பரமக்குடி, 13.11.016 அன்று சீர்மரபினர் பட்டியலில் இருக்கக்கூடிய
சாதியினர்களை மீண்டும் டி.என்.டி என அறிவித்து சாதிச் சான்றிதழ் வழங்கிட
வலியுறுத்தி தேவரினப் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன்
தலைமையில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்ற
உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.
மறத்தமிழர் சேனை மாநில
அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், தேவரினப் புலிப்படை மாநில
பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து
கொண்டனர்.
சீர்மரபினர் சாதிப்
பட்டியலில் வரக்கூடிய 68 சாதிகளுக்கும் துரோகம் இழைக்கும் விதமாகப் போடப்பட்ட
அரசாணை எண் 1310 / நாள்: 30.07.1979 ஐ ஆளுகின்ற அதிமுக அரசு உடனே ரத்து
செய்திடவும், பத்து
சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிடவும் வலியுறுத்தி அனைவரும் பேசினர்.