★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, December 28, 2011

மக்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேறியது


மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில்   கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கும் இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா  நிறைவேற்றப்பட்டது. ஊழலை ஒழிக்க லோக்பால் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர் போராட்டம் நடத்தினார். இதன்விளைவாக, லோக்பால் மசோதாவை மத்திய அரசு தயாரித்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அன்னா குழுவினர் ஜன் லோக்பால் பெயரில் தனி மசோதாவை தயாரித்தனர்.

Tuesday, December 27, 2011

பிரதமர் மன்மோகன் சிங் - நரசிம்மராவின் வாரிசு



தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன் சிங், முல்லைப் பெரியாறு, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்னைகளில் வாயே திறக்காமல், நரசிம்மராவின் வாரிசு, தான் தான் என்பதை மீண்டும் நிரூபித்தார். தமிழகத்தை அலைக்கழிக்கும் இந்த முக்கிய பிரச்னைகளுக்கு பிரதமர் வருகையால் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை சுடுகாடாய் மாற்ற  கூடிய கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நிற்கிறது. அணு உலையைத் திறக்க விடாமல் நான்கு மாதத்துக்கும் மேலாகத் தொடரும் உண்ணாவிரதத்துக்கு இன்றுவரை பதில் இல்லை.

Sunday, December 25, 2011

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?

இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?

இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

Wednesday, December 21, 2011

முற்றுகை போராட்டம்: வைகோ, பழ.நெடுமாறன், எம்.எல்.ஏ. கதிவரன் கைது

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்து கேரளாவுக்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். தேனி மாவட்டத்தில் குமுளி சாலையில் லோயர் கேம்ப் பகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லை பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோர் தலைமையில் கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்து நிறுத்தும் முற்றுகை போராட்டம் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டிருந்தது.

மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள்

கோலாலம்பூர் : மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 20, 2011

Rani Velu Nachiyar, ராணி வேலுநாச்சியார் அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா

வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
                      
                              எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.  

                         சிவகங்கை சீமை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியார்  அவர்களின் 215 வது நினைவேந்தல் விழா, வருகின்ற டிச-25 அன்று சிவகங்கை நினைவிடத்தில் நடைபெற உள்ளது. மறத்தமிழர் சேனை அந்தநாளை  "வீர மங்கையர் தினம்" மாக கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு தமிழகமெங்கும் எழுதப்பட்ட சுவர் விளம்பரம்.
 


Saturday, December 10, 2011

அருண்மொழித்தேவர் எனும் ராஜ ராஜசோழன்

அருண்மொழித்தேவர் எனும் ராஜ ராஜசோழன் - தொகுப்பாசிரியர் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், பக். 310, ரூ. 200. காவ்யா, சென்னை 24; ) 044-23726882.

                           கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் வரலாற்று அறிஞர்கள், பல துறை வல்லுநர்கள் மாமன்னர் ராஜராஜனைப் பற்றி எழுதியதை நூலாசிரியர் தொகுத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. பொதுவாக, தொகுப்பு நூலில் கூறியது கூறல் என்பது தவிர்க்க முடியாதது. இருந்தாலும், அவரவர் பார்வையில் கட்டுரைகள் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

                            முதலாம் ராஜராஜனின் பிறப்பு, குடும்பம், ஆட்சிப் பொறுப்பேற்ற சூழல், எதிர்கொண்ட சவால்கள், பெற்ற பட்டங்கள், தொடர்புடைய சிற்றரசர்கள், அமைச்சர்கள், படைத் தலைவர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தொடர்புகள், மெய்க்கீர்த்திகள், எதிர்கொண்ட போர்கள், நிர்வாகம், சமயக் கொள்கை, அவர் நிர்மாணித்த பெரிய கோயில், அங்குள்ள கல்வெட்டுகள் கூறும் செய்திகள், அதன்மூலம் அறியப்படும் ராஜராஜனின் புகழ் எனப் பல கோணங்களில், பல தலைப்புகளில் செய்திகளை அறிய முடிகிறது.

                               காலம் காலமாக பெரிய கோயில் குறித்து மக்களிடையே நிலவும் சில புதிர்களுக்கு குடவாயில் பாலசுப்பிரமணியன் கட்டுரையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தொகுப்பில் வ.அய். சுப்பிரமணியம், ஓவியர் சந்ரு ஆகியோரின் கட்டுரைகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. "இராஜராஜசோழனுலா'வை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். பல அரிய செய்திகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுப்பு, இராஜராஜனுக்குச் சூட்டப்படும் மற்றொரு மணிமகுடம். அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

-maraththamilar senai 

Sunday, December 4, 2011

பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

திருச்சி:
                                         "திருச்சி பார்வர்டு பிளாக் கட்சியின் அலுவலகத்தை சூறையாடிவர்கள் மீது கொடுத்த புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர்கள் மீது முதல்வரிடம் புகார் கொடுப்பேன்,'' என்று மாநிலச்செயலாளர் கதிரவன் கூறினார்.



                     திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இக்கட்டிடத்தின் உரிமையாளர் சுரேஷ், கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இக்கட்டிடத்தில் திண்டுக்கல் வேலுநாயுடு பிரியாணி என்ற பெயரில் கடை வைத்துள்ள கார்த்திக், "கடையை காலி செய்ய மறுத்ததால், சுரேஷ் கடையை அடித்து நொறுங்கியதாக' உறையூர் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.

                         கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த சிலர், ஃபேன், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரை போலீஸார் வாங்க மறுத்துவிட்டனர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான கதிரவன் நேற்று காலை கட்சி அலுவலகத்தை பார்வையிட்டார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


                                இதுகுறித்து கதிரவன் கூறியபோது, ""ஒரு தேசிய கட்சியின் அலுவலகத்தை சூறையாடிய கார்த்திக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்கள் கட்சி நிர்வாகி சுரேஷ் கொடுத்த புகாரை போலீஸார் வாங்க மறுக்க, இன்ஸ்பெக்டர்கள் நுண்ணறிவுப்பிரிவு சுகுமார், உறையூர் பால்சுதர் தான் முக்கிய காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன்,'' என்றார். எம்.எல்.ஏ., கதிரவன் தலைமையில், கட்சியினர் கரூர் பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தநிலையில், திடீரென சாலைமறியல் செய்ய முயன்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                     நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மறத்தமிழர் சேனை கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வழியுறுத்துகிறது.

-maraththamilar senai

முல்லைப்பெரியாறு அணை - வைகோ போராட்டம்

முல்லைப்பெரியாறு அணையை காக்க ம.தி.மு.க. 21-ந்தேதி முற்றுகை போராட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை, டிச.4-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  
முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவோம் என்று கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அந்த அக்கிரமத்தை செயல்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலைமை நமக்கு மிகுந்த கவலையை தருகிறது. 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணை இந்தியாவில் உள்ள அணைகளிலேயே மிகவும் வலுவான அணையாகும்.   7 ரிக்டர் அளவுக்கு பூகம்பமே வந்தாலும் நமது அணை சேதம் அடையாது.
இந்த பகுதியில் 3.5 ரிக்டருக்கு மேல் பூமி அதிர்ச்சிக்கு வாய்ப்பில்லை. 5 ரிக்டர் ஏற்பட்டால் குமுளிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும், 550 அடி உயரத்திற்கு கேரளம் கட்டியிருக்கின்ற இடுக்கி அணைக்கும் சேதம் ஏற்படலாம். நமது அணைக்கு எந்த சேதமும் வராது.
குமரி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தரமறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய அனுமதி வழங்க மறுக்கும் கேரளம், கொங்குச் சீமையில் பாம்பாற்றுக்கு குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செய்யும் கேரளம், முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில் ஈடுபட்டு விடாமல் தடுக்க நாம் அறப்போர் களம் காண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.


அணையை உடைத்தால் நிரந்தரப் பொருளாதார முற்றுகைக்கு கேரளம் ஆளாகும் என எச்சரிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் அறப்போரை கடந்த 2010 மே 28-ம் நாள் நடத்தினோம்.
அதேபோல வருகிற 21-ம் தேதி நடத்திடத்திட்ட மிடப்பட்டுள்ளது. அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளும் இந்த அறப்போரிலும் பங்கேற்க உள்ளன. தென்தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைக்காக்க இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் விவசாயப் பெருமக்களும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

திராவிடராக பிறந்திருந்த போதிலும் தமிழர் துயர்துடைக்க போராடும் வைகோ அவர்களுக்கு மறத்தமிழர் சேனை-maraththamilar senai  நன்றி கூறுகிறது.

Thursday, December 1, 2011

வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் 100 வது நினைவுநாள்

"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
 செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
                  என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் உண்டென்றால் அது  வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மட்டும் தான்.

                   "பாலவநத்தம் ஜமீன்தாராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமித்தேவர்  - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரோ  பாண்டித்துரைத் தேவர். அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.

                    சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.
1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும்,  தேவரின பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.


              தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பி நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். . தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார். பாண்டித்துரைத் தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.
நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.

அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-

தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.

அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.

மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம் தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

அத்தகைய  மாமறவனின் 100  வது நினைவுநாள் கூட்டம் நாளை ( 02-12-2011 )  காலை 10.00 மணியளவில் மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில்,  மறத்தமிழர் சேனை சார்பில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற உள்ளது. நிர்வாகிகளும், இன உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு நான்மாடக் கூடலிலே நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுகிறோம்.

-மறத்தமிழர் சேனை