★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, August 1, 2011

மறவர் maravar

 செங்கை மறவர் என்ற பாடலைப் பற்றி பார்ப்போம். 

  இப்பாட்டின் பெயர் செங்கை மறவர் என்பது. சிவந்த
கையினையுடைய மறவர் என்பது இதன் பொருள்.
பாட்டின் கருத்து
    யானைகள் பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள்
வீரர்களோடு அணியாகச் செல்ல, கொடியுடைய தேர்கள்
சுழன்று செல்ல, வேற்படை வீரரைக் கொண்ட காலாட்
படையினரும் வேந்தரும் குறுநில மன்னரும் ஒருங்கே சேர்ந்து
செல்ல, மிக்க வலிமையோடு மனம் செருக்கி வந்தான் மோகூர்ப்
பழையன். அவனுடைய படைத்திறன் சிதையுமாறு தாக்கினர்
சேர வீரர்கள். பகைவரின் குருதியில் நனைந்ததனால் போர்
வீரர்களின் கைகள் சிவந்தன. வீரர்களின் மார்பிலிருந்து ஒழுகிய
குருதி மண்ணில் பாய்ந்து மழைநீர்க் கலங்கலைப் போல்
பள்ளம் நோக்கிப் பாய்ந்தது. பகைவரின் பிணங்கள் குவியுமாறு
ஊர்கள் பலவற்றையும் பாழ் செய்தான் குட்டுவன். வெற்றி முரசு
முழங்கப் பழையனின் செல்வம் முழுவதும் கெட்டொழிய அங்கு
வாழ்ந்தோர் பலரையும் கொன்றான். கரிய கிளைகளைக்
கொண்ட காவல் மரமான வேம்பு குட்டுவனால் வீழ்த்தப்
பெற்றது.
    சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக
நாங்கள் போகிறோம். அசையும் கூந்தலையும் ஆடும்
இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள்.
இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும்
உணவும் பெறுவர்''. இவ்வாறு சேரன் கொடைச் சிறப்பைப்
படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர். அவன்
நாடுகளை வெல்வதே விறலியர் பாணர் போன்றவர்களுக்குப்
பரிசு வழங்குவதற்காகத்தான் என்கிறார்.
    அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும்
போதுதான் அதைச் செங்கை என்று பாராட்டுவது வழக்கம்.
இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர்.
ஆனால் அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை
ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப் பொன், பொருளை
வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே
சிவந்து - வள்ளலின் செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக்
குறிப்பு மொழியால் சொல்கிறார். இந்தப் பாடல் செங்கை
மறவர் என்று பெயர் பெற்றது ஏன் என்று புரிந்து கொண்டீர்கள்
அல்லவா?
பாட்டின் துறை முதலியன
    இப்பாட்டின் துறை விறலியாற்றுப்படை. விறலி என்பவள்
நடனம் ஆடுபவள். வேந்தனிடம் பரிசில் பெற்ற ஒருவன்
விறலியை நோக்கி, அவனிடம் சென்றால் இவ்வாறு நீயும்
பரிசில் பெறலாமென்றும், எம்முடன் வந்தால் இன்னது
பெறலாமென்றும்    கூறுவது    விறலியாற்றுப்படை ஆகும்.
வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே.
பாட்டின் பெயர் செங்கை மறவர்.



-maraththamizhar senai