★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, October 2, 2012

மது ஒழிப்பு பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை கொள்கை முழக்கம்

றத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் தமிழத்திலே நிலவக்கூடிய மதுவிற்பனை என்னும் அரக்கனை ஒழித்திட தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் நகர், சேதுராஜா தெருவில் மதுவிலக்கினை அமல்படுத்திட வலியுறுத்தி 30-09-2012 அன்று மாலை 6.00 மணியளவில் மதுஒழிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் காயல் எம்.முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் துர்க்கை ஈஸ்வரன் அவர்கள், மாவட்ட துணைத்தலைவர் நங்கை எஸ்.முருகன் அவர்கள், மாவட்ட பொருளாளர் கே.சந்தானக்கிருஷ்ணன் அவர்கள், காயல்பட்டினம் நகர தலைவர் எஸ்.காசிபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தனர். 


மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள், விருதுநகர் மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம் சத்யா அவர்கள், மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் தங்கம் அவர்கள், அருப்புக்கோட்டை நகர் செயலாளர் சரவணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

மதுவின் கொடுமை குறித்து மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் எழுச்சியுரை ஆற்றுகையில் “வணக்கத்திற்குரிய காயல் நகர் பொதுமக்களே, உங்கள் அனைவருக்கும் மறத்தமிழர் சேனையின் சார்பில் மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பகுதியில் தேவரினம் சிறுபான்மை ஆகும். ஆனாலும், மத அடிப்படையில் இந்த நாட்டின் சிறுபான்மையினராக விளங்கக்கூடிய முகமதிய மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இந்த காயல்பட்டினம் நகரில் மது ஒழிப்பு பொதுக்கூட்டம் நாங்கள் நடத்த முடிவெடுத்ததற்கு முதன்மையான காரணம் இருக்கிறது. இந்த ஊர் நகராட்சியாக உருவெடுத்துவிட்ட பின்பும், இன்றுவரையில் திரையரங்கோ, மதுபானக்கடையோ, காவால்நிலையமோ இந்த ஊருக்குள் நுழைய முடியவில்லை.

தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான மதுவுக்கெதிராக நாங்கள் துவங்குகிற யுத்தம் இந்த மண்ணிலிருந்து துவக்கப்படுவதே மிகச்சரியான நிலைபாடாக இருக்கும். ஒருகாலத்தில் மதுவை தயாரித்த, சுவைத்த, விற்பனை செய்த சமூகமாக நாங்கள் விளங்கியிருந்தாலும், இன்று கல்லூரி, பள்ளிகளிலே பயிலக்கூடிய மாணவ, மாணவியர்கள் மத்தியில் மதுகுடித்தல் ஒரு கலாச்சாரமாக பரவி வருவதைக்கண்டு அமைதியாக இருக்க இயலவில்லை.

முன்பெல்லாம் அரசுக்கு தெரியாமல் மறைவாக சாராய விற்பனை நடைபெறும். மது அருந்தும் பெரியவர்கள் உடல்வலி போக்க உழைப்பின் அசதி மறைய சற்று கூச்சத்துடன், கள்ளத்தனமாக அருந்தி வருவார்கள். ஆனால் இன்று நிலைமையே தலைகீழ் ஆகிவிட்டது. பத்துவயது சிறுவர்கள்கூட மதுவின் சுவையறிந்தவர்களாக இருக்கிறார்கள். அரசே மதுவை கோவில்கள், பேருந்து நிறுத்தங்கள், கல்வி நிறுவனங்களின் அருகில் கடைதிறந்து விற்றுவருகிறது. அதைவிடக் கொடுமை குடியை ஊக்குவிக்கும் விதமாக விற்பனையாளர்களுக்கு வருடாந்திர விற்பனை அளவு கெடு வைக்கிறது.

இதனை மாற்றவேண்டியது நமது வரலாற்றுக் கடமை ஆகும். பசும்பொன் தேவர் அவர்கள் மது, மாது, பதவி மயக்கமின்றி வாழ்ந்து மறைந்தவர் ஆவார். அவரின் பெயரைச் சொல்லி அரசியல் செய்யக்கூடிய நமக்கு குறைந்தபட்ச நேர்மையாவது வேண்டும். ஆகவே மக்களே இன்றுமுதல் மதுவின் வாசனைகளை தவிர்த்து விடுங்கள். அதனைப் போலவே நிரந்தரமாக குடிக்கக்கூடிய உழைப்பாளர்களின் தேவைக்கு கள்ளுக்கடைகளை நடத்திட தமிழக அரசு உடனே அனுமதி வழங்கி, தமிழகத்தில் இருக்கக்கூடிய மதுக்கடைகளை படிப்படியாக மூடிட இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுக்கிறேன்” என்று பேசினார்.    

பொதுக்கூட்டத்தை திருச்செந்தூர் நகர் செயலாளர் கந்தன்தேவர், மாவட்ட துணைச் செயலாளர் கே.அங்குச்சாமி, மாவட்ட இளைஞர் சேனை தலைவர் சக்திவேல், தூத்துக்குடி மாநகர தலைவர் சங்கிலி, ஆறுமுகநேரி நகர செயலாளர் தமிழரசு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் திருச்செந்தூர் செந்திலாண்டவர் ஆலய பகுதியில் செயல்பட்டு வரும் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான, மாற்று சாதியின் பிடியிலே இருந்துவரக்கூடிய சத்திரத்தை நிர்வாகிகள் பார்வையிட்டனர். சத்திரத்தை மீட்பதற்கான வழிமுறைகளையும், சட்டப்பணிகளையும் விரைவிலே செய்ய செந்தூர் வாழ் உறவினர்கள் தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.


மறத்தமிழர் சேனை மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள் உரை நிகழ்த்திய போது 

மது ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காயல்பட்டினம் நகர் பொதுமக்கள்