வகை | : | பொது | |
எழுத்தாளர் | : | பேரா. புலமைவேங்கடாசலம் | |
பதிப்பகம் | : | பாவை பப்ளிகேஷன்ஸ் | |
ISBN | : | 81-7735-831-6 | |
Pages | : | 85 | |
பதிப்பு | : | 1 | |
Published Year | : | 2010 | |
விலை | : | ரூ.40 |
சேதுபதி மன்னர்கள் மறவர் இனத்தில் தோன்றிய மன்னர்கள் ஆவார்கள். இவர்கள் தென்பாண்டிச் சீமையில் புகழ்வாய்ந்த நிலையில்
ஆட்சிப்புரிந்தவர்களாவார்கள். இராமேசுவரமு கோயிலின் புனரமைப்புச் சேதுமன்னர்களால் செய்யப்பட்டு, அவர்களது பராமரிப்பில் தொடர்ந்து இருந்துவந்தது. அதற்கு நன்றி சொல்லும் வகையில் வடநாட்டிலிருந்து இராமேசுவரம்வரும் பக்தர்கள் இராமேசுவரத்தில் தரிசனம் முடித்து ஊருக்குத் திரும்பும்போது, இராமநாதபுரத்திற்குச் சென்று சேதுபதி மன்னர்களைச் சந்தித்துவிட்டுச் செல்வார்கள். இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசம் அரண்மனை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். சேதுபதி மன்னர்களில் மிகவும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, பாண்டித்துரைத் தேவர் ஆகியோராவர். பாண்டித்துரைத் தேவர் , மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தினார். இந்த நூலில் புலித்தேவர் வரலாறு, வேலுநாச்சியார் வரலாறு, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வரலாறு ஆகியவற்றுடன் மறவர் இன மக்களின் வரலாற்றையும் கொடுத்துள்ளேன். புலமை வேங்கடாசலம்.