மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன்
அவர்கள் (15.12.2016) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
“மறத்தமிழர் சேனை இயக்கத்தின்
வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி, பல்வேறு வகையான தொடர் சிக்கல்களுக்கு,
சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டு
காலத்தில் இயக்க நலன் சார்ந்து கொள்கை மாறாமல் பயணிக்கும் அடிப்படை உறுப்பினர்கள்
அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
தங்களின் மேலான
அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மண எதிர்ப்பு –
சுய சாதி காப்பு – முக்குலத்தோருக்கான அதிகார மீட்டல் – மேலாதிக்க சுரண்டல்
அழிப்பு – தனித்தொகுதி மாற்றல் – வரலாற்று மீட்பு – தியாகிகள் நினைவு போற்றல் –
தமிழ்த் தேசிய அரசியல் பார்வை – தனித்தமிழ் வளர்ப்பு – போதையற்ற தமிழர் நிலம் என
தொடர்ந்து மறத்தமிழர் சேனை தனக்கென தனித்த
அடையாளங்களோடு செயல்பட்டு வருகிறது. இத்தனைகளையும் சாத்தியமாக்கிய உங்கள்
அனைவருக்கும் இயக்கம் என்றென்றும் கடமைப்பட்டது ஆகிறது.
ஆயினும், இயக்கத்தின் கட்டாய
நெறிமுறைகளில் ஒன்றானது, உறுப்பினர்கள் மூன்றாண்டுகளுக்கு
ஒருமுறை தங்களது ‘உறுப்பினர் நிலை’யை
புதுப்பித்துக் கொண்டு ‘புதிய அடையாள அட்டை’ பெற்றுவிட வேண்டும் என்பது ஆகும். அந்த வகையில்,
கடந்த 2009 – 2010 –
2012 – 2015 – நவ 2016 ஆகிய வருடங்களை ‘முடிவு கால’ அளவாகக் கொண்டு,
தற்போது வரை புதுப்பித்துக் கொள்ளாமல் நீடித்து வரும் அனைத்து உறுப்பினர்களையும் இன்று
முதல் ‘தற்காலிக தகுதி நீக்கம்’ செய்து
அறிவிக்கிறேன்.
உறுப்பினர்கள் /
நிர்வாகிகள் தங்களது உறுப்பினர் நிலையை ஜனவரி -15 க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் ‘தகுதி நீக்கம்’ நிரந்தரமாக்கப்படும் என்பதையும், அந்தந்த
இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் இதன் மூலம்
அறிவுறுத்துகிறேன். கள ஆய்வு / விமர்சனக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில்
இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும், புதிய
உறுப்பினர்கள் அனைவரையும் தொகுத்து வெளியீடாக வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.” என வெளியிட்டுள்ளார்.