★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, December 14, 2015

வேலுநாச்சியார் நினைவு நாள் - வீரமங்கையர் தினம் - மறத்தமிழர் சேனை கோரிக்கை.

மறத்தமிழர் சேனை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காலை 10.00 மணியளவில் பரமக்குடியில் மாவட்ட செயலாளர் ம.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி ஒன்றிய செயலாளர் வ.முருகன் வரவேற்புரை ஆற்றிட மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சே.சேகர் முன்னிலை வகித்தார்.

மாநில தலைவர் புதுமலர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர்-25 அன்று சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 219 நினைவு நாளை சிவகங்கையில் சிறப்பாக கொண்டாடுவது எனவும், அவரது நினைவு நாளை வீரமங்கையர் தினமாக மத்திய அரசு அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக அரசின்  சார்பில் வீரதீர செயல் புரியும் பெண்களுக்கு வேலுநாச்சியார் பெயரில் விருது வழங்கிடவும், ஏழ்மையில் வாடும் வேலுநாச்சியார் வம்சா வழியினருக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.


கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ம.முருகன், பரமக்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் மு.பிரபாகரன், பரமக்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மா.பாலமுருகன், முத்தருள், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் செயலாளர் இ.மலைமேகம் நன்றியுரை ஆற்றினார்.

Monday, October 26, 2015

கர்நாடகாவில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா

சும்பொன் தேவர் திருமகனாரின் 108 வது ஜெயந்தி விழாவும், 53 வது குருபூஜை விழாவும் கர்நாடக தேவர் சங்கம் சார்பில் 25.10.2015 அன்று காலை 09.00 மணிமுதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரதீபா தன்ராஜ் அவர்களும், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், பெங்களூர் தமிழ்ச் சங்க தலைவர் கோ.தாமோதரன் அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். 


கூட்டத்தில் கர்நாடக தேவர் சங்க தலைவர் போஸ் அவர்களும், முன்னாள் தலைவர் பாபு கே.தேவர் அவர்களும், முன்னாள் தலைவர் ஞானகுரு அவர்களும், கர்நாடக தேவர் சங்க செயலாளர் தமிழரசன் அவர்களும், ஒசூர் முக்குலத்தோர் சங்க செயலாளர் ராமசாமி அவர்களும், மறத்தமிழர் சேனை தொண்டரணி செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன் அவர்களும் மற்றும் தேவர் சங்க நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. சமூக சேவகர் குமார் ஜாகிர்தார் அவர்கள் முன்னிலை வகிக்க, முன்னாள் கல்விக்குழு தலைவர் பி.தன்ராஜ் அவர்கள் துவங்கி வைத்தார். பின்பு கண்கவர் கலைநிகழ்வுகள் மற்றும் பரத நாட்டிய நடனம் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டன.

மாலை மாமன்ற உறுப்பினர் பிரதீபா தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வும், விருந்தினர்கள் சிறப்புரையும் நடைபெற்றது. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமது உரையில் “இன்றைய நாள் எமது வாழ்விலே மிக முக்கியமான நாளாக அமைந்து விட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கிறது. ஒன்று இன, மொழி உணர்வு மேலோங்கிய கருநாடக மக்களின் தலைநகராக விளங்கக்கூடிய பெங்களூர் மாநகரில் இனத்தைக் கூட்டி மிகப்பெரிய விழா எடுக்கும் உங்களை சந்திப்பது. இரண்டு ஒரு நகரம் எப்படி தொழில்துறையில் முன்னேறினாலும் இயற்கையை சிதைக்காமல் பசுமை போர்த்தியபடியே இருக்கக்கூடிய இந்த நகரை பார்ப்பது. அடுத்ததாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் இந்திய அளவில் முறுக்கு தயாரிக்கும் தொழிலுக்குள் பிரமலைக்கள்ளர் சமூகம் திட்டமிட்டு எப்படி புகுந்தது என்பது குறித்து அறிகிற ஆவல்தான். அண்ணன் தமிழரசன் அவர்கள் அகில இந்திய முறுக்கு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். அவரிடமும் கூட இதனை கேட்டிருக்கிறேன். குற்றப்பரம்பரைச் சட்டம் என்கிற கொடிய சட்டத்தால் நசுக்கப்பட்ட மக்கள் இன்று இந்திய அளவில் தொழில் ரீதியாக முன்னேறி வருவதும், உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நினைத்த நேரத்தில் கோடி ரூபாயைக்கூட திரட்டி விடுகிற அளவிலே பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்பதும் வியப்புக்குரியது தான். அதுபோலவே, இந்த பெங்களூர் நகரத்தில் பல குடும்பங்கள் முப்பது நாற்பது ஆண்டுகளைக் கடந்து தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உயர்ந்து நிற்பது பெருமைக்குரிய செயல் ஆகும். சகோதரி பிரதீபா தன்ராஜ் அவர்கள் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து உறவுகள் சொன்ன போது எல்லையற்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன். அண்ணன் ஞானகுரு அவர்கள் பேசும் போது தெரிவித்தார், இவரைப் போலவே பலரும் முன்பு அரசியல் ரீதியான பதவிகளை அடைந்திருப்பதை. நல்ல துவக்கம் இது. என்னைப்போன்றவர்கள் தமிழக அரசியல் அரங்கில் கால் பதிக்க போராடி வரும் நிலையில் இங்கே அந்நிய மண்ணில் அதுவும் மொழிவெறி ஓங்கிய மண்ணில் நீங்கள் முத்திரை பதிப்பது வாழ்த்துக்குரியது. நாம் அரசியல் அதிகாரத்தை கைபற்றினால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும் ஆகவே உறவினர்களே நீங்கள் எதைச் செய்தாலும் அரசியல் அதிகாரத்தை நோக்கியே செய்யுங்கள். அடுத்ததாக மொழி உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டி வளருங்கள். இந்த மாநிலத்தில் நீங்கள் மொழிச் சிறுபான்மையினர்களாக இருக்கலாம். இங்குள்ள மொழியையும், ஆங்கில மொழியையும் உங்கள் பிள்ளைகள் கற்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்துகொண்டே இருக்கலாம். ஆனாலும் தமிழையே கற்க செய்யுங்கள். இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரங்கம் பெங்களூர் தமிழ்ச் சங்க கட்டிடம் என்பது எவ்வளவு மகிழ்வை எனக்கு தருகிறது என்பதை வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. ஏனென்றால் நாம் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல் பாண்டித்துரை தேவர் அவர்களின் வழிவந்தவர்கள். எனவே நாம் நமது இனத்தையும் மொழியையும் கட்டிக் காக்கும் விதத்திலேயே பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதையே இந்த தேவர் ஜெயந்தி நாளில் உறுதியாக நீங்கள் ஏற்க வேண்டும் எனச் சொல்லி விடைபெறுகிறேன்” என தெரிவித்தார்.

Friday, September 25, 2015

ரிபெல் சிலை திறக்க மறத்தமிழர் சேனை வழக்கு

ந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு 1809 ஜனவரி 23 அன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. மேலும், கடந்த 21.12.2012 அன்று வெளியிட்ட அரசாணை (அ.எண்:683) மூலம் ரூ.4,51,620/- ஒதுக்கீடு செய்யப்பட்டு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக புல எண்.320-ல் எட்டு அடி உயரமுள்ள வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 28, 2015

கேரளாவின் காய்கறி அரசியல்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த பொய் குற்றச்சாட்டினை தமிழக விவசாயிகள் கடுமையாக மறுத்துள்ளனர்  என்றாலும் கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படும் என்று கேரள அரசு கூறியுள்ளது.

Monday, July 27, 2015

குதிரைவாலி வெண்பொங்கல்

தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை, பாசிப் பருப்பு - கால் கோப்பை, மிளகு - ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, நெய் - ஒரு மேசைக்கரண்டி, வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஆர்க், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.
பலன்கள்: சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.

தினை அதிரசம்

தேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார்.
பலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.

Thursday, July 23, 2015

தமிழகத்தில் புரோட்டா, மைதா தடை வேண்டும்

மிழர்களின் பாரம்பரிய உணவுகளுக்கெதிரான திட்டமிட்ட பிரச்சாரம், மேற்கத்திய கலாச்சார நுகர்வு, தொலைக்காட்சி விளம்பரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளாகிய கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு, சிறுதானியங்கள் ஆகியவற்றை நாகரிக்கத்தின் பெயரால் இழந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு பழக்கம் தொழுநோய் போல எல்லா வயதினர்களையும் தொற்றிக்கொண்டது.
குறிப்பாக, தென்தமிழகத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய கெடுஉணவு பரோட்டா முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய உணவாகும், விதவிதமான வடிவங்களில், சுவைகளில் செய்து தரப்படும் புரோட்டா மனித உடலுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய மைதாவில் தயாராகிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல உலக நாடுகளில் மைதாவின் பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவின்  தீமைகள் குறித்து  ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

Sunday, June 14, 2015

மறத்தமிழர் சேனை 1,08,000 பார்வையாளர்களைக் கடந்துள்ளது, வணங்குகிறோம்.

பிறந்த பொழுதே இறந்து போவோமென அறிந்து வாழும் அடலேறுகளே ! வணக்கம்.

                       இந்த உலகத்திலே பிறந்த ஒவ்வொரு மனிதனும், தான் பிறந்து வளர்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் விட்டுவிட்டு செல்லவேண்டும். அப்பொழுதுதான் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையென்றால் "கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே" நாமும் வரலாறு அற்ற, மறந்துபோன இறந்து போனவர்களில் ஒருவராக ஆகித்தான் ஆவோம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மறத்தமிழர் சேனை இணையதளம் தொடங்கப்பட்ட மிகக்குறுகிய நாட்களிலேயே 1,08,000  உறவுகளை தாண்டி வெற்றிநடை போடுகிறது. நாங்கள் இணையத்தில் மட்டும் இயங்கும் 'வாய்ச்சவடால்' அமைப்பு அல்ல. அதே சமயம் இணைய அரசியலிலும் எங்களால் சிறப்பாக இயங்கமுடியும் என்பதற்கான அத்தாட்சி இது. 

                     இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இதனை, இத்தனை எளிதில் சாத்தியமாக்கிய மறத்தமிழர் சேனை நிர்வாகிகளையும், எங்கள் மீது அளவிடமுடியாத பிரியங்கொண்ட உறவினர்களையும், எவ்வளவு சிறப்பான செயல்களையும் ஒருநொடியில் உதறிவிட்டு தொடர்ந்து விமர்சிக்கும் ஆலோசகர்களையும், நெடிய பயணத்தில் உடன்வருவதைப் போல் நடித்து எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் சக இயக்கத்தார்களையும், எதிரியாகவே இருந்தாலும் என்னதான் எழுதுகிறார்கள் என்று தினந்தினம் எங்களை பார்வையிடும் மாற்று சமூகத்தார்களையும் பெருமையுடன் வணங்குகிறோம்.
   
                                              இது நம் சமூகத்திற்கான வெற்றி. 

Tuesday, June 2, 2015

மாமன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

சிவகங்கை சீமையின் இரண்டாம் மாமன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் அவர்களின் நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது.

Thursday, May 14, 2015

மீத்தேன் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 22 இடங்களில் ONGC மூலம் மீத்தேன் எடுக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இன்று (14.05.15) காலை 10.00 மணியளவில் கருத்துக்கேட்பு கூட்டம் இராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார்  தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ராஜேந்திர பாபு, உதவி ஆட்சியர் வினித் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


தமிழகத்தின் இயற்கை வளமும், கனிம வளங்களும் முன்னமே சிதைக்கப்பட்டு வருகின்றன.  இராமநாதபுரம் மாவட்டம் கடும் வறட்சியான பகுதியாகவும், சீமைக்கருவேல மரங்களின் கொடிய ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து  பெருமளவில் விவசாயமும் அழிந்து வருகிறது. இந்நிலையில், வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விவசாய நிலங்களை கைப்பற்றி கிணறுகள் அமைப்பது மேலும் பல இடர்களை ஏற்படுத்தும். ஆகவே மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கடும் எதிர்ப்பை வாக்குமூலமாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தார்கள்.