★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, November 17, 2016

தூரி இராமசாமித்தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட மறத்தமிழர் சேனை கோரிக்கை

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இன்று (17.11.16) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.


தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களோடு சேர்ந்து நாட்டின் விடுதலைக்காக பலமுறை சிறை சென்றதோடு, தேவரைப் போலவே தமது வாழ்வையும் திருமணம் செய்யாமலேயே நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். வேலூர் மத்திய சிறை, பெல்லாரி மத்திய சிறை – ஆந்திரா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறைகளில் கைதியாக இருந்த இவரது தியாகத்தைப் போற்றும் விதமாக, இந்தியாவின் 25 வது சுதந்திரதின விழாவின் போது, அன்றைய பிரதம அமைச்சர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 15.08.1972 அன்று மத்திய அரசின் சார்பில் சிறந்த சுதந்திரப் போராட தியாகி என தாமிர பத்திரம் வழங்கி கெளரவித்துள்ளார்.

தேவர் திருமகனாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மறைவுக்குப் பிறகு தமது 49 வது வயதில் திருமணம் செய்தவரான இவரது நாட்டுப்பற்றிற்கு சான்றாக தேவர் திருமகனார் தமது சொத்துகளில் ஒரு பாகத்தை இவரது பெயருக்கு எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவியான இரா.பூமயில் அவர்கள் தற்போது மத்திய / மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 1989 ஆம் வருடம் ஆகஸ்ட் 05 அன்று திரு.இராமசாமித்தேவர் அவர்கள் மரணம் அடைந்து விட்டார். அவரது தியாக உடல் அவரது சொந்த கிராமமான முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அவரது பிறந்த மற்றும் இறந்த நாட்களில் கிராம மக்களால் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆகவே, உண்மைத்தியாகிகளின் வாழ்விற்கு அங்கீகாரமும் – மரியாதையும் செலுத்துவதில் பெரும் முனைப்போடு செயல்படும் தங்களது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் தியாகி, தூரி எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களின் நாட்டுப்பற்றையும், தியாக்கத்தையும் போற்றும் விதத்தில்  இவரது பிறந்த நாளில் (30.09.1914) அரசு விழா எடுத்திடவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் ஆவண செய்திடுமாறு தங்களை மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பாகவும், முதுகுளத்தூர் வட்டார கிராம பொதுமக்கள் சார்பாகவும் பணிவோடு வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.