★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, August 8, 2011

பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்

காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் சரித்திர நாயகன்ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
தமிழக மக்களால் நாட்டர் ஐயா என
பாசமுடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்.அவர்கள் தஞ்சைமாவட்டத்தில்திருவையாற்றுக் கருகிலுள்ள  நடுக்காவேரி என்னும் சிற்றூரில் கள்ளர்குலத்தோன்றலாகிய வீ. முத்துச்சாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும்நன்மகனாய்12-04-1884 
இல் பிறந்தார்.Picture

இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம்திரிபரப்பயின்றுமதுரை தமிழ் சங்கம் நடத்திய பிரவெச பண்டிதம்பால பண்டிதம்பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905, 1906, 1907)முறையாகஎழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்றுமதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தபெருமாகனாராகிய பண்டித் துரை தேவர் அவர்களால்தங்கப் பதக்கக்ங்களும். தங்கத்தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.தாமே பயின்ற தமிழ்பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் ப்ணிபுரிய அழைத்த கல்வி நிருவனங்கள்பல.கோயம்பத்தூர் தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஒரு ஆண்டும்திருச்சி பிஷப் கல்லூரியில்தலைமை தமிழ் பேராசிரியரரக 24 ஆண்டுகளும்  அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் தமிழ பேராசிரியராக ஆண்டுகளும் பணி புரிந்து ஒய்வு பெற்றார்.பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில்ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்துசிரப்பித்தார்கள்.

1940 
ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமில் மா நாட்டில்நாவலர் என்னும் சிரப்புபட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய உரைகள்,தமிழ் ஆராச்சி நூல்கள் பல. 1921 -22 இல் திருவருட் கல்லூரி ஒன்ற்றுநிறுவ முயற்சி செய்து நிறைவேறாமல் போக , 1925 - 26 இல் தஞ்சை அல்லது திருச்சியில்தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர்டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பினராகஇருந்து செயலாற்றிச் சிற்ப்பித்தார்கள்எளிய வாழ்வும் இனிய நோக்கமும்கொண்டவர்நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும் மிக்கவர். சிறந்த புலமையாளர்உயர்ந்தபண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றிய நாட்டர் 28-3.1944 அனறு தம் மணி விழா நடை பெறுவதற்கு இருவராத்திற்கு முன் காலமானார். அன்னாரின் உடல்பிறந்த மண்னணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ் புலவர் ஒருவருக்காகஎழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இதுவே.

நாட்டாராய்யாவின் அகன்ற அறிவு.
ஆழ்ந்தபுலமை. 
தெளிந்த ஆய்வு. 
தேர்ந்த எழுத்துத்திறன். 
பேச்சாற்றல். 
படைப்பாற்றல். 
உரைவளம். 
மனவளம்.
மனிதநேயம். 
போன்ற சிறப்புகளையெல்லாம் எதிர்கால இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்துநடைபேச்சுநடை இரண்டிற்கும்
தூய நடை எடுத்துவைத்தார்.
உயர்வான தமிழ் வளர்த்தார். 
உலகில் நல்ல பேர்வளர்த்தார். 
தமிழுக்குப் பெருமைதனைத்தான் வளர்த்தார்.
உலகுள்ளவரை தமிழ் வாழும்.
தமிழுள்ளவரை நாட்டார்தம் புகழ் வளரும்.