★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, October 27, 2012

மாவீரர்களின் 211 வது குருபூஜை விழா

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 211 வது குருபூஜை விழா 27-10-2012 அன்று மறத்தமிழர் சேனை சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது.













எழுச்சிமிக்க கூட்டத்தின் நடுவே மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் 





மேலும் செய்திகள் விரைவில் ஏற்றப்படும்.









Tuesday, October 2, 2012

மது ஒழிப்பு பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை கொள்கை முழக்கம்

றத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் தமிழத்திலே நிலவக்கூடிய மதுவிற்பனை என்னும் அரக்கனை ஒழித்திட தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் நகர், சேதுராஜா தெருவில் மதுவிலக்கினை அமல்படுத்திட வலியுறுத்தி 30-09-2012 அன்று மாலை 6.00 மணியளவில் மதுஒழிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் காயல் எம்.முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் துர்க்கை ஈஸ்வரன் அவர்கள், மாவட்ட துணைத்தலைவர் நங்கை எஸ்.முருகன் அவர்கள், மாவட்ட பொருளாளர் கே.சந்தானக்கிருஷ்ணன் அவர்கள், காயல்பட்டினம் நகர தலைவர் எஸ்.காசிபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தனர். 

Friday, August 31, 2012

கமுதியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாளி அடித்து கொல்லப்பட்டார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற  தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி (வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ருக்குமணி இவர்களுக்கு 2 மகன், 5 மகள்கள் உள்ளனர்.

வெள்ளைச்சாமி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று அதிகாலையில் வெள்ளைச்சாமி வாக்கிக் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்பு அவர் வீட்டில் இருந்தபோது மேலராமநதியை சேர்ந்த தனசீலன் (வயது 42) என்பவர் வந்தார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெள்ளைச்சாமியை வெட்டினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு மனைவி ருக்குமணி ஓடிவந்தார். அவரையும் தனசீலன் அரிவாளால் வெட்டினார்.

சரமாரியாக வெட்டுப்பட்ட வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இதற்கிடையில் வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதை அறிந்ததும் தனசீலன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.  ஆனால் அவர்கள் தனசீலனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவரும் பரிதாபமாக  இறந்தார்.


இதுபற்றிய தகவல் கமுதி போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த வெள்ளைச்சாமி-தனசீலன் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

முன்னாள் எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட சம்பவம் கமுதி முழுவதும்  பரவியது. அங்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Monday, August 27, 2012

மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா

அருப்புக்கோட்டை ஒன்றிய , நகர மறத்தமிழர் சேனை சார்பாக நெற்கட்டும்செவ்வேல் மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா வருகின்ற செப்-1 அன்று அருப்புக்கோட்டை, மதுரை ரோடு, ராமலிங்கா சமுதாய கூடத்தில் மாலை 5.௦௦ மணியளவில் நடைபெறுகிறது.

பிறந்தநாள் விழாவிற்கு அருப்புக்கோட்டை நகர செயலாளர் ச.லட்சுமணபாண்டியன் அவர்கள்  தலைமை தாங்குகிறார். விழாவில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழக மக்கள் பார்வர்ட் பிளாக் தலைவர் Dr.சு.மனோகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.


விருதுநகர் மாவட்ட செயலாளர் மு.ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, அருப்புக்கோட்டை நகர தலைவர் ம.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். கூட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில இளைஞர் சேனை  செயலாளர் ம.கார்த்திக் அவர்கள், மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துகுமார் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  செயலாளர் மு.நாகேந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  தலைவர் மு.சுப்பிரமணி அவர்கள், விருதுநகர் மாவட்ட மாணவர் சேனை செயலாளர் ம.மாரீஸ்வரன் அவர்கள், விருதுநகர் நகர் செயலாளர் சு.ஹரிபாஸ்கர் அவர்கள், கலந்து கொள்கிறார்கள்.

அருப்புக்கோட்டை நகர் பொருளாளர் ஜெ.செந்தில் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்கள்.



விழா ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் சு.சரவணன் அவர்கள் , நகர இளைஞர்சேனை தலைவர் ப.சதீஸ்குமார் அவர்கள், நகர இளைஞர்சேனை செயலாளர் எம்.சரவணபாண்டி அவர்கள், ஒன்றிய இளைஞர்சேனை செயலாளர் ர.பாண்டியராஜன் அவர்கள் செய்கிறார்கள்.

Saturday, July 28, 2012

viruthunagar

மறத்தமிழர் சேனை "விருதுநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்" 29-07-2012 அன்று மாலை 4.00 மணியளவில் விருதுநகரில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் M.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாநில அமை...ப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Thursday, July 5, 2012

அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயற்குழு


அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டமும், இராமநாதபுரம் மாவட்ட அரசியல் ஆலோசனை கூட்டமும் 03-07-2012 அன்று கமுதி தேவர் மகாலில் மாலை 03.00 மணியளவில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் P.V.கதிரவன் M.L.A அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   

கூட்டத்தில் பார்வர்ட் பிளாக் மாநில தலைவர் M.K.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் R.மாயத்தேவன், திருப்பூர் ராஜசேகர், திண்டுக்கல் ஜெயராமன், கமுதி ராஜேஸ்வரன், முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநில தொழிலாளர் அணிச்செயலாளர் ஆனந்தமுருகன் இராமநாதபுரம் மறவர் முன்னேற்ற சங்கம் தலைவர் முத்துப்பாண்டி, செல்வக்குமார், தெளிச்சாத்தநல்லூர் மாரிசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கமுதி கோட்டைமேட்டில் அமைந்துள்ள தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எவ்வித வளர்ச்சியுமின்றி இருப்பதால் உடனடியாக அரசு தலையிட்டு I.A.S அளவில் நிர்வாக அதிகாரியை நியமித்து பல்வேறு சிறப்பு பாடபிரிவுகள் மற்றும் கட்டிடம் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


              மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களாலும், வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களாலும் வழிநடத்தப்பட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியானது, தேவர் தந்த தேவர் P.K.மூக்கையாத் தேவர் அவர்களுக்குப் பிறகு ஒரு திறமையான, வலிமையான தலைவர் இன்றி திணறிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியான பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டி தொகுதிக்குள் மட்டுமாக முடங்கி போய்விட்டது. இந்நிலை மாறவேண்டுமெனில் அந்தந்த பகுதிக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். விரிவான செயல்திட்டமும், செயல் படுத்துவதற்கு ஆனந்தமுருகனைப் போன்ற தன்னலமில்லா போராளிகளையும் உருவாக்க வேண்டும். வலுவான போராட்டங்களும், முறையான நடைமுறை விதிகளும் பின்பற்றப்படாத எந்த இயக்கமும் பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு பார்வர்ட் பிளாக் முன்னுதாரணம் ஆகிவிட்டது. தற்பொழுது திரு கதிரவன் அவர்கள் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆளும் கூட்டணி அரசிலும் அங்கம் வகிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக முதல்வரிடம் நம் இனம் சார்ந்த, நலன் சார்ந்த முக்கியமான முடிவுகளில் ஒப்புதல் வாங்கிவிடலாம். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அவர்களின் திருநாமத்தை சூட்ட வலியுறுத்தி கடந்த 20 வருடங்களாக போராடிவருகிறோம்.  தமிழக அரசிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவேயில்லை. ஆனால் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தாமலே இம்மானுவேலுவின் சமாதிக்கு 2.60 கோடி பணத்தை பொதுப்பணித்துறை மூலமாக பெற்றுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட அரசாணையின் மூலமாக, சேதுபதிசீமையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் சிலை அமைக்கப்பட்டு விடும் என்கிற நம்பிக்கையில் மண் விழுந்ததுதான் முக்கியம்.

     இன்றைய தமிழக அரசு நமது உரிமைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. உண்மையான தியாகிகளுக்கு மதிப்பளிக்கப் போவதுமில்லை. ஆக இந்த குள்ளநரித்தனங்களை தட்டிக்கேட்கும் இடத்திலே இருக்கக்கூடிய தாங்கள் தான் இதனை சீர்செய்திட வேண்டும். அப்படி செய்கின்ற பொழுதில் இந்த இயக்கம் தானாகவே வலுப்படத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.  

Tuesday, June 26, 2012

மன்னர் முத்துவடுகநாதத் தேவர் 240 வது நினைவுநாள் விழா

வானமே வசப்படினும், மானமே பெரிதென வாழும் மறத்தமிழர் கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனையின் வீரவணக்கம்.

சிவகங்கை சீமை ஆண்ட வீரமறவன் மாமன்னர் சசிவர்ண முத்துவடுகநாதத் தேவர், கௌரி நாச்சியார் அவர்களின் 240 வது நினைவுநாள் விழா 25-06-2012 அன்று மாலை 4.00 மணியளவில் காளையார்கோவில் மன்னர் மாலையீடில் நடைபெற்றது. 

சங்க கால இலக்கியங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு எங்கள் சிவகங்கை சீமை மண்ணில் வெளிப்பட்டது.

இந்த வீரத்திருமகனின் வாழ்க்கையே , தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில், இலக்கியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை நிரூபணமாக்கியது.

மறத்தமிழர் சேனையை கட்டமைத்து ‘எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு, 240 வது நாளான இன்று (25-06-2012) மாலை 4.50 மணியளவில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


எதிர்வரும் காலங்களில் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் அவர்களின் புகழை இளைஞர்களிடம் எடுத்துசெல்லும் விதமாக; மன்னரது வீரவரலாற்றை மாணவர்களிடம் பரப்பும் விதமாக இந்நிகழ்வை மிகப்பிரமாண்டமாக நடத்துவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

Tuesday, June 19, 2012

சேதுபதி தேசிய நெடுஞ்சாலை பெயர்ப்பலகை நீக்கம்

இராமநாதபுரம் பசும்பொன் நகர் சாலை விலக்கிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 49 க்கு "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை" என்கிற பெயரை மத்திய அரசு சூட்டியது. இது அவர்களே வலிய சூட்டியதில்லை. பாம்பன் பாலம் கட்டிய தருணத்தில் அந்தபாலத்திற்கு இராமநாதபுரம் மன்னர்கள் சேதுபதி பெயர் சூட்ட தமிழ்நாடு தேவர் பேரவை கோரிக்கை வைத்தது. அதனை மறுத்து இந்திராகாந்தி பெயர் வைக்க முயற்சி மேற்கொண்டனர். இதனை கடுமையாக எதிர்த்த தேவர்களுக்கு அஞ்சி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாலம் திறக்கும் தேதியை தள்ளிவைத்து சமாதானம் பேச முற்பட்டதன் விளைவாக அந்த சாலைக்கு சேதுபதி பெயரும் பாலத்திற்கு இந்திராகாந்தி பெயரும் வைக்கப்பட்டது.
தற்போது தேசிய நெடுஞ்சாலையில் "சேதுபதி தேசிய நெடுஞ்சாலை எல்கை ஆரம்பம்" என்கிற பெயர் பலகையை நெடுஞ்சாலை துறையினர் நீக்கியுள்ளனர். இதனை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மறத்தமிழர் சேனையின் சார்பாக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து தேவர்களின் அடையாளங்களை அழிக்க முற்படும் மத்திய அரசை கண்டித்து போராட்டகளம் புக தயாராக இருங்கள்.
 
 
 

Monday, June 18, 2012

அகில இந்திய பார்வர்டு பிளாக் - மறத்தமிழர் சேனை சந்திப்பு


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக இலங்கை பயணம் மேற்கொண்டு, போரினால் காயம்பட்ட ஈழ மக்களை சந்தித்து ஆறுதல்கூறி, கள ஆய்வு நடத்தி அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை கண்டறிந்து இன்று (16-06-2012) காலை தாயகம் திரும்பிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக பொதுச்செயலாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமாகிய அண்ணன் P.V.கதிரவன் அவர்களை இன்று மாலை மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சந்தித்து நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் மாநில தொண்டர்சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள்.

மறத்தமிழர் சேனை கொடி விளக்கம்.

கொடியிலே இடம்பெற்றுள்ள சிவப்பு நிறம் நம் முன்னோர்களின் தியாகத்தையும், போரினால் இழந்த குருதியையும் நினைவு படுத்தும். மனிதன் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் கீழ்நோக்கி மண்ணிலே விழுகின்றன என்பதால் கொடியின் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்தில் உள்ளது. மஞ்சள் நிறம் குருதி இழந்து நாம் அடையும் வெற்றியை குறிக்கும். வெற்றி க்கான , மங்களகரமான நிறம் மஞ்சள் , நாம் அடைந்த வெற்றியின் பயனாக ஏற்றப்படும் கொடியானது மேல்நோக்கியே ஏற்றப்படும். ஆகவே கொடியின் மேல்பகுதி மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவில் அமைக்கப்பட்டுள்ள வில், அம்பு, புலி மூவேந்தர்களையும், மூவேந்தர்களின் வழித்தோன்றல் நாம் என்பதையும் நினைவு படுத்தும் வகையிலே நமது கொடி அமைக்கப்பெற்றது.

மூவேந்தர்களாகவும் , மூவேந்தர்களின் படை மரபினர்களாகவும் வாழ்ந்த நம் முன்னோர்கள் போரும் , போர் நிமித்தமான வாழ்வுமாக இந்த உலகிலே நடமாடியவர்கள். அவர்கள் எந்த நிழையிலும் உலவுத்தொழிலை செய்தவர்கள் அல்ல. எனவேதான் நம் கொடியில் பச்சை நிறம் இடம்பெறவில்லை. மறத்தமிழர் சேனை கொடிக்கான விளக்கம் இதுவே, இந்த பதிவை வாசித்த, நேசித்த, துவேசித்த உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்.

Thursday, June 14, 2012

தொண்டி நகரம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை

தமிழ்நாட்டுப் பண்டை நகரங்களுள் ஒன்றாகிய தொண்டியின் வரலாறு தமிழ்நாகரிகத்தின் தொன்மைக்கு ஓர் அறிகுறி. இந்தப் பெயரை அறியாதவர்கள் மிகச் சிலரே. இராமநாதபுரம் ஜில்லாவில் இராமநாதபுரத்திற்குச் சில மைல் தூரத்தில் தொண்டி என்னும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. அதைத்தான் நம்மவர் சிலர் கேட்டிருக்கலாம். அதற்கு மிகமிக முற்பட்டு, சுமார் 2000 வருஷங்களுக்கு முன், சிறந்து விளங்கிய தொண்டி என்ற நகரம் ஒன்று மேல்கடற் கரையிலே இருந்தது. சேரனுக்குரிய ஒரு கடற்கரை பட்டினமாக இது விளங்கியது. இந்தப் பட்டினம் தமிழுலகில் மட்டும் பெருமை பெற்றிருந்தது அன்று. எகிப்திய கிரேக்கனொருவன் எழுதிய பெரிப்ளூஸ் என்ற பிரயாண நூலில் இந்நகரத்தைக் குறித்திருக்கிறான். இந்நூல் தோன்றிய காலம் சுமார் கி.பி.60. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று டாக்டர் ஷாவ் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில், தொண்டி கேரளபுத்திர ராஜ்யத்தைச் சார்ந்த மிகப் பிரசித்தி பெற்ற பட்டினம் என்றும், முசிறிப் பட்டினத்திற்கு 500 ஸ்டேடியா (சுமார் 57 1/2 மைல்) தூரத்தில் கடற்கு அருகில் தனிப்பட்ட சிறப்புடன் விளங்கி நின்றது என்றும், இரண்டு பட்டினங்களையும் இணைத்து ஓர் ஆறு ஓடியதென்றும் குறிக்கப் பட்டிருக்கிறது.

Wednesday, May 23, 2012

சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி



கண்ணகி... மாதவி...கோப்பெருந்தேவி...
கவிக்கோ இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோப்பெருந்தேவி மற்றும் மாதவி என நாம் 3 கற்புக்கரகியர்களை காணலாம். இந்த மூவரில் கற்பு நெறியில் சிறந்தவர் யார் என்பதை ஆராயப் போகிறோம். சிலப்பதிகார கற்பு நெறியை 3 வகையாக பிரிக்கலாம், அது முதற்கற்பு, இடைக்கற்பு மற்றும் கடைக்கற்பு ஆகும்.

கோவலனை மணந்ததால் கண்ணகி அவனது மனைவியானாள். மனைவி என்பவள் கணவனுக்கு கட்டுப்பட்டவள். கோவலன் என்ன தவறு செய்தாலும் அதை கண்ணகி பொறுத்து கொள்ளதான் வேண்டும். கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவளாக, கற்பு நெறி காப்பவளாக இருப்பது ஆச்சரியமில்லை. அது அவளது கடமை. எனவே கண்ணகியின் கற்பு நேறி கடமையாகிவிடுகிறது.

ஆனால் மாதவி அப்படியல்ல. தேவதாசி குடும்பத்தில் பிறந்தவள். கோவலனின் ஆசை நாயகி. அவனது மகளான மணிமேகலையை கருவில் சுமந்து பெற்றெடுத்து, அப்பெண்னை துறவியாக வளர்த்தவள். கோவலன் பிரிந்து சென்ற பிறகு மாதவி நினைத்திருந்தால் வேறொரு செல்வந்தருக்கு ஆசை நாயகி ஆகி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி செய்யவில்லை. கோவலனை மானசீக கணவனாக ஏற்று வாழ்ந்தவள், கற்பு நெறி காத்தவள். மாதவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியது.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதற்கு எடுத்துக் காட்டு, மதுரையை ஆட்சி செய்த பாண்டியன் நெடுஞ்செழியன் மன்னன். கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கியதாலும் கண்ணகிக்கு அநீதி இழைத்ததாலும், அவையில் உடைபட்டு கிடந்த சிலம்பை போல நெஞ்சு வெடித்து உயிரிழந்தான். நெடுஞ்செழிய மன்னரின் மனைவி, அரசி கோப்பெருந்தேவி கணவன் உயிரிழந்ததை கண்ட அதிர்ச்சியில் அவளும் உயிரிழந்தாள். கணவன் இறந்த பிறகு உயிர் வாழ நினைக்காத மனைவியின் கற்பு நெறி போற்றுதலுக்குரியதுதான், இருந்தாலும் கண்ணகியை போல கோப்பெருந்தேவியின் கற்பு நெறியும் கடமையாகிவிடுகிறது.

எனவே சிலப்பதிகாரத்தில் காணப்படும் கற்பு நெறி ஆய்வுபடி முதற்கற்பு மாதவிக்கும் இடைக்கற்பு கோப்பெருந்தேவிக்கும் கடைக்கற்பு கண்ணகிக்கும் கிடைக்கிறது. கண்ணகிக்கு ஏன் கடைக்கற்பு? கோப்பெருந்தேவிக்கு ஏன் இடைக்கற்பு? என்றால், கணவன் கொலையுண்டதால் கண்ணகி மதுரையை எரித்தாள். ஆனால் கோப்பெருந்தேவி, கணவன் உயிரிழந்தால் தனது உயிரையே நீத்தாள். உயிரைவிட கண்ணகியின் கோபம் பெரிதல்ல என்பதால் கோப்பெருந்தேவிக்கு இடையும் கண்ணகிக்கு கடையும் கொடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 22, 2012

திருச்சி பி. இரத்தினவேலு தேவர் நினைவுகள்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

                   பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் பரப்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். ராஜாஜி மன்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரராகவும் இருந்தார்.        

Friday, May 18, 2012

கூடங்குளம் இன்னொரு போபால் ஆகிறதா?

நமது நிலத்தை காக்கும் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும் -
இல்லையெனில் நாம் கொல்லப்படுவோம். ஏனெனில் தப்பியோடுவதற்கு
நமக்கு வேறு நிலங்கள் இல்லை

-கென் சரோ விவா
 
 
சமீபத்தில் உலகையே உலுக்கிய ஒரு விசயம் ஜப்பானின் புகுசிஹிமா அணு உலை விபத்து.1986 இல் செர்நோபிள் நடந்தபின்னர் மற்றொரு பெரிய அணு உலை விபத்து இது. அணு உலையின் ஆபத்துகளை உலகம் உணர்ந்த நாள் என்று கூட சொல்லலாம். இதன் பின்னால் ஜப்பான் தனது அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து உள்ளது. இதே போல ஜெர்மனியும். உலகின் மற்ற சில நாடுகளும் கூட இது குறித்து முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அணு உலைகளை எதிர்த்து இதற்கான ஒரு அமைதிப் போராட்டம் நடப்பது தெரியுமா உங்களுக்கு?

Wednesday, May 16, 2012

மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்!

முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்குஏற்கனவே  சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின்  பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

                       

                              இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்.


நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும்  மறத்தமிழர்  சேனையின்  கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்

தலித் அரசியலின் அவலம் : சிலைகள் அமைத்ததில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல்: அகிலேஷ் யாதவ் தகவல்

See more of Dalit politics: Bahujan Party Chairman kansiram, Mayawati and the party's election mascot, the elephant statues, set up the corruption in the Rs .40 crore: Minister Akhilesh Yadav Information

                               லக்னோ: உ.பி.,யில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது, மாயாவதி, கன்ஷிராம் மற்றும் யானை சிலைகளை அமைத்ததில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளன. "இது தொடர்பாக எந்த விதமான விசாரணை நடத்துவது என்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

                                        உத்தரபிரதேசத்தில், 2007 முதல் 2012ம் ஆண்டு வரை, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதல்வராக மாயாவதி பதவி வகித்தபோது, லக்னோ மற்றும் நொய்டாவில் பிரமாண்டமான பூங்காக்கள் அமைக்கப்பட்டதோடு, அவற்றிலும், வேறு பல இடங்களிலும், பகுஜன் கட்சி நிறுவனத் தலைவர் கன்ஷிராம், மாயாவதி மற்றும் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சிலைகள், ஏராளமான அளவில் அமைக்கப்பட்டன.

                             முறைகேடு எவ்வளவு? இதற்கு அரசு பணம் செலவிடப்பட்டது. இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, சட்டசபை தேர்தலின் போது, முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியது. தற்போது மாநிலத்தில், அக்கட்சியே ஆட்சியில் அமர்ந்துள்ளதால், இது குறித்து நேற்று தலைநகர் லக்னோவில், முதல்வர் அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் சிலைகள் அமைத்ததில், நடந்துள்ள முறைகேடுகள் எவ்வளவு என்பதை பத்திரிகைகள் சொல்ல வேண்டாம். அதை, 5 ஆயிரம் கோடி ரூபாயாகவும் குறைக்க வேண்டாம். நாங்கள் (சமாஜ்வாதி) சட்டசபை தேர்தலின்போதே, இந்த விவகாரத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். எவ்வளவு நடந்துள்ளது என்பதை, மாநில அரசு கணக்கிடும். சிலைகள் அமைத்தற்கான செலவுகளை கணக்கிடும் போது, சிலைகள் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

                                        விசாரணை எப்படி? சிலைகள் அமைத்த போது, ஒப்பந்ததாரர்களுக்கு அதிக அளவில் பணம் தரப்பட்டுள்ளது. ஒரு சிலைக்கு, 5 லட்ச ரூபாய் செலவாகிறது எனில், மாநில அரசு நிறுவனம் ஒவ்வொரு சிலைக்கும், 60 லட்ச ரூபாய் கொடுத்ததாக கணக்கு உள்ளது. பல கட்டடங்கள் கட்டப்பட்டு, பின் இடிக்கப்பட்டது எல்லாம் கணக்கில் காட்டப்படவில்லை. அதேபோல், எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டு, பின் இடிக்கப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த மோசடிகளில் பலம் அடைந்தது யார் என்பதை எல்லாம், குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிப்பர். மேலும், மோசடி தொடர்பாக, எந்தவிதமான விசாரணை நடத்தப்படும் என்பது குறித்து, மாநில அரசு விரைவில் முடிவு செய்யும். இவ்வாறு, முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Tuesday, May 15, 2012

இந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்ள மானியம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை,மே.15: சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாள நாட்டில் உள்ள முக்திநாத் ஆகிய இடங்களுக்கு செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவுக்கு மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
                              இதுகுறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
                               கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும், அரசு சார்பில் உதவி செய்யப்படும் என்று 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் வாக்குறுதி அளித்து இருந்தேன்.

Saturday, May 5, 2012

அலங்காநல்லூர் ஒன்றிய பிரதிநிதி இல்ல காதணி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பிரதிநிதி C.பிரபாகரன்  அவர்களின்  இல்ல காதணி விழா 7-5-2012 அன்று தெத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.




Friday, April 27, 2012

இந்தியக் குழுவின் சுற்றுலாப் பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம்

அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்காவிற்கு பயணத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் மகிந்தாவின் அமைச்சர்களையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளையும் கேட்டுத்தான் மூச்சுக்கூட விடுகிறார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள்.
இந்தியக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து இடங்களும் இதற்காகவே முன்னரே தயார் செய்யப்பட்டவை. என்ன பேச வேண்டும் என்கிற பாடம் எடுத்த பின்னரே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் மட்டுமே இந்தியக் குழுவினருடன் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

Monday, April 23, 2012

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை நிறுவ வேண்டும்

சுதந்திர போராட்ட வீரரும்,  இராமநாதபுரம்  மாமன்னருமாகிய  ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருவுருவ சிலையை   இராமநாதபுரத்தில் அமைக்க வேண்டும்