★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, July 4, 2014

கள்ளர்- முக்குலத்தோர் (தேவர்)-பல்லவர்

கள்ளர்
தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.


முக்குலத்தோர் (தேவர்)

முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கியதால் இச்சாதியினர் முக்குலத்தோர் என்றும் இந்திர குலத்தினர் என்பதால் தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றனர்

சங்ககாலம்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய முன்று அரசர்கள் சேரர் சோழர் பாண்டியர் ஆவர இவர்கள் முவேந்தர்கள் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர்அவர்களை தவிர சில சிற்றரசர்களும் அதியமான், மலையமான்,தொண்டைமான், போன்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் இவர்கள் அழைக்கப்பட்டனர்
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் இவன் தமிழகத்தை தவிர மொத்த இந்தியாவையும் ஆண்டு வந்தான் தனது கல்வெட்டுகளில் சோழர் பாண்டியர் கேரளபுத்ரர் ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை.

தொண்டைமான்
கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.

அதியமான்
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபான கள்ளர் குலத்தினர் எனக் கருதப்படுகிறது. இவர்கள் அதியமான் என்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன

மலையமான்
மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.

சோழர்

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் அல்லது முக்குலத்தோரின் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. சோழர்கள் கள்ளர்கள் என்பதற்கு பல அதாரங்கள் உள்ளன தொல்லியல் துறையும் பல வரலாற்று ஆசிரியர்களும் இதை உறுதி செய்கின்றனர். இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, சுராதி ராசன் முதலாகவரு சோழன் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சோழர்களுக்கு வழங்கப்பட்ட அத்துணை பட்டப்பெயர்களும் இன்று கள்ளர்களுக்கே வழங்கப்படுகின்றன(தேவர்,மேல்கொண்டான், சோழங்கன், சோழகங்கன், நாடாள்வார்.) சோழர்கள் பலர் திருமணம் செய்து கொண்டது மழவராயர் குடும்பத்தில் அந்த மழவராயரும் கள்ளர் தான். மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்: 'இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள். திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், 'சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை' என்பர். (செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்--175 இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் சோழர்கள் கள்ளர்கள் வகுப்பினரே என்பதில் சந்தேகம் இல்லை.

பல்லவர்

"பல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன்.
இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை. தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். எனவே பல்லவர்கள் சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்களில் ஒரு பிரிவினர் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திர்ப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர். பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது.