தமிழர்களின்
பாரம்பரிய உணவுகளுக்கெதிரான திட்டமிட்ட பிரச்சாரம்,
மேற்கத்திய கலாச்சார நுகர்வு, தொலைக்காட்சி விளம்பரங்கள்
வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளாகிய கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு,
சிறுதானியங்கள் ஆகியவற்றை நாகரிக்கத்தின் பெயரால் இழந்து உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் ‘துரித உணவு’ பழக்கம்
தொழுநோய் போல எல்லா வயதினர்களையும் தொற்றிக்கொண்டது.
கோதுமை
மாவில் பென்சாயல் பெராக்சைட் (benzoyl peroxide ) என்கிற இராசயனத்தைக்
கொண்டு மைதாவாக மாற்றுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இது
தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க
கலக்கப்படுவதோடு, மேலும்
Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar,
Saccharine , Ajino motto போன்ற
உபபொருட்களும் சேர்க்கப்படுகிறதாம்.
தலைமுடிக்கு
அடிக்கப்படும் சாயக்கலவையில் உள்ள Benzoyl peroxide ரசாயனத்தால் உருவாக்கப்படும் மைதா
உணவுகளை நாம் உட்கொள்ளும் போது நீரழிவு
நோய், சிறுநீரக கல், இருதய கோளாறு
ஆகியவை நிச்சயம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மைதா உணவுகளின் அதீத சுவைக்கு
கட்டுப்பட்டவர்களாக நாம் சத்துகள் ஏதுமற்ற, ஜீரண
சக்திக்கு கெடுதல் செய்யும் புரோட்டா, போண்டா, கேக் ஆகிய மைதா உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து பாரம்பரிய உணவு வகைகளை
உண்பதுடன் குழந்தைகளையும் உண்ணச் செய்வோம். தொடர்ந்து தொலைக்காட்சி விளம்பரங்களில்
காட்டப்படும் பன்னாட்டு உணவு வகைகளின் தரம் பற்றிய தெளிவு இல்லாமல் வாங்கும்
பழக்கத்தை கைவிடுவோம்.
இந்திய மக்களையும், பாரம்பரிய உணவு முறைகளையும் காக்கும் பொருட்டு இந்திய அரசு மக்களின் நலன்சார்ந்து செயல்பட்டு
உடனடியாக மைதாவை தடை செய்திட வேண்டுமென மறத்தமிழர் சேனை சார்பாக கோரிக்கை
வைக்கிறோம். மேலும், பன்னாட்டு ரசாயன கலப்பு உணவுகள்
இறக்குமதிக்கு தடைவிதித்து உள்நாட்டு விவசாயத்திற்கு ஏதுவாக இடு பொருள், கடன் உதவி, இயற்கை உரம் ஆகியவற்றில் கவனம்
செலுத்திட வேண்டுகிறோம்.