கடந்த வாரத்தில் பார்த்த திரைப்படங்களில் உச்சிதனை முகர்ந்தால் பற்றிய பகிர்வு இது.
ஈழத்தைப் பற்றிய அருமையான பகிர்வு. ஒரு பதின்மூன்று வயது பெண் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கருத்தரிக்க, அதை கலைக்க தமிழகம் வருகிறாள் புனிதவதி அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. புனிதவதி என்ற பெயரில் நடித்து இருக்கும், இல்லை வாழ்ந்து இருக்கும் நீநிகாவின் திறமை அபாரம்.
இதில் ஒரு காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு நிறைய காட்சிகள் அருமை. குறிப்பாக ஒரு காட்சியில் சிங்களக் கருவை சுமக்கும் தன் மகளை கொன்று விட நினைக்கும் தாய், தன் மகள் மாடியில் இருந்து எட்டிப் பார்க்கும் போது தவறி விழுந்து விடுவாளோ என்று பதறுவது தாய்மையின் பாசம் சொல்லுகிறது.
திரு நங்கைகளை மிக அழகாக காட்டிய ஒரே படம் இது தான் என்று நினைக்கிறேன். (நர்த்தகி இன்னும் பார்க்கவில்லை). ஏழாம் அறிவை தமிழர்களின் பெருமை என்று உளறியவர்கள் இதை ஒரு தரம் பார்க்கலாம்.
கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலில் தெறிக்கிறது தீ.
கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலில் தெறிக்கிறது தீ.
சரி விசயத்துக்கு வருவோம். இந்த படத்தை எந்த கணக்கில் சேர்ப்பது. இன்றைய நிலையில் சினிமா என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. மூன்று மணி நேரம் என்னை கட்டிப் போட வேண்டும். எதையாவது காட்ட வேண்டும் என்று பிரயத்தனப்படும் இயக்குனர்கள். இது தான் இன்றைய சினிமா.
குப்பைப் படங்கள் எல்லாம் எடுக்கப்படுவது கூட தவறில்லை. ஆனால் அதை நம் மீது திணிக்க முயலும் மீடியா மீது தான் மிகப் பெரிய வெறுப்பு.
பணம், பணம் பணம் என்று பார்த்து இன்று நாம் சினிமா என்பதை வியாபாரம் என்று ஒரு பார்வையில் மட்டுமே பார்க்கிறோம். சினிமா என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். ஐம்பது வருடங்கள் கழித்து ஒஸ்தி, வெடி, மயக்கம் என்ன என்று யாரும் பார்க்கப் போவது இல்லை. (பார்த்தால் காறித் துப்புவார்கள் என்பது வேறு விஷயம்)
இன்னொரு விஷயம் கேவலமான வார்த்தைகள் வரும் தமிழ் படங்கள் நிறைய பார்த்து இருப்போம். அந்த வார்த்தைகள் எல்லாம் சென்சார் போர்டுக்கு தெரியவில்லை. ஆனால் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் "இலங்கை" என்று வரும் வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டு உள்ளன. இவர்களுக்கு சோனம் கபூர் நடு விரலைக் காட்டியதில் தவறே இல்லை.

ஹாலிவுட், பாலிவுட் என்று இருப்பதை எல்லாம் பார்த்து காப்பி அடிப்பவர்களுக்கு உலக சினிமாவில் எடுக்கப்படும் நல்ல சினிமாக்கள் இருப்பது தெரியவே இல்லை போலும். (தெய்வத் திருமகள், நந்தலாலா எடுத்தவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை)
கலைக்காக படம் எடுப்பவர்களை இன்று பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் வருகிறார் உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர். ஆனால் காலம் தாண்டியும் நிற்கப் போவது இந்தப் பிழைக்கத் தெரியாதவர்தான்.
பின் குறிப்பு: இந்த படத்தை DVD-யில் தான் பார்க்க முடிந்தது. இங்கே எந்த தியேட்டரிலும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அப்படி பார்த்ததுக்கு இயக்குனர் மன்னிப்பாராக.
பின் குறிப்பு: இந்த படத்தை DVD-யில் தான் பார்க்க முடிந்தது. இங்கே எந்த தியேட்டரிலும் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அப்படி பார்த்ததுக்கு இயக்குனர் மன்னிப்பாராக.