சின்ன மறவர் நாடு, சிவகங்கை சீமை அரசாண்ட இரண்டாவது
மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்களும், இளைய இராணி கெளரி நாச்சியார் அவர்களும் 1772 ஆம் ஆண்டு காளையார் கோவிலில்
நடந்த போரில் நயவஞ்சகமாக ஆங்கிலேய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது நினைவு
நாள் ‘வீரவணக்க நாளாக’ ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், முக்குலத்தோர் கட்சித்தலைவர்கள், முக்குலத்தோர் அமைப்புகள், மறவர் அமைப்புகள் மற்றும் மன்னர் வம்சா வழியினர் பங்கேற்று விழாவினை சிறப்பித்து
வருகின்றனர். இந்நிலையில், தற்போது 25.06.2016 அன்று காலை பத்து
மணி முதல் மாலை வரை மன்னரது 244 -ஆவது ஆண்டு வீரவணக்க நாள் விழா காளையார் கோவிலில்
அமைந்துள்ள ‘முத்துவடுகநாத தேவர்’ மாலையீட்டில்
நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாட்டினை மறவர்
கூட்டமைப்பு நிர்வாகிகளும், மன்னர் முத்துவடுகநாத்தேவர் அறக்கட்டளை நிர்வாகிகளும், மன்னரது வம்சத்தை சார்ந்தவர்களும் இணைந்து செய்து வருகிறார்கள். ஆக, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் பெருந்திரளாக
கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க மறத்தமிழர் சேனை சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.