★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 14, 2011

மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்

பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும்   இம்மியளவும் பயன்படவில்லை  என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்பவன்  தேவரைப்பற்றியும், தேவர் சமூகத்தையும் அவதூறாக பேசியுள்ளான்.

5000 ஆண்டு பெருமையை 50 ஆண்டுகளில் வாழ்ந்து நிருபித்துக் காட்டிய உலகின் மகாத்மா தேவரின் புகழை குலைக்க முற்படும் வகையில் கடந்த நவம்பர்-5 ம் தேதி பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில்  நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய பொறுக்கி "பரமக்குடி துப்பாக்கிச் சூடு" சம்பவத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தேவரையும், தேவரினத்தையும் கண்டபடி பேசினான். அதனை தொடர்ந்து கொதித்தெழுந்த உணர்வாளர்கள், நிர்வாகிகள் மறத்தமிழர் சேனை - maraththamilar senai மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் அணிதிரண்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நமது புகாரின் அடிப்படையில் சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தற்பொழுது அவன் தலைமறைவாகி விட்டான்.

அவனை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சில சாதி வெறிபிடித்த அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய கூறியும் மாபெரும் கண்டனக் கூட்டம்  நடத்த மறத்தமிழர் சேனை சார்பில் முடிவெடுத்தோம். அனுமதி மறுக்கப் பட்டதும்,  பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருநாமத்தை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம். என்கிற பெயரில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் மறத்தமிழர் சேனை யின் சார்பில் மனுசெய்தோம்.



 மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு இன உணர்வாளர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் என கிராமம் கிராமமாக அழைப்பு விடுத்தோம். இந்த தகவல் உளவுத்துறையின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் நம் இயக்கத்தோடு சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 16-11-11 காலை  8:00 மணியளவில் நம்மை தொடர்புகொண்ட பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர் த.சுபாஷ் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள் நம்மை சந்தித்து பேச விருப்புவதாக தெரிவித்தார். நாமும் சம்மதிக்க பரமக்குடி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையான "வைகை இல்லம்" த்தில், காலை 10:15 மணியளவில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

சமாதான கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள் அரசு சார்பிலும், மறவர்கள் சார்பில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், முக்குலம் அறக்கட்டளையை சார்ந்த உலகநாதன் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நண்பகல் 12:15 மணியளவில் முடிவுற்றது.

மீண்டும் நண்பகல் 12:45 மணியளவில் சமாதான கூட்டம் தொடங்கியது. இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள், திண்டுக்கல்  மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் அவர்கள்  அரசு சார்பிலும், மறவர்கள் சார்பில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்,முக்குலத்தோர் நல அபிவிருத்தி சங்கத் தலைவர் விஜயசாமி அவர்கள், எம்.எம்.ராமசந்திரன் அவர்கள், வெள்ளைச்சாமி அவர்கள், முக்குலம் அறக்கட்டளையை சார்ந்த உலகநாதன் அவர்கள், வழக்கறிஞர் திருச்செல்வம் அவர்கள்  கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றிலும் சமரச முயற்சி தோல்வி அடைந்ததும் பரமக்குடி நகர் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. சமரச முயற்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நண்பகல்  2:30 மணியளவில் அனைவரும் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பரமக்குடி வட்டாட்சியர் ச.செல்லப்பா அவர்களின் மூலமாக மாலை 4:00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் அவர்கள் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நம்மை சந்தித்து சமரச முயற்சியில் கலந்து கொள்வார் என கடிதம் அனுப்பப்பட்டது.

 அதனை தொடர்ந்து பரமக்குடி "தேவர் மாளிகை" யில் நிர்வாகிகள், இன உணர்வாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் திரண்டனர். அடுத்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் பற்றி காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினர். இறுதியாக மாலை 4:15 மணியளவில் பரமக்குடி வைகை இல்லத்தில்  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வி.அருண்ராய் அவர்கள் தலைமையில், சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி.ராஜேஸ்தாஸ் அவர்கள், திருச்சி டி.ஐ.ஜி. அமல்ராஜ் அவர்கள், இராமநாதபுரம் சரக  டி.ஐ.ஜி.சந்தீப்மிட்டல் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ச.காளிராஜ் மகேஷ்குமார் அவர்கள், திண்டுக்கல்  மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் அவர்கள், பரமக்குடி ஆர்.டி.ஓ. மீரா பரமேஸ்வரி அவர்கள், வட்டாட்சியர் ச.செல்லப்பா அவர்கள், பரமக்குடி துணைக் கண்காணிப்பாளர் கணேசன் அவர்கள்,  பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர் த.சுபாஷ் அவர்கள்,   அரசு சார்பிலும், தேவரினத்தவர்  சார்பில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், முக்குலத்தோர் நல அபிவிருத்தி சங்கத் தலைவர் விஜயசாமி அவர்கள், எம்.எம்.ராமசந்திரன் அவர்கள், வெள்ளைச்சாமி அவர்கள், கிழக்கு தேவர் பேரவை தலைவர் காசிநாதன் அவர்கள், பொருளாளர் ஆப்பனூர் சண்முகம் அவர்கள்,  முக்குலம் அறக்கட்டளையை சார்ந்த உலகநாதன் அவர்கள், வழக்கறிஞர் திருச்செல்வம் அவர்கள்  கலந்து கொண்டனர்.

நமது முக்கியமான கோரிக்கையான பூ.சந்திரபோஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு என்பது நிராகரிக்கப் பட்டதும் மேலும் பதட்டம் நிலவியது. அதே சமயத்தில் மற்ற நமது அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே "உண்ணா நிலை அறப்போராட்டம்" கைவிடப்படும். என்று இரவு 8:45 மணியளவில் அனைவரும் சேர்ந்த முடிவாக வெளியிட்டோம்.

"என்னை பொறுத்த வரையில் இந்த சமாதான முடிவில் சம்மதமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனாலும் உறவுகளின் பொறுமை என்கிற சகிப்புத்தன்மைக்கு நானும் அடிபணிய நேரிட்டதற்கு நிர்வாகிகள், இன உணர்வாளர்கள், பின்பு வரக்கூடிய ஆய்வாளர்கள் என ஒட்டுமொத்த சமூகத்திடமும் மறத்தமிழர் சேனையின் சார்பில் மன்னிப்பு கோருகிறேன். எதிர் வரும் காலங்களில் இது போன்ற பேச்சுவார்த்தைகளில் 'கரைவேட்டி கட்டிய உறவினர்களை அனுமதிப்பதில்லை' என்கிற உறுதியான முடிவையும் எடுத்துள்ளோம்.


தினமணி நாளிதழில் வெளியான செய்தி

தினதந்தி நாளிதழில் வெளியான செய்தி