக்களிக்க மட்டுமே உரிமையுள்ள குடிமகன்களாக அரைநூற்றாண்டு காலம் நம்மை புறக்கணிக்கும் வரலாற்று சூதுகளின் துவக்கத்தையும் அறியவேண்டியது அவசியமாகிறது. பல்வேறு மொழி, மதம், நாகரிகம், பண்பாடு, வரலாறு, பழக்கவழக்கங்கள் கொண்ட ஒன்றோடொன்று தொடர்பில்லாத பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்தியா என்கிற நாடு கட்டமைக்கப்பட்ட வழித்தடம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல பல வேடிக்கைகளும் நிறைந்தது ஆகும்.


       இந்தியப் பெருநாடு மண்வளம், தட்ப-வெப்பநிலை, உணவுமுறை, கலாச்சாரம், வழிபாடு, தெய்வநம்பிக்கை ஆகியவைகளில் பெருமாறுதல் கொண்ட சிறிய, பெரிய தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தநிலையில், பழங்காலந்தொட்டு இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்நிய படையெடுப்பு, பண்பாட்டு தாக்குதல்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியின் கீழ்தான் ஒரே ஆட்சிக்குட்பட்ட நாடாக இந்தியா உருப்பெற்றது. ஆங்கிலேய கொடுங்கோலாட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்ட காலங்களில்  இது ஒரே நாடு நாம் ஒரே மக்கள் என்கிற எண்ணம் தொடர் போராட்டங்களால் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டது.


Tuesday, June 7, 2016

maraththamizhar senai state organizer pudhumalar prabhakaran visiting card

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் வரவேற்பு அட்டை. (புதுமலர் பிரபாகரன் விசிட்டிங் கார்ட்) பயன்பாட்டாளர்களுக்காக......


புதுமலர் பிரபாகரன் முகவரி

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின்  முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்.

சு.புதுமலர் பிரபாகரன், முதுகலை., ஆய்வியல் நிறைஞர்., (வரலாறு)
மாநில அமைப்பாளர்,
மறத்தமிழர் சேனை,
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர்,
பரமக்குடி- 623707.
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழர் நாடு.
அகவி : 99421 33644, 99521 33644.

pudhumalar prabhakaran address

maraththamizhar senai state organizer pudhumalar prabhakaran address.

S.Pudhumalar Prabhakaran, M.A., M.Phil., (History)
State Organizer,
Maraththamizhar Senai,
12/338, Thiruvarangam Salai,
Nethaji Nagar,
Paramakudi- 623707.
Ramanathapuram -District,
Thamizhar Nadu.
Cell No: 99421 33644, 99521 33644.