தமிழ்நாடு நதிநீர் உரிமையை இழந்ததற்கு கருணாநிதிதான் காரணம்: டாக்டர் ராமதாஸ் பேட்டி
சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு போய் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாமக நிறுவனர் ராம தாஸ் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதி திராவிட இயக்க நூற்றாண்டு விழாவில், தமிழ் வாழ, தமிழர்கள் வாழ என்று சொல்வது புரிகிறது. திராவிடம் செழிக்க என்று அவர் சொல்வது எனக்கு புரியவில்லை.திராவிடம் செழிக்க என்றால் என்ன அர்த்தம். 45 ஆண்டாக தமிழகத்தை ஆண்டு 5 முறை முதல்- அமைச்சராக இருந்த கலைஞர் என்ன சமதர்மத்தை கொண்டு வந்துள்ளார். எப்போதெல்லாம் அவர் ஆட்சியில் இல்லையோ அப்போதெல்லாம் ஆரியர், திராவிடர் என்று பேசுவார். மத்திய அரசில் திமுக பல ஆண்டுகளாக அங்கம் வகிக்கிறது. ஆனால் தமிழை ஆட்சி மொழியாக்கவோ, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவோ முயற்சி எடுக்கவில்லை.
இதற்காக விரைவில் திராவிட மாயை என்ற கருத்தரங்கம் சென்னையில் நடத்த உள்ளோம். திமுக ஆட்சியில் இருக்கும்போது பக்கத்து மாநிலங்களால் தமிழகம் ஆற்று நீர் உரிமையை இழந்தது. தமிழகம் இன்று நதிநீர் உரிமையை இழந்ததற்கு கலைஞர்தான் காரணம். செம்மொழிக்காக கலைஞர் என்ன செய்தார். மாநாடு நடத்தினால் மட்டும் போதுமா? அ.தி.மு.க. ஆட்சியில் யாரும் எதுவும் சொல்ல முடியாது திராவிட ஆட்சிகளால் இதுவரை தமிழ்நாடு எந்த நிலையிலும் முன்னேறவில்லை. அதிமுக ஆட்சியிலும் தமிழகம் இருண்டுபோய் தான் இருக்கிறது.கூடங்குளம் மட்டுமல்ல எங்கேயும் அணு உலைகளே வேண்டாம் என்பதுதான் எப்போதும் என்னுடைய நிலைப்பாடு. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.