★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, November 10, 2016

ஸ்ரீ ராஜராஜ தேவர் 1031 வது சதய விழா

உலகப்புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் எழுப்பி, அனைத்து மதங்களுக்கும் பொதுவான கொடையளித்து, வரலாற்றில் இனியொருவன் வீரத்திற்காகப் பேசப்படாதபடி சோழப்பேரரசை கலிங்கம் முதல் ஈழம் வரை விரித்த மாமறவன் ஸ்ரீ ராஜராஜ தேவர் என்கிற அருண்மொழித்தேவர் பிறந்த நாள் விழா ஐப்பசி சதய நாளான நவம்பர்-09-2016 அன்று தஞ்சை மண்ணில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்களும், மராட்டிய மன்னர் வழி அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களும், உதவி ஆணையர் ஜெ.பரணிதரன் அவர்களும் முன்னின்று ராஜராஜ சோழனின் 1031 வது சதய விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


முக்குலத்தோர் கட்சிகளும், அமைப்புகளும், கள்ளர் சங்கங்களும் பெருந்திரளாக பங்கேற்று மாமன்னர் ஸ்ரீ இராஜராஜ தேவர் சிலைக்கு மாலை அணிவித்துச் சென்றன. மறத்தமிழர் சேனை சார்பாக மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்களும், மாநில தொண்டர் சேனை செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன் அவர்களும், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் காடவராயர் அவர்களும், தஞ்சை நகர செயலாளர் முருகன் அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் எழுதியிருந்த கடிதத்தில் “ஆயிரம் வருடங்களாக கல்வெட்டுகளில், செப்பேடுகளில் ஸ்ரீ ராஜராஜ தேவர் என்றே பெயர் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சில குறிப்பிட்ட சாதியினர் தங்களின் சாதி பெயர்களோடு மாமன்னரின் பெயரை இணைத்து சுவரொட்டி ஓட்டுவதும், சுவர் விளம்பரம் செய்வதுமாக வரலாற்று அழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற சுவரொட்டிகளை ஓட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.