மறத்தமிழர் சேனை
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காலை 10.00 மணியளவில்
பரமக்குடியில் மாவட்ட செயலாளர் ம.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி
ஒன்றிய செயலாளர் வ.முருகன் வரவேற்புரை ஆற்றிட மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
சே.சேகர் முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் புதுமலர்
பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர்-25
அன்று சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின்
219 நினைவு நாளை சிவகங்கையில் சிறப்பாக கொண்டாடுவது எனவும், அவரது நினைவு நாளை ‘வீரமங்கையர் தினமாக’ மத்திய அரசு அறிவித்திட தமிழக
அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழக அரசின் சார்பில் வீரதீர செயல் புரியும் பெண்களுக்கு ‘வேலுநாச்சியார் பெயரில் விருது’ வழங்கிடவும், ஏழ்மையில் வாடும் வேலுநாச்சியார் வம்சா வழியினருக்கு மாதாந்திர பென்ஷன்
வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட
இளைஞர் அணி செயலாளர் ம.முருகன்,
பரமக்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் மு.பிரபாகரன், பரமக்குடி
ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மா.பாலமுருகன், முத்தருள், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் செயலாளர் இ.மலைமேகம் நன்றியுரை
ஆற்றினார்.