மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கும் இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஊழலை ஒழிக்க லோக்பால் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர் போராட்டம் நடத்தினார். இதன்விளைவாக, லோக்பால் மசோதாவை மத்திய அரசு தயாரித்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அன்னா குழுவினர் ஜன் லோக்பால் பெயரில் தனி மசோதாவை தயாரித்தனர்.
Wednesday, December 28, 2011
Tuesday, December 27, 2011
பிரதமர் மன்மோகன் சிங் - நரசிம்மராவின் வாரிசு
தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன் சிங், முல்லைப் பெரியாறு, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்னைகளில் வாயே திறக்காமல், நரசிம்மராவின் வாரிசு, தான் தான் என்பதை மீண்டும் நிரூபித்தார். தமிழகத்தை அலைக்கழிக்கும் இந்த முக்கிய பிரச்னைகளுக்கு பிரதமர் வருகையால் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை சுடுகாடாய் மாற்ற கூடிய கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நிற்கிறது. அணு உலையைத் திறக்க விடாமல் நான்கு மாதத்துக்கும் மேலாகத் தொடரும் உண்ணாவிரதத்துக்கு இன்றுவரை பதில் இல்லை.
Sunday, December 25, 2011
கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?
இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?
இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

Wednesday, December 21, 2011
முற்றுகை போராட்டம்: வைகோ, பழ.நெடுமாறன், எம்.எல்.ஏ. கதிவரன் கைது
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து கேரளாவுக்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். தேனி மாவட்டத்தில் குமுளி சாலையில் லோயர் கேம்ப் பகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லை பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோர் தலைமையில் கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்து நிறுத்தும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள்
கோலாலம்பூர் : மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tuesday, December 20, 2011
Rani Velu Nachiyar, ராணி வேலுநாச்சியார் அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா
வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். சிவகங்கை சீமை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா, வருகின்ற டிச-25 அன்று சிவகங்கை நினைவிடத்தில் நடைபெற உள்ளது. மறத்தமிழர் சேனை அந்தநாளை "வீர மங்கையர் தினம்" மாக கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு தமிழகமெங்கும் எழுதப்பட்ட சுவர் விளம்பரம்.
Saturday, December 10, 2011
அருண்மொழித்தேவர் எனும் ராஜ ராஜசோழன்
அருண்மொழித்தேவர் எனும் ராஜ ராஜசோழன் - தொகுப்பாசிரியர் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், பக். 310, ரூ. 200. காவ்யா, சென்னை 24; ) 044-23726882.
கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் வரலாற்று அறிஞர்கள், பல துறை வல்லுநர்கள் மாமன்னர் ராஜராஜனைப் பற்றி எழுதியதை நூலாசிரியர் தொகுத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. பொதுவாக, தொகுப்பு நூலில் கூறியது கூறல் என்பது தவிர்க்க முடியாதது. இருந்தாலும், அவரவர் பார்வையில் கட்டுரைகள் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
முதலாம் ராஜராஜனின் பிறப்பு, குடும்பம், ஆட்சிப் பொறுப்பேற்ற சூழல், எதிர்கொண்ட சவால்கள், பெற்ற பட்டங்கள், தொடர்புடைய சிற்றரசர்கள், அமைச்சர்கள், படைத் தலைவர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தொடர்புகள், மெய்க்கீர்த்திகள், எதிர்கொண்ட போர்கள், நிர்வாகம், சமயக் கொள்கை, அவர் நிர்மாணித்த பெரிய கோயில், அங்குள்ள கல்வெட்டுகள் கூறும் செய்திகள், அதன்மூலம் அறியப்படும் ராஜராஜனின் புகழ் எனப் பல கோணங்களில், பல தலைப்புகளில் செய்திகளை அறிய முடிகிறது.
காலம் காலமாக பெரிய கோயில் குறித்து மக்களிடையே நிலவும் சில புதிர்களுக்கு குடவாயில் பாலசுப்பிரமணியன் கட்டுரையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தொகுப்பில் வ.அய். சுப்பிரமணியம், ஓவியர் சந்ரு ஆகியோரின் கட்டுரைகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. "இராஜராஜசோழனுலா'வை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். பல அரிய செய்திகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பு, இராஜராஜனுக்குச் சூட்டப்படும் மற்றொரு மணிமகுடம். அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
-maraththamilar senai

Sunday, December 4, 2011
பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
திருச்சி:
"திருச்சி பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகத்தை சூறையாடிவர்கள் மீது கொடுத்த புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்கள் மீது முதல்வரிடம் புகார் கொடுப்பேன்,'' என்று மாநிலச்செயலாளர் கதிரவன் கூறினார்.
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இக்கட்டிடத்தின் உரிமையாளர் சுரேஷ், கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இக்கட்டிடத்தில் திண்டுக்கல் வேலுநாயுடு பிரியாணி என்ற பெயரில் கடை வைத்துள்ள கார்த்திக், "கடையை காலி செய்ய மறுத்ததால், சுரேஷ் கடையை அடித்து நொறுங்கியதாக' உறையூர் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த சிலர், ஃபேன், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரை போலீஸார் வாங்க மறுத்துவிட்டனர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான கதிரவன் நேற்று காலை கட்சி அலுவலகத்தை பார்வையிட்டார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து கதிரவன் கூறியபோது, ""ஒரு தேசிய கட்சியின் அலுவலகத்தை சூறையாடிய கார்த்திக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்கள் கட்சி நிர்வாகி சுரேஷ் கொடுத்த புகாரை போலீஸார் வாங்க மறுக்க, இன்ஸ்பெக்டர்கள் நுண்ணறிவுப்பிரிவு சுகுமார், உறையூர் பால்சுதர் தான் முக்கிய காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன்,'' என்றார். எம்.எல்.ஏ., கதிரவன் தலைமையில், கட்சியினர் கரூர் பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தநிலையில், திடீரென சாலைமறியல் செய்ய முயன்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறத்தமிழர் சேனை கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வழியுறுத்துகிறது.

முல்லைப்பெரியாறு அணை - வைகோ போராட்டம்
முல்லைப்பெரியாறு அணையை காக்க ம.தி.மு.க. 21-ந்தேதி முற்றுகை போராட்டம்: வைகோ அறிவிப்பு
சென்னை, டிச.4-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவோம் என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அந்த அக்கிரமத்தை செயல்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலைமை நமக்கு மிகுந்த கவலையை தருகிறது. 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணை இந்தியாவில் உள்ள அணைகளிலேயே மிகவும் வலுவான அணையாகும். 7 ரிக்டர் அளவுக்கு பூகம்பமே வந்தாலும் நமது அணை சேதம் அடையாது.
இந்த பகுதியில் 3.5 ரிக்டருக்கு மேல் பூமி அதிர்ச்சிக்கு வாய்ப்பில்லை. 5 ரிக்டர் ஏற்பட்டால் குமுளிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும், 550 அடி உயரத்திற்கு கேரளம் கட்டியிருக்கின்ற இடுக்கி அணைக்கும் சேதம் ஏற்படலாம். நமது அணைக்கு எந்த சேதமும் வராது.
குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தரமறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய அனுமதி வழங்க மறுக்கும் கேரளம், கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்கு குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செய்யும் கேரளம், முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டு விடாமல் தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
அணையை உடைத்தால் நிரந்தரப் பொருளாதார முற்றுகைக்கு கேரளம் ஆளாகும் என எச்சரிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் அறப்போரை கடந்த 2010 மே 28-ம் நாள் நடத்தினோம்.
அதேபோல வருகிற 21-ம் தேதி நடத்திடத்திட்ட மிடப்பட்டுள்ளது. அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளும் இந்த அறப்போரிலும் பங்கேற்க உள்ளன. தென்தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைக்காக்க இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் விவசாயப் பெருமக்களும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
திராவிடராக பிறந்திருந்த போதிலும் தமிழர் துயர்துடைக்க போராடும் வைகோ அவர்களுக்கு மறத்தமிழர் சேனை-maraththamilar senai நன்றி கூறுகிறது.
Thursday, December 1, 2011
வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் 100 வது நினைவுநாள்
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் உண்டென்றால் அது வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மட்டும் தான்.
"பாலவநத்தம் ஜமீன்தாராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமித்தேவர் - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரோ பாண்டித்துரைத் தேவர். அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.

சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், தேவரின பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பி நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். . தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார். பாண்டித்துரைத் தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.
அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-
தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.
அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.
உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம் தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.
அத்தகைய மாமறவனின் 100 வது நினைவுநாள் கூட்டம் நாளை ( 02-12-2011 ) காலை 10.00 மணியளவில் மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில், மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது. நிர்வாகிகளும், இன உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு நான்மாடக் கூடலிலே நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுகிறோம்.
-மறத்தமிழர் சேனை
Monday, November 14, 2011
மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்
பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும் இம்மியளவும் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்பவன் தேவரைப்பற்றியும், தேவர் சமூகத்தையும் அவதூறாக பேசியுள்ளான்.
Sunday, November 13, 2011
நாம் எங்கே செல்கிறோம் ?
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! மறத்தமிழர் சேனை!
Thursday, November 10, 2011
தேவரின் புகழை குழைக்க பொய்வேஷம் கட்டும் பொறுக்கி - பூ.சந்திரபோஸ் மீது வழக்கு
பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும் இம்மியளவும் பயன்படவில்லை என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்பவர்
5000 ஆண்டு பெருமையை 50 ஆண்டுகளில் வாழ்ந்து நிருபித்துக் காட்டிய உலகின் மகாத்மா தேவரின் புகழை குலைக்க முற்படும் வகையில் கடந்த நவம்பர்-5 ம் தேதி பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் "பரமக்குடி துப்பாக்கிச் சூடு" சம்பவத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தேவரையும், தேவரினத்தையும் கண்டபடி பேசினான். அதனை தொடர்ந்து கொதித்தெழுந்த உணர்வாளர்கள், நிர்வாகிகள் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் அணிதிரண்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நமது புகாரின் அடிப்படையில் சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
தற்பொழுது அவன் தலைமறைவாகி விட்டான்.

Tuesday, November 8, 2011
தேவரினப் பாதுகாப்பு பேரவை திருமண விழா
சமூக நீதிக் காவலரும், தேவரினப் பாதுகாப்பு பேரவை நிறுவனரும் ஆகிய அய்யா செ.கதிரேசன் அவர்களின் மகன் க.அருண்மொழித்தேவன் - கி.ராஜவினோதா ஆகியோர்களின் திருமண விழா மதுரை மாவட்டம், மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழக திருமண மகாலில் 07-11-11 அன்று காலை 10-00 மணியளவில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மணமக்களுக்கு தேவரினப் பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் சிவ.கலைமணி, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர், சுப்பு, மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Monday, November 7, 2011
கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் மாரடைப்பில் மரணம்
பசும்பொன் தேசிய கழகம் தலைவரும், தேவரின் பேரனும், எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசியல் களத்திலே போராளியாக சுழன்று வந்தவருமான கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் அவர்கள் இன்று (07-11-11) மதியம் மாரடைப்பில் மரணம் அடைந்தார்.
புளிச்சிக்குளம் எஸ்டேட்டில் பொதுமக்கள் பார்வைக்கு அவர்களது தெய்வீக உடலுக்கு இன்று இரவு 7 -00 மணியளவில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், சிற்றரசு, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, ந.இந்திரகுமார், நகைச்சுவை நடிகர் கருணாஸ், மதுரை மாவட்டசெயலாளர் மு.முத்துக்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் மகாதேவன், பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Friday, November 4, 2011
தேவர் நினைவிடத்தில் அஞ்சலி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் செய்தி, சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி.
சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மத்திய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.
தேமுதிக அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் கட்சித் தலைவர் விஜயகாந்த். உடன் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள்.
முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அமைச்சர்கள் (வலமிருந்து) செல்லூர் கே. ராஜு, ஓ. பன்னீர்செல்வம், நத்தம் ஆர். விஸ்வநாதன், ஆர். வைத்தியலிங்கம்,
பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் தி.மு.க. பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன் உள்ளிட்டோர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு. உடன் துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், அமைப்பு செயலாளர்
தேசிய தலைவர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவரின் ஆலயத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மாநில பொருளாளர் ரவிராஜா சேதுபதி, மாநில துணைப் பொதுச்செயலாளர் T.R.K.மணிகண்டன், மதுரை மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பரமக்குடி நகர செயலாளர் அருன்தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Wednesday, November 2, 2011
ராஜராஜ சோழன் சமாதி
சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன்.
இத்தனை பேரும் புகழும் கொண்ட மன்னனின் எல்லா செயல்களுக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சான்றாக இருக்கின்றன. ஆனால், அவர் இறந்த 1014&ம் ஆண்டு அவரது உடல் புதைக்கப்பட்டதா, எரிக்கப் பட்டதா, அது எங்கே நடந்தது என்பது போன்ற கேள்விகள் காலத்தின் இருண்ட பக்கங்களில் காணக் கிடைக்காமலே இருந்தன. இப்போது இந்த விஷயத்தில் சிறு வெளிச்சம் விழுந்திருக்கிறது
Tuesday, November 1, 2011
Hindu outfits cadre held for attempt to sail to Katchatheevu
Rameswaram | Monday, Aug 15 2011 IST
Tamil Nadu Police foiled a bid to hoist Indian National flag at the controversial Katchatheevu Island by arresting 46 activists of Hindu outfits, here today. The Hindu Makkal Katchi (HMK) and Bharathiya Forward Bloc (BFC) Parties had announced they would hoist the national flag at the Katchatheevu

Marathamilar senai Party
Tamil Nadu Police foiled a bid to hoist the Indian National flag at the controversial Katchatheevu Island by arresting 46 activists of some Hindu outfits here today.
The Hindu Makkal Katchi (HMK) and Bharathiya Forward Bloc (BFC) had announced they would hoist the national flag on Katchatheevu on endence Da Independans day, demanding retrieval of the island ceded to Sri Lanka by the Indian Government in 1974 and protection of innocent Tamil Nadu fishermen from frequent attacks by the Sri Lankan Navy.

Saturday, October 29, 2011
பசும்பொன் தேவருக்கு மாலை முரசு செலுத்தும் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 104-வது குருபூஜை விழாவை சிறப்பிக்கும் வகையில் 29 .10 .2011 சனிக்கிழமை வெளியான மாலை முரசு இதழில் தலையங்கப் பக்கத்தில் பசும்பொன் தேவருக்கு முன்னுரிமை அளித்த மாலை முரசு இதழுக்கு மறத்தமிழர் சேனை (marathamilar senai) தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
Monday, October 24, 2011
வள்ளலாரின் கொள்கைகளில் பசும்பொன் தேவர் பெருமகனார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமான் அவர்கள், வள்ளற் பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள். வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் தோய்ந்திருந்தார்கள். தைப் பூசந் தோறும், வடலூரில் தேவர் பெருமகனாரின் சொற்பொழிவு நடைபெறும். அவரது சொற்பொழிவினைக் கேட்பதற்கென மக்கள் வெள்ளம் அலை கடலெனத் திரண்டு வந்தது.
வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து கொள்ளாத சிலர், பெருமானின் மறைவில், பலவிதமான சந்தேகங்களை எழுப்பி, பொது மக்களை மிகவும் குழப்பி வந்தனர்.
வள்ளல் பெருமான் முத்தேக சித்தி அடைந்த உண்மையினை சரிவரப் புரிந்து கொள்ளாத சிலர், பெருமானின் மறைவில், பலவிதமான சந்தேகங்களை எழுப்பி, பொது மக்களை மிகவும் குழப்பி வந்தனர்.
தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் தேவர் 104 வது ஜெயந்தி விழா
தேசிய தலைவர், தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 104 வது ஜெயந்தி விழாவிற்கு வருகைதரும் உறவினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் பசும்பொன் பூமியில், உறவுகளின் உணர்வுகள் சங்கமிக்கும் பொன்னான பொழுதில் வாஞ்சையோடு காத்திருப்போம்.
புண்ணிய பூமியில் எங்களை சந்திக்க விரும்பும் வேளையில் எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
99421 33644
99521 33644
76676 90100
-maraththamilar senai, pasumpon
Saturday, September 24, 2011
Tuesday, September 6, 2011
தேவரினம் தேவையில்லை - மறத்தமிழர் சேனை
மறத்தமிழர் சேனை (maraththamizhar senai) இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தேவரினம் தேவையில்லை என்கிற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மறத்தமிழர் சேனை -யின் மனிதநேய பணி
புதுக்கோட்டை மாவட்ட மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில், 12.08.2011 வெள்ளிக்கிழமை அன்று மதுரை பிரதான சாலை மாவூர் விலக்கில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர்மோர்-தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
மாநில துணைப்பொதுச்செயலாளர் S.M.S.திருப்பதி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கா.ராசு (எ) முருகப்பன் முன்னிலையில் அடுகப்பட்டி V.பழனிச்சாமி அவர்கள் மற்றும் மணிக்காளை அவர்கள் திறந்து வைத்தார்கள்.
Thursday, August 25, 2011
வேங்கைகள் வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம்
1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின் வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல் வேங்கைகள் ஐவருக்கு வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது.
செப்-14 மாலை 4 .00 மணியளவில் நடைபெறுகின்ற பேரணியிலும், மாலை 6.00 மணியளவில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் P.V.கதிரவன் அவர்கள், திரைப்பட நடிகர் கருணாஸ் அவர்கள், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி அவர்கள், தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள், தமிழ்நாடு தேவர் பார்வர்டு பிளாக் தலைவர் இரா.ஜெயச்சந்திர தேவர் அவர்கள், தேவர் தேசிய பேரவை தலைவர் K.C.திருமாறன் அவர்கள்,வீரகுல அமரன் இயக்க தலைவர் கி.இரா.முருகன் அவர்கள், முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் V.K.கவிக்குமார் அவர்கள், வீரத்தமிழர் முன்னணி தலைவர் மு.இரா. சிறுவயல் ரமேஷ் அவர்கள், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.
Saturday, August 20, 2011
மணிடமண்டபம் கட்டும் மறத்தமிழர் சேனை... தடுக்கப்புறப்படும் தலித் அமைப்புகள்! உச்சகட்ட டென்ஷனில் முதுகுளத்தூர்
இளவட்டக்கல்
இளவட்டக்கல்
இது ஒரு திறன் சோதிக்கும் விளையாட்டாகும். மறவர் இனத்தவர் மணவினை கொள்வதற்கு
இவ்விளையாட்டைப் பயன்படுத்துவர். முறைப் பெண்ணினைத் திருமணம் செய்வதற்கும்
விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் இத்திறன் சோதிக்கும் விளையாட்டு
தேர்வு நிலையாக உள்ளது. ஒரு பெண்ணினைப் பலரும் விரும்புவர். அப்போது பெண்ணின்
தந்தை’யார் இளவட்டக் கல்லினைத் துக்கி உயர நிறுத்துகிறாரோ? அவருக்கு என்
பெண்ணைத் தருவேன்’ என்று அறிவித்து விடுவார்.

விழாக்காலத்தில் ஊருக்குப் பொதுவான இடத்தில் இதற்கான போட்டி நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்பவர் இளவட்டக் கல்லைத் துக்கித் தலைக்கு மேலே
பிடித்துக் கீழே போட வேண்டும். இவ்வாறு செய்தவர் வென்றவராகக் கருதப்படுவார்.
கிராமத்துப் பெரியவர் இதற்குப் பஞ்சாயத்துக்காரராக முன்னிற்பார். இவர் கூறும்
நடுநிலைத் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். பண்டைக் காலத்திய மக்களுக்குக்
கையினால் பெரிய கல்லினைத் துக்குவதும் நகர்த்துவதும் வாழ்க்கையோடு சேர்ந்த
தேவையாய் இருந்தது. நாகரிக வளர்ச்சியில் அத்தேவை இல்லாமல் போகவே, அதுவே
உடல்திறன் காட்டும் விளையாட்டாக வளர்ந்தது.

மறவர் இனத்தவர் பணம், நகை போன்றவைகளை முதன்மையாக கருதுவது இல்லை. பெண்ணை
மணந்து கொள்கின்றவன் உடல்திறன் உடையவராக இருக்க வேண்டுமென்பதையே விரும்புவர்.
அவ்வடிப்படையில் இன்றளவும் அவர்களிடையே நிலை பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மதுரை மாவட்டத்திலும் அதன் சுற்றுபுறங்களிலும் இவ்விளையாட்டு நிலவி வருகிறது.

Monday, August 15, 2011
கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற முயற்சி; நிர்வாகிகள் கைது
உடன் வருகைதந்த இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைதுசெய்யப்பட்டு திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.
Sunday, August 14, 2011
மறவர்களின் உரிமை; கச்சதீவை கைப்பற்றுவோம்
மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை கைப்பற்றுவது நமது தலையாய கடமைகளில் ஒன்றாகும். எனவே இந்திய தேசம் 65 வது சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அந்த தருணத்தில் நமது "தேசிய கொடியை" கச்சத்தீவில் ஏற்றுகின்ற போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
இன மானம் போற்றுகின்ற என் உயிர் பங்காளிகளே !
உணர்வோடு அணிதிரண்டு வாரீர்!
Monday, August 8, 2011
மருது பாண்டியர்
என் தந்தை புரட்சியாளர் டிராட்ஸ்கியின் இயக்கம் சார்ந்தவர் என்பதால் புரட்சியாளர்களைகப் பற்றி அரிய புத்தகங்களை நிறைய சேகரித்து வைத்திருந்தார். எங்கள் இளம் வயதிலேயே அவற்றை நாங்கள் படிக்கத் தூண்டுவார். குஞ்சலி மரக்காயர் , திப்பு , கான்சாகிபு கம்மாத்தான் , புலித் தேவர் , மருது பாண்டியர் , கட்டபொம்மன் போன்றவர்கள் பற்றிய சிறு சிறு புத்தகங்களை எங்களுக்கு அளிப்பார். திப்புதான் அப்போதைய என் இளம் வயது “HERO”.
பின்பு என் குடும்பத்தோடும் கல்லூரி மாணவர்களோடும் இம்மாதிரியான மனிதர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது அப்போது மகிழ்வான ஒன்று. இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையேனும் திப்புவின் கல்லறை செல்வது வழக்கம்.
மருது பாண்டியர்
மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும்

தொண்டைமான் செப்பேடுகள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : இராசு.செ
பதிப்பு :முதற் பதிப்பு (2004)
விலை :70 .00 In Rs
பிரிவு :தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் :232
பதிப்பகம் :தமிழ்ப் பல்கலைக்கழகம்
முகவரி :திருச்சி சாலை
தஞ்சாவூர் 613005
தமிழ்நாடு
இந்தியா
புதுக்கோட்டை, அறந்தாங்கி தொண்டைமான்கள் செப்பேடுகள் 48 ( 24 + 24 )அடங்கியுள்ளது. மாணிக்கவாசகர் அருள் பெற்ற திருப்பெருந்துறை பற்றிய 10 செப்பேடுகள் உள்ளன. மாணிக்கவாசகரை எழுந்தருளச்செய்து, பின்னே திருவாசகம் ஓதிச் சென்றதை ஒரு செப்பேடு கூறுகிறது. முதல் முறையாக அறந்தாங்குத் தொண்டைமான் அரச மரபு விளக்கம் பெறுகிறது.
பூலித்தேவன்
ஆசிரியர்: செவல்கு |
ளம் ஆச்சா வெளியீடு: வின் வின் புக்ஸ் பகுதி: வரலாறு விலை: ரூ.30 ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து, நம் நாடு சுதந்திரம் பெற போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பூலித்தேவன். 18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே ஆற்காடு நவாப்பையும், ஆங்கிலேயர்களையும் எதிர்த்து வந்தார் பூலித்தேவன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். பாளையக்காரர்களிடமிருந்த ஒற்றுமையின்மை, திருவாங்கூர் மன்னரின் துரோகம், கான்சாகிப் யுத்தம் தென் தமிழ்நாடு ஆங்கிலேயர் வசமாவதற்கு காரணமாயிற்று. சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்தால், பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட நம் வருங்கால சந்ததியினர் முன் வருவர். அதற்கு இத்தகைய நூல்கள் உதவும். |
வீரன் பூலித்தேவன். poolithevar
காத்தப்ப பூலித்தேவனுக்கு ஒரு நெடியவரலாறு இருக்கிறது.சரித்திரத்தின் சுழற்சியில் வரலாற்றுக் குறிப்பு சுவடுகளின்அடிப்படையில் 1378 ஆம் ஆண்டு வரகுராம சிந்தாமணிபூலித்தேவர் தொடங்கி இந்தாண்டோடு சரியாக 633 ஆண்டுகள்ஆகின்றன. வழிவழியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் பெயர்சூட்டுகிற போது பாட்டனின் பெயரை பேரனுக்குச் சூட்டுகிறவழக்கம் நம் நாட்டில் பல குலங்களில் உள்ள காரணத்தால்காத்தப்ப பூலித்தேவன் என்ற பெயர் தொடர்ந்து பேரன்களுக்குநான்காவது பெயராக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதிசித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும்பிள்ளையாக பிறந்த மாமன்னன் தான் காத்தப்ப பூலித்தேவர்ஆவார். 11 வயதிலேயே, அரியணைக்கு வரநேர்ந்தசின்னஞ்சிறு பிள்ளையான மாவீரன்தான் காத்தப்பபூலித்தேவன். 2015 ம் ஆண்டு வந்தால் 300 பிறந்து ஆண்டுகளாகிறது.
மாவீரன் பூலித்தேவன்
முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது.
மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.

பூலித்தேவனின் வீரச்சமர்
பூலித்தேவனின் வீரச்சமர்
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப்பாடல் என பாட்டுடைத்தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 1715-ல் சித்திரபுத்திரதேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான். தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.
1736-ல் மதுரைநாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாளையங்கள் திறை செலுத்த மறுத்து தனித்தே செயல்பட ஆரம்பித்தன. மதுரையை வெற்றிகொண்ட ஆற்காட்டு நவாபு முகமது அலி தனது சகோதரன் அப்துல் ரஹீம் என்பவன் தலைமையில் 1751-ம் ஆண்டு 2500 குதிரைப் படைகளையும் 300 காலாட்படைகளையும் 30 ஐரோப்பியர் பட்டாளத்தையும் அனுப்பி பாளையங்களை அடக்கி வரியை பிடுங்கிவர உத்திரவிட்டான். இப்படையை கும்பினியர் தளபதி லெப்டினட் இன்னிசு வழிநடத்திச் சென்றார். இதை அறிந்த பூலித்தேவன் சுற்றுவட்டாரப்பாளைங்களை ஒன்று திரட்டி எதிர்க்கத் தயாரானான். படை கண்டு அடங்கி கப்பம் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பூலித்தேவனின் படைபலம் கண்டு பின்வாங்கிச் சென்றனர்.
Subscribe to:
Posts (Atom)