★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, June 8, 2016

தனித்தொகுதிகள் துயரத்தின் நிழல் - பாகம் ஒன்று

                                  -புதுமலர் பிரபாகரன்    
                       
                         மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
                      பழித்தது ஒழித்து விடின்  –குறள்

       லகிலேயே மக்களாட்சி நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா ஆகுமென பள்ளிப்பருவம் முதல் பாடத்திட்டம் வாயிலாக நமக்குள் புகுத்தப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை அதுவாக இல்லாமல் வாக்களிக்க மட்டுமே உரிமையுள்ள குடிமகன்களாக அரைநூற்றாண்டு காலம் நம்மை புறக்கணிக்கும் வரலாற்று சூதுகளின் துவக்கத்தையும் அறியவேண்டியது அவசியமாகிறது. பல்வேறு மொழி, மதம், நாகரிகம், பண்பாடு, வரலாறு, பழக்கவழக்கங்கள் கொண்ட ஒன்றோடொன்று தொடர்பில்லாத பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்தியா என்கிற நாடு கட்டமைக்கப்பட்ட வழித்தடம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல பல வேடிக்கைகளும் நிறைந்தது ஆகும்.


       இந்தியப் பெருநாடு மண்வளம், தட்ப-வெப்பநிலை, உணவுமுறை, கலாச்சாரம், வழிபாடு, தெய்வநம்பிக்கை ஆகியவைகளில் பெருமாறுதல் கொண்ட சிறிய, பெரிய தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தநிலையில், பழங்காலந்தொட்டு இருநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்நிய படையெடுப்பு, பண்பாட்டு தாக்குதல்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியின் கீழ்தான் ஒரே ஆட்சிக்குட்பட்ட நாடாக இந்தியா உருப்பெற்றது. ஆங்கிலேய கொடுங்கோலாட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்ட காலங்களில்  இது ஒரே நாடு நாம் ஒரே மக்கள் என்கிற எண்ணம் தொடர் போராட்டங்களால் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டது.



       பண்டைய தமிழகம் சேர, சோழ, பாண்டிய, சேதுபதி பேரரசுகளாகவும் அதற்கு கட்டுப்பட்ட பல்வேறு சிறுசிறு நாடுகளாகவும், அனைத்து சமூகங்களையும் அரவணைத்து,       முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்        கிறை என்று வைக்கப்படும் என்கிற குறளுக்கிணங்க முடியாட்சியிலும் குடியாட்சியாக தன்னரசு நடத்தி வந்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பெரிய மறவர் நாடு, சின்ன மறவர் நாடு, ஆப்பநாடு, மங்களநாடு, கப்பலூர் நாடு, உஞ்சனை நாடு, வெள்ளலூர் நாடு போன்ற நாடு கட்டமைப்புகள் இன்றும் வழக்கொழிந்து போகாமல் நிலைத்து வருவது நடைமுறை சான்றாகும்.

      இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி பரவிய விதமும், அதற்கு இந்திய மன்னர்கள் அடிபணிந்த முறையும் ஒரு விநோதமான வரலாறாகும். வியாபார நலன்களுக்காக பிழைப்பு தேடி இந்திய மண்ணில் தடம்பதித்த ஆங்கில கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தார், இங்குள்ள அரசர்களின் பகையுணர்வுகளை பயன்படுத்தி, ஒரு அரசிற்கு எதிராக மற்றொரு அரசிற்கு உதவுவது போல் படையனுப்பி, அரசினுள் நடைபெறும் வாரிசுரிமைப் போட்டியில் ஒருவருக்கெதிராக மற்றொருவரை ஆதரித்து என மிக  சாதுர்யமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணின் அரசுரிமையை அபகரித்தனர்.

       1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போர் வெற்றியின் பலனாக இந்திய மண்ணில் நிலைபெறத் துவங்கிய கிழக்கிந்திய நிறுவனம்  இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறியது. அதன் வரம்பற்ற சீர்கேடுகளை களைவதற்காக  ஒழுங்குமுறைச் சட்டம்-1773, பிட் இந்தியச் சட்டம்-1784 மற்றும் பட்டயச் சட்டங்கள் 1793, 1813, 1833, 1853, ஆகிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

       இந்தியாவிலேயே முதல் அந்நிய  எதிர்ப்பாளர் மாமன்னர் பூலித்தேவர், திப்பு சுல்தான், வேலுநாச்சியார், மருதிருவர், தூந்தாஜி வாக், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை போன்ற மாவீரர்களின் போராட்டத்தினை தொடர்ந்து 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற  சிப்பாய்புரட்சியின் விளைவாக, இருபது வருடங்களுக்கு ஒருமுறை கொண்டுவரப்பட்ட பட்டயச்சட்டம்  ஐந்தே வருடங்களுக்குள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. 1858 ஆண்டு பட்டயச் சட்டம் இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் புதியதொரு சகாப்தத்தை தொடங்கி வைத்தது. அதுவரையிலான கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்தின் ஆதிக்கத்தை முற்றுப்பெறச் செய்து, ஆங்கிலேய அரசின்  நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டு வந்தது. தொடர்ந்து   இந்திய கவுன்சில் சட்டம் 1861, 1892 மற்றும் மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம்-1909  ஆகியவற்றின் வழியாக பயணித்து 1919 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாண்டேகு- செம்ஸ் போர்டு சட்ட சீர்திருத்தங்களின் அடிப்படையில் இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

       இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகைகளாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதிஉள்துறை  முதலிய முதன்மையான  துறைகள் ஆங்கிலேய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் துறைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் கட்டுப் பாட்டிலும் இயங்கின.  மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 70 சதவிகிதம் மக்களாலும், 30 சதவிகிதம் ஆளுநராலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்க வில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது.


       1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல் தேர்தல் நடைபெற்றது. பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ் இரட்டையாட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் உரிமைகள் திருப்தி அளிக்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சரானார். அமைச்சரவையில் தமிழர் ஒருவர்கூட இடம்பெறவில்லை. பதவியேற்ற சிறிது காலத்திற்குள் உடல்நலக் குறைவு காரணமாக  ரெட்டியார் பதவி விலகிட அவருக்கு பதிலாக ஜுலை 11, 1921 இல் பனகல் அரசர் ராமராயநிங்கர் முதல்வராக பதவியேற்றார்.

       இவரது ஆட்சியில் தான் 1921, செப்டம்பர் 16  அன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை (Communal GO # 613) பிறப்பிக்கப்பட்டது. இதுவே தற்போது இந்தியாவில் பின்பற்றப்பட்டுவரும் இட ஒதுக்கீடு  கொள்கையின் முன்னோடி ஆகும். இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவதைத் தடை செய்திருந்தது. ஏப்ரல் 1, 1921 அன்று நீதிக்கட்சி  தடையை நீக்க சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதன் பலனாக, 1926 இல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி  சென்னையின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.

       1923 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் இரண்டாவது தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மீண்டும் தேர்தலைப் புறக்கணித்தது. சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட சிலர் அதை ஏற்காமல் தனியே பிரிந்து சுவராஜ் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். நீதிக்கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மை இல்லாமலேயே பனகல்அரசர் இரண்டாம் முறையாக  முதல்வரானார். முஸ்லிம் ஒருவரும், இந்திய கிருத்துவர்கள் இருவரும், தாழ்த்தப்பட்டோர்கள் ஒன்பது பேரும் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.  சட்டமன்றம் கூடிய முதல் நாள் அன்றே   எதிர்க்கட்சிகள்  நம்பிக்கையில்லாத் தீர்மானம்  ஒன்றைக் கொண்டு வந்தன. ஆளுனரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணையுடன் அரசு அத்தீர்மானத்தை 65-43 என்ற கணக்கில் தோற்கடித்து பிழைத்துக் கொண்டது. இந்திய வரலாற்றில், சட்டமன்றங்களில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இதுவென்கிற பெருமையும் இவர்களையே சாரும்.


       ஜஸ்டிஸ் கட்சியானது ஆந்திரரும், மலையாளியும் சேர்ந்து உண்டாக்கியது என்று தமது பாலபாரதி (மே-1925) இதழிலே வ.வே.சு.ஐயர் எழுதினார்.

       1926 இல் சென்னை மாகாணத்தின் மூன்றாம் தேர்தலும், 1930 இல் நான்காம் தேர்தலும், ஐந்தாம் தேர்தல் 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் நடைபெற்றது. இரட்டை ஆட்சிமுறையின் கீழ் நடந்த கடைசித் தேர்தல் இதுவே. 1935 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டப்படி இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்டு மத்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்க ளுக்கும் முதல் தேர்தல் 1937ம் ஆண்டு நடைபெற்றது.        இந்திய தேசிய காங்கிரஸ் தேர்தலில் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டு நீதிக்கட்சி வேட்பாளர்  இராமநாதபுரம் ராஜா சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியை  எதிர்த்து வெற்றி பெற்றார். அதேபோல பொப்பிலி ராஜாவை வி.வி.கிரி தோற்கடித்தார். ராஜாஜி மாநிலத்தின் முதல்வரானார். 1916 இல் துவக்கப்பட்ட நீதிக்கட்சி  1920 இல் போட்டியாளர் இன்றி ஆட்சிக்கு வந்தது. இடையில் மூன்றாண்டுகள் தவிர்த்து எப்படியோ முதல்வர் பதவியை தக்கவைத்திருந்த நிலையில் காங்கிரஸின் வரவால் படுதோல்வி அடைந்திருந்தது.

       1937 தேர்தலில் படுதோல்வியடைந்த நீதிக்கட்சி இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் கட்டுப்பாட்டில் வந்திருந்த நிலையில்  1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றி தி.க தேர்தல்களில் பங்கேற்காது என்று அறிவித்தார். சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1946ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று தங்குதுரி பிரகாசம் முதல்வரானார். 1947 ஆகஸ்ட் 15 அன்று  இந்தியா சுதந்திரமடைந்தது. 

அகில இந்திய அட்டவணைச்சாதியினர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த என்.சிவராஜ்தாழ்த்தப்பட்டோரின் துன்ப நாள் ஆகஸ்ட் 15”  என்ற   தலைப்பில் அறிக்கை வெளியிட்டார்.  இதே காலத்தில் .வெ.ரா.  ‘ஆகஸ்ட் 15 துக்கநாள்என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

       இந்தியாவின் சுதந்திரத்தை, தேர்தலை விரும்பியிராத போதிலும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த கழகங்களே தொடர்ந்து தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியா மொழிவழி மாநிலங்களாக திருத்தியமைக்கப்பட்ட பின்பும் தமிழ்நாட்டிற்குள் குடியேறிய மொழிவழிச் சிறுபான்மையினர் பெரும்பான்மை மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அடிப்படை வகுத்துக் கொடுப்பதே திராவிட கட்சிகளின் பிரதான கொள்கையாக இருந்து வருகிறது. இன்றும், அந்நிய மேலாதிக்கமற்ற சுதந்திர மக்களாட்சி அமைத்திட தேர்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. இருநூறு ரூபாய் தமிழர்கள் புரிந்துகொண்டு, தெளிந்து கொள்ளும் நாள் எந்நாளோ?

"சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மிகக் கோழைத்தனம்."
                              -கன்பூசியஸ்

                                                                        -தொடர்ச்சி பாகம் 2 இல்