தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பழங்கள்
மற்றும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கேரள
அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த பொய் குற்றச்சாட்டினை தமிழக விவசாயிகள் கடுமையாக மறுத்துள்ளனர் என்றாலும் கேரள அரசின் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படும் என்று கேரள அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகவே, வருகிற 1–ந் தேதி முதல் அனைத்து சோதனை சாவடிகளிலும் காய்கறி லாரிகள் மற்றும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். கேரள உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து லைசென்சு வாங்கும் லாரிகள் மட்டுமே கேரளாவுக்குள் வரலாம். ஏனைய லாரிகள், வாகனங்கள் ஆகஸ்டு 4–ந் தேதிக்குள் லைசென்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு வாங்காத வாகனங்கள் கேரளாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.
கேரள அரசின் தன்னிச்சையான உள்நோக்கம் கொண்ட இந்த அறிவிப்பு வன்மையாக
கண்டிக்கத்தக்கது ஆகும். இதற்கு பதிலாக தமிழக, கேரள விஞ்ஞானிகள் சேர்ந்து காய்கறிகளின் தரம் குறித்து ஆய்வு செய்வதோடு இயற்கை
உரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதனைவிடுத்து, மாட்டிறைச்சி
தடையின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது. ரசாயன நச்சுகளுக்கு எதிராக
செயல்படும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் அரசுகளின்
செயல்பாடுகள் வரவேற்ககூடிய ஒன்றே.! ஆயினும், கேரள அரசின்
உடனடி தடை போன்ற அறிவிப்புகள் அரசியல், அணை காரணம்
கொண்டவையாக இருக்கிறது. குறிப்பாக மண் சார்ந்த அறிவற்ற நிலைப்பாட்டோடு இந்த
பிரச்சனையை அணுகியிருப்பது தெளிவாக தெரிகிறது.
மண்ணின் தன்மையை மாற்ற குறைந்த பட்சம் மூன்று மாதங்களாவது
ஆகும். ஒரு விளைபொருள் விளைவித்து பயன்பாட்டிற்கு வர ஆகும் காலமும் கவனத்தில்
கொள்ளவேண்டிய ஒன்றாகும். அப்படியிருக்க பத்துநாட்கள் அவகாசம் கூட வழங்காத ‘தடை’ ஆராயத்தக்கது. மேலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள், பழங்கள் கொண்டு
செல்லப்பட்டாலும் எழுபது சதவிகிதம் கர்நாடக, ஆந்திர விவசாயிகளிடமிருந்து
கொள்முதல் செய்யப்படுபவை. அப்படியிருக்க எந்த விவசாயி, நிலம், தெளித்த மருந்துகள் எவை போன்ற பல கேள்விகளுக்கு நடைமுறையில் பதில் சொல்வது
கடினம் ஆகும்.
நகரமயமாக்கலும், நவீனமும், நாகரிகமும் பெருமளவில் விவசாய தொழிலை, நிலத்தை சிதைத்துவிட்ட நிலையில் எஞ்சிய விவசாயிகளையும் அந்த தொழிலிலிருந்து
அப்புறப்படுத்தும் விதமாக கேரள அரசு செயல்படுவதை மறத்தமிழர் சேனை வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், நச்சற்ற இயற்கை விவசாயத்தை அனைத்து துறைகளின் வாயிலாகவே
எட்ட இயலும்.