1957 ம் வருடம் கீழத்தூவல் ( keezhaththooval ) மண்ணில் காமராஜ் நாடாரின்
வழிகாட்டுதலின்படி கண்ணைக்கட்டி, கைகளைக்கட்டி சுட்டுக்கொல்லப்பட்ட கீழத்தூவல்
வேங்கைகள் ஐவருக்கு 53 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் பேரணி-பொதுக்கூட்டம் 14.09.2010
அன்று
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமையில்
கீழத்தூவல் கிராமத்தில் நடைபெற்றது.
கிராம பொதுமக்களின் சார்பில் காலை 10.00 மணியளவில் இறந்துபோன ஐவரின் நினைவாக முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் கட்டப்பட்டுள்ள நினைவுத்தூன் அருகில் பொங்கல் வைத்து, தேங்காய் பழம், மாலைகளோடு வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் பெருந்திரளாக 'நினைவு ஜோதி' எடுத்து ஓடி வந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலத்தூவல் கிராமத்திலிருந்து மீண்டும் துவங்கிய பேரணி மாலை 5.00 மணியளவில் முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் உள்ள ஸ்தூபியை வந்தடைந்தது. அனைத்து உறவுகளின் சார்பிலும் மாலை அணிவித்து பின் அங்கிருந்து மாவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கண்மாய்க் கரையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.