-புதுமலர் பிரபாகரன்
“கொள்கை புனிதமாக இருந்தால் மட்டும் போதாது; அதற்கான வேலைத்திட்டமும் தூய்மையானதாக இருக்க வேண்டும்”
–மோகன்தாஸ்
கரம்சந்த் காந்தி.
இந்திய அரசியல் சூழலுக்குள் சிக்கித் திணறும் தமிழக
பெரும்பான்மை சமூகங்களின் அடிப்படை ‘அரசியல்
உரிமை’களை பறித்துவரும் தனித்தொகுதிகளின் பரிணாம
வளர்ச்சியானது ஆங்கிலேய சுரண்டல் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியிலிருந்து ‘பிறப்பெடுத்த வறட்டுவளர்ச்சி’ சிந்தனையாகும்.
தமிழ் மண்ணில் சுதந்திரமாக ஆட்சி செலுத்திய அரசர்கள்
ஆலயங்களுக்கும், அந்தணர்களுக்கும் கணக்கற்ற ‘கொடை’களை வழங்கிட, ஏனைய
தமிழ்ச்சாதியினர் உற்பத்தி, வணிகத்தில் தன்னிறைவாக
செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். கால ஓட்டத்தில் மதத்தால் வேறுபட்ட நவாபுகள் மற்றும்
ஆங்கிலேயர்களின் ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட பிராமணர்கள் வருமானத்திற்கான ‘மாற்று வழி’ தேடலாயினர்.
ஆங்கிலத்தை ‘நீச மொழி’ யென்று விமர்சித்து வந்திருந்த நிலையில், கடுமையான
உடல் உழைப்பின்றி மாத ஊதியம் பெறும் ‘புதிய ஊழிய
வர்க்கத்தின்’ துவக்கம் அறிந்து,
ஆங்கிலம் கற்று ‘ஆங்கிலேயர்களுக்கு தொண்டு’ புரியலாயினர். இதே ஊழியத்தில் வேளாளர், முதலியார்
சாதிகளும் முன்னணியில் இருந்தன. ஆங்கிலேய உற்பத்தியின் ‘விற்பனை
சந்தை’யாக தமிழகம் மாறிய போது,
இங்குள்ளவர்களின் பொருளாதாரம் நசிவடைந்து வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது.
கொஞ்சம் காலந்தாழ்ந்து ஆங்கிலம் கற்கவும் வேலையில் சேரவும் மற்ற சமூகங்களும் முற்பட்டபோது
பிராமணர்களின் ஆதிக்கம் அவர்களுக்கு தடையாக அமைந்தது. ஆகவே மற்ற சமூகங்கள் பகைமை
கொண்டதோடு பிராமணர்களின் ஆதிக்கத்தை அடக்கவும், முடக்கவும்
அனைத்து வகைகளிலும் போராடி வந்தன.
இந்நிலையில், 1919 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாண்டேகு- செம்ஸ்போர்டு சட்ட சீர்திருத்தங்களின்
அடிப்படையில் சென்னை மாகாணத்தில், இரட்டை ஆட்சி
தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிருத்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள் என பல்வேறு பிரிவினருக்கும் வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 அரசாங்க ஊழியர்களும், ஐந்து
தலித்துகளும் அடங்குவர்.
இரண்டாவது மாகாணத் தேர்தலிலும் இதே நிலை கடைபிடிக்கப்பட்டது. ஆனால், தலித்துகளின் நியமனம் ஒன்பதாகவும், மூன்றாவது தேர்தலில் பத்தாகவும் உயர்ந்து, கூடுதலாக ஐந்து பெண்களுக்கான தொகுதிகளும் இணைக்கப்பட்டது. அதே சமயம் இந்திய விடுதலைப் போராட்டமும் உக்கிரம் அடைந்து வந்தது. வெள்ளை அரசுக்கு எதிராக மக்கள் பெருந்திரளாக போராட்டக் களத்திற்குள் தங்களை தன்னெழுச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.
இரண்டாவது மாகாணத் தேர்தலிலும் இதே நிலை கடைபிடிக்கப்பட்டது. ஆனால், தலித்துகளின் நியமனம் ஒன்பதாகவும், மூன்றாவது தேர்தலில் பத்தாகவும் உயர்ந்து, கூடுதலாக ஐந்து பெண்களுக்கான தொகுதிகளும் இணைக்கப்பட்டது. அதே சமயம் இந்திய விடுதலைப் போராட்டமும் உக்கிரம் அடைந்து வந்தது. வெள்ளை அரசுக்கு எதிராக மக்கள் பெருந்திரளாக போராட்டக் களத்திற்குள் தங்களை தன்னெழுச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியை, வீரியத்தை தணிப்பதற்கு, இங்கிலாந்து ஆதிக்க பேரரசு வேறு
வழியின்றி இந்தியர்களுக்கும் நிர்வாகத்தில் ‘சில கொசுறு’களை பங்களிக்க 1928 ல் பிரிட்டிஷ் லிபரல் கட்சி உறுப்பினரான சர்.ஜான்
சைமன் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. இந்தியர்களுக்கு
பிரதிநிதித்துவம் வழங்க அமைக்கப்பட்ட அந்த குழுவில் இந்தியர்கள் ஒருவர்கூட
இடம்பெறாததால் காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து
பிரதான கட்சிகளும் சைமன் குழுவை புறக்கணித்து, ‘சைமன் குழுவே திரும்பிபோ’ (Simon Go Back) என போராட்டங்கள் நடத்தின. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவலர்களால் தடியடி
நடத்தப்பட்டது. பெருங்காயமுற்ற தேசபக்தர் லாலா லஜபதிராய் சில நாட்களிலேயே இறந்தும்
போனார்.
நாடு முழுவதிலும் சைமன் கமிஷன் சென்ற
இடமெல்லாம் ஆர்ப்பாட்டமும்,
கிளர்ச்சியும், கடும் எதிர்ப்பும் நிலவிவந்த சூழ்நிலையில் அம்பேத்கர், எம்.சி.ராஜா, இரட்டை மலை சீனிவாசன் போன்ற தலித்
தலைவர்கள் சைமன் குழுவினரை சந்தித்தனர். 1928 அக்டோபர் 23 அன்று அம்பேத்கர்
குழுவின் முன் நேரில் சாட்சியம் அளித்ததோடு, 17.05.1929
அன்று 60 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்தார்.
சைமன் குழுவை காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான காட்சிகள் புறக்கணித்ததால்
இங்கிலாந்து பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்திய பிரதிநிதிகள் அனைவரையும் லண்டனுக்கு
அழைத்தார்
1930 நவம்பர் 12 அன்று மன்னர் ஐந்தாவது ஜார்ஜ் இந்திய வட்ட மேஜை மாநாட்டை லண்டனில் துவங்கி வைத்தார். இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக் டொனால்டு தலைமையில் நடந்த மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்ததால்
தனது பிரதிநிதிகள் என எவரையும் அனுப்பவில்லை. ஆனால் முதலாம் வட்ட மேஜை மாநாட்டின் நடவடிக்கைகளை காந்தியும், காங்கிரசாரும் மிக உன்னிப்பாக கவனித்து வந்தனர். மாநாட்டில்
கலந்து கொண்ட அம்பேத்கர் ‘வயது வந்தோர்
அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் இயலாத பட்சத்தில் தலித்துகளுக்கு ‘தனித் தொகுதிமுறை தேவை’ எனக் கோரினார். தமிழகத்தைச்
சார்ந்த இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோர் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முன்வைத்து
தலித்துகளுக்கு தனிவாக்காளர் தொகுதிகள் கேட்டனர்.
காந்தி-காங்கிரஸ் நடத்திவந்த ஒத்துழையாமைப் போராட்டம் 1931,மார்ச் 5ஆம்
தேதி ஏற்பட்ட காந்தி-இர்வீன் ஒப்பந்தம் காரணமாக நிறுத்தப்பட்டது. அதனால், 1931ல் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டின் போது காங்கிரஸ் சார்பில் காந்தி, சரோஜினி
நாயுடு போன்றோர் பங்கேற்றனர். அம்பேத்கர்
‘இந்தியாவிலுள்ள எல்லா வகுப்புகளும் முறையான விகிதாச்சாரத்தின்
அடிப்படையில் அதிகாரத்தைப் பங்கீடு செய்துகொள்ள வேண்டும் என்றும் தலித்துகளுக்கு தனித்தொகுதிகள்
(Separate Electorates) வழங்கவேண்டும்’ என்றும் வலியுறுத்தினார். காந்தி அதனை
கடுமையாக எதிர்த்தார்.
வட்டமேஜை மாநாட்டின் உள்நோக்கம் நியாயமற்றதாகவும், பிரிவினை ஏற்படுத்துவதாகவும் தெரிந்ததால் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் ‘நாங்கள் வெறுங்கையுடன் திரும்பிவிட்டோம்’ என்று அறிக்கைவிட்டார்கள். அதனைக்
கண்டித்த தலித் மக்கள் காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டம்
நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட மோதலில் இருபக்கமும் 40 பேர் இறந்ததாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், ஆங்கில அரசாங்கம்
1932 ஆகஸ்ட் 17ம் தேதி வகுப்புத்தீர்ப்பு (Communal
Award) ஆணையை
வெளியிட்டது. அவற்றில், ‘தனித்தொகுதி
அமைப்பு முறை இருபதாண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனவும் பின்னர் அதை முடிவுக்கு கொண்டுவர அரசியலமைப்புச்
சட்டத்தில் வகை செய்ய அரசு உத்தேசித்துள்ளது’ என்றும்
அறிவித்தது.
இதன்படி பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் ஒடுக்கப்பட்ட இன வேட்பாளரை தேர்ந்தெடுக்க இன்னொரு வாக்கும் என ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு இரண்டு வாக்குகள் அளிக்கும் உரிமை நடைமுறைப்
படுத்தப்பட்டது.
இந்த ஆணை சாதிய முரண்களை வளர்த்தெடுக்கும் ஆகவே,இரட்டை வாக்குரிமையை கைவிட வேண்டுமென காந்தி புனேவில் இருக்கும் எரவாடா சிறைச்சாலையில்
செப்டம்பர் 20, 1932 முதல் சாகும்வரை உண்ணாவிரத்ததை தொடங்கினார். காந்தியும் அம்பேத்கரும் அவரவர்
நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திட காந்தியின் உயிரையும்,
உடல்நிலையையும் கருத்தில் கொண்ட காங்கிரசார் இருவரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
ராஜாஜின் தலையீட்டில் உடன்பாடு ஏற்பட 1932 செப்டம்பர்
24 அன்று அம்பேத்கர் காந்தியுடன் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆங்கில அரசு இந்த ஒப்பந்தத்தை அப்படியே அங்கீகரித்து
ஆணையாக வெளியிட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஆங்கில அரசாங்கம் தருவதாக
சொன்ன 71 தொகுதிகளை விட இரண்டு மடங்கு கூடுதலாக 148 தொகுதிகள் ஒடுக்கப்பட்ட இனத்தினருக்கென்று ஒதுக்கப்பட்டது. இரட்டை வாக்குரிமை கைவிடப்பட்டு பொதுவாக்காளர் தொகுதிகளில் தனிஇட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என
அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், தனித்தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களுக்கு முதற்கட்டமாக ஒருதேர்தல்
நடக்கும். அதில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வாக்களித்து நான்கு வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுப்பர். இவர்கள் நான்கு பேரில் ஒருவரை அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள்.
1957 தேர்தலிலும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் இரட்டை உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவை-2 தொகுதியிலிருந்து இரு உறுப்பினர்களுமே
தனிப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழப்பங்களும் நடந்தேறியது. 1961 இல் முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்கள் தொடர்ந்த வழக்கின்
காரணமாக நீதிமன்றத்தால் இரட்டை வாக்குரிமை முறை நீக்கப்பட்டு 1962 பொதுத்தேர்தலில் இருந்து
தற்போதைய தனித்தொகுதி முறை அமலில் உள்ளது.
1945ல் காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதவர்களுக்கு என்ன செய்தது என்று எழுதிய அம்பேத்கருக்கு மக்களே தீர்ப்பளித்திருந்தார்கள். 1946ல் நடந்த தேர்தலில் அம்பேத்கரின் கட்சி படுதோல்வி அடைந்திருந்தது. ஆங்கில அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு
வாய்ப்பளிக்கப்பட்டது.
1931 க்குப்பிறகு
முறையான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வில்லை அதுவே முறையானதும்
இறுதியானதும் ஆகும். அப்படியிருக்க
பொருளாதார நசிவு, குடும்பக்கட்டுப்பாடு, உலகமயமாக்கல், தனிக்குடும்பம் போன்ற மக்கள்
பெருக்கத்திற்கு எதிரான பல சூழல்களுக்கு பின்பும் அனைத்து சாதியினருக்கும் சமமான ‘பெருக்க’மிருப்பதான கணிப்பில் தற்போதும் அதேவிகிதத்தில் கணக்கிட்டு தனித்தொகுதிகள் வழங்கப்படுவது
விவாதத்திற்குரியது. 1931 ல் நடந்த கணக்கெடுப்பையே ஆதாரமாகக் கொள்வது முரண்பாடு
ஆகும்.
-தொடர்ச்சி பாகம் -3 இல்
-தொடர்ச்சி பாகம் -3 இல்