★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, January 31, 2012

அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் பதற்றநிலை


திருநெல்வேலி, ஜன.31: திருநெல்வேலியில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசுக் குழுவுடன் 4-ம் கட்டப் பேச்சு நடத்துவதற்காக வந்தவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த தாக்குதலைக் கண்டித்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் ஆட்சியர் அலுவலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகையில், யாருக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதார போராட்டம். இந்த போராட்டம் ஓயாது எனத் தெரிவித்தனர். மத்தியக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்களும் வந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களுக்கு பாதுகாப்பாக வந்தோம் எனத் தெரிவித்தனர்.தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்து முன்னணியினரும், காங்கிரஸ் கட்சியினரும்தான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.இருதரப்பினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியதால் இப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டு உதயக்குமார் ஆதரவாளர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா

கடந்த வாரத்தில் பார்த்த திரைப்படங்களில் உச்சிதனை முகர்ந்தால்  பற்றிய பகிர்வு இது.


ஈழத்தைப் பற்றிய அருமையான பகிர்வு. ஒரு பதின்மூன்று வயது பெண் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கருத்தரிக்க, அதை கலைக்க தமிழகம் வருகிறாள் புனிதவதி அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. புனிதவதி என்ற பெயரில் நடித்து இருக்கும், இல்லை வாழ்ந்து இருக்கும் நீநிகாவின் திறமை அபாரம். 
இதில் ஒரு காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு நிறைய காட்சிகள் அருமை.  குறிப்பாக ஒரு காட்சியில் சிங்களக் கருவை சுமக்கும் தன் மகளை கொன்று விட நினைக்கும் தாய், தன் மகள் மாடியில் இருந்து எட்டிப் பார்க்கும் போது தவறி விழுந்து விடுவாளோ என்று பதறுவது தாய்மையின் பாசம் சொல்லுகிறது. 

Sunday, January 29, 2012

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் சிறப்புக்கூட்டம்

மறத்தமிழர் சேனை அலங்காநல்லூர் ஒன்றியத்தின் சார்பில் 29-01-2012 அன்று மாலை 4.00 மணியளவில், பாலமேடு தேவர்மகாலில் இந்திய தேசத்தின் அடையாளம்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது  பிறந்தநாள் விழா சிறப்புக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




விழாவிற்கு மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P. மருதுபாலா அவர்கள் முன்னிலை வகிக்க, R.C.செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

அதனைத்தொடர்ந்து மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன்  அவர்கள், மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.



நிர்வாகிகளின் கருத்துரைகளைத் தொடர்ந்து மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது  பிறந்தநாள் விழா சிறப்புக்கூட்டத்தை தமிழர் அரசியல் பேசக்கூடிய மறத்தமிழர் சேனை எதற்காக நடத்துகிறது என்பதை மைய்யமாக வைத்து தனது சிறப்புரையை வழங்கினார்.



Wednesday, January 18, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - புறக்கணிப்போம்

திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சங்கரன்கோவிலை  அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவை அடுத்து  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் எஸ். முத்துச்செல்வி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் ஆவார்.

Sunday, January 15, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

உலக தமிழர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Wednesday, January 4, 2012

விடுதலைப் புலிகள் இலச்சினையுடன் அஞ்சல் தலை

விடுதலைப் புலிகளை இயக்கத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்பு இந்த அஞ்சல் தலைகளை வெளியிடுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் அனுமதித்திருப்பது வரவேற்க்கதக்கது. இதன் மூலம் உலகநாடுகள் நமது உரிமைப்போரை அங்கீகரித்ததாக மறத்தமிழர் சேனை கருதுகிறது.


இதனிடையே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய படங்கள், இலச்சினைகளுடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது குறித்து கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதர் கிறிஸ்டின் ரொபிசொனை நேற்று சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அஞ்சல் தலைகளை புழக்கத்தில் இருந்து உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரியாறு அணை - நிபுணர் குழு அறிக்கை - maraththami zhar senai

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை சொல்ல சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.   நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினர் டெல்லியில் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.  அப்போது, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சி.டி. தத்தே, டி.கே. மேத்தா குழுவின் அறிக்கையை ஏற்கக்கூடாது என்று கேரள அரசு வாதிட்டது.