★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, October 26, 2015

கர்நாடகாவில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா

சும்பொன் தேவர் திருமகனாரின் 108 வது ஜெயந்தி விழாவும், 53 வது குருபூஜை விழாவும் கர்நாடக தேவர் சங்கம் சார்பில் 25.10.2015 அன்று காலை 09.00 மணிமுதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரதீபா தன்ராஜ் அவர்களும், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், பெங்களூர் தமிழ்ச் சங்க தலைவர் கோ.தாமோதரன் அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். 


கூட்டத்தில் கர்நாடக தேவர் சங்க தலைவர் போஸ் அவர்களும், முன்னாள் தலைவர் பாபு கே.தேவர் அவர்களும், முன்னாள் தலைவர் ஞானகுரு அவர்களும், கர்நாடக தேவர் சங்க செயலாளர் தமிழரசன் அவர்களும், ஒசூர் முக்குலத்தோர் சங்க செயலாளர் ராமசாமி அவர்களும், மறத்தமிழர் சேனை தொண்டரணி செயலாளர் மு.முத்துக்குமார பாண்டியன் அவர்களும் மற்றும் தேவர் சங்க நிர்வாகிகள், முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது. சமூக சேவகர் குமார் ஜாகிர்தார் அவர்கள் முன்னிலை வகிக்க, முன்னாள் கல்விக்குழு தலைவர் பி.தன்ராஜ் அவர்கள் துவங்கி வைத்தார். பின்பு கண்கவர் கலைநிகழ்வுகள் மற்றும் பரத நாட்டிய நடனம் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டன.

மாலை மாமன்ற உறுப்பினர் பிரதீபா தன்ராஜ் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வும், விருந்தினர்கள் சிறப்புரையும் நடைபெற்றது. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமது உரையில் “இன்றைய நாள் எமது வாழ்விலே மிக முக்கியமான நாளாக அமைந்து விட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கிறது. ஒன்று இன, மொழி உணர்வு மேலோங்கிய கருநாடக மக்களின் தலைநகராக விளங்கக்கூடிய பெங்களூர் மாநகரில் இனத்தைக் கூட்டி மிகப்பெரிய விழா எடுக்கும் உங்களை சந்திப்பது. இரண்டு ஒரு நகரம் எப்படி தொழில்துறையில் முன்னேறினாலும் இயற்கையை சிதைக்காமல் பசுமை போர்த்தியபடியே இருக்கக்கூடிய இந்த நகரை பார்ப்பது. அடுத்ததாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் இந்திய அளவில் முறுக்கு தயாரிக்கும் தொழிலுக்குள் பிரமலைக்கள்ளர் சமூகம் திட்டமிட்டு எப்படி புகுந்தது என்பது குறித்து அறிகிற ஆவல்தான். அண்ணன் தமிழரசன் அவர்கள் அகில இந்திய முறுக்கு வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். அவரிடமும் கூட இதனை கேட்டிருக்கிறேன். குற்றப்பரம்பரைச் சட்டம் என்கிற கொடிய சட்டத்தால் நசுக்கப்பட்ட மக்கள் இன்று இந்திய அளவில் தொழில் ரீதியாக முன்னேறி வருவதும், உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நினைத்த நேரத்தில் கோடி ரூபாயைக்கூட திரட்டி விடுகிற அளவிலே பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்பதும் வியப்புக்குரியது தான். அதுபோலவே, இந்த பெங்களூர் நகரத்தில் பல குடும்பங்கள் முப்பது நாற்பது ஆண்டுகளைக் கடந்து தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உயர்ந்து நிற்பது பெருமைக்குரிய செயல் ஆகும். சகோதரி பிரதீபா தன்ராஜ் அவர்கள் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து உறவுகள் சொன்ன போது எல்லையற்ற மகிழ்ச்சியை உணர்ந்தேன். அண்ணன் ஞானகுரு அவர்கள் பேசும் போது தெரிவித்தார், இவரைப் போலவே பலரும் முன்பு அரசியல் ரீதியான பதவிகளை அடைந்திருப்பதை. நல்ல துவக்கம் இது. என்னைப்போன்றவர்கள் தமிழக அரசியல் அரங்கில் கால் பதிக்க போராடி வரும் நிலையில் இங்கே அந்நிய மண்ணில் அதுவும் மொழிவெறி ஓங்கிய மண்ணில் நீங்கள் முத்திரை பதிப்பது வாழ்த்துக்குரியது. நாம் அரசியல் அதிகாரத்தை கைபற்றினால் மட்டுமே நாம் நினைத்ததை சாதிக்க முடியும் ஆகவே உறவினர்களே நீங்கள் எதைச் செய்தாலும் அரசியல் அதிகாரத்தை நோக்கியே செய்யுங்கள். அடுத்ததாக மொழி உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டி வளருங்கள். இந்த மாநிலத்தில் நீங்கள் மொழிச் சிறுபான்மையினர்களாக இருக்கலாம். இங்குள்ள மொழியையும், ஆங்கில மொழியையும் உங்கள் பிள்ளைகள் கற்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்துகொண்டே இருக்கலாம். ஆனாலும் தமிழையே கற்க செய்யுங்கள். இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரங்கம் பெங்களூர் தமிழ்ச் சங்க கட்டிடம் என்பது எவ்வளவு மகிழ்வை எனக்கு தருகிறது என்பதை வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. ஏனென்றால் நாம் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த வள்ளல் பாண்டித்துரை தேவர் அவர்களின் வழிவந்தவர்கள். எனவே நாம் நமது இனத்தையும் மொழியையும் கட்டிக் காக்கும் விதத்திலேயே பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதையே இந்த தேவர் ஜெயந்தி நாளில் உறுதியாக நீங்கள் ஏற்க வேண்டும் எனச் சொல்லி விடைபெறுகிறேன்” என தெரிவித்தார்.