கோலாலம்பூர் : மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத்தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக உள்ளனர். அவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வருபவர்களுக்காக பொது மக்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசுக்கு மறத்தமிழர் சேனை maraththamilar senai யின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
-maraththam izhar senai