★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 29, 2010

மறவர் அரசியல் உரிமை மாநாடு 18.07.2010

றத்தமிழர் சேனை கட்சி இராமநாதபுரம், மண்டபம் ஒன்றியங்களின் சார்பில் 18-07-2010 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இராமநாதபுரம் வெங்கடேஸ்வரா மஹாலில் “மறவர் அரசியல் உரிமை மாநாடு மற்றும் முனைவர் ந.இராசையா படத்திறப்பு விழா” நடைபெற்றது.

மறவர் அரசியல் உரிமை மாநாட்டிற்கு மறத்தமிழர் சேனை கௌரவத் தலைவர் முகவைத்தம்பி இ.கணபதி தேவர் அவர்கள் தலைமை வகித்தார். ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கத்தலைவர் சி.சுந்தரசாமித்தேவர் அவர்கள் முன்னிலை வகித்தார்.


விழாவில் முதுகுளத்தூர் மூத்த வழக்குரைஞர் கா.கோவிந்தசாமி அவர்கள், புதுக்கோட்டை கல்வெட்டு ஆய்வாளர் கரு.இராஜேந்திரன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட தேவர் பேரவை தலைவர் வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள் மற்றும் நெல்லை சாதியியல் ஆய்வாளர் அ.சாந்தப்பன் சான்றான் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.

மாநாட்டில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். மறத்தமிழர் சேனை இயக்கமாக உருப்பெற்று நடத்தும் முதல் மாநாடு என்பதால் காவல்துறையினரும், உளவுத்துறையினரும் மிகுந்த கவனத்துடன் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவராக மேடையேறி இயக்கத்தின் உயிர்த்துடிப்பாக, கொள்கை விளக்கமாக இயற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசிக்க அனைத்து தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

1)      இராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தேவர் சிலையை நகரின் மையப்பகுதியில் காலதாமதமின்றி நிறுவிட தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2)      மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை இம்மாநாடு கோருகிறது.

3)      மதுரை விமான நிலையத்திற்கு தெய்வீகத்திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை சூட்டாமல் காலம் தாழ்த்தி வரும் அரசை வன்மையாக கண்டிக்கிறது.

4)      சுதந்திரப் போராட்ட தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் திருஉருவச்சிலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குமுன் அரசின் சார்பில் நிறுவ வேண்டும் என  தமிழக அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

5)      தென்மாவட்ட சாதிக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட மறவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுமாறும், கலவரத்தில் இறந்த மரவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும்படியும் தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6)      தமிழக மீனவர்கள் நிம்மதியாக வாழவும், மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை சிங்களனுக்குத் தாரைவார்த்த கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் தமிழகத்தோடு இணைத்திட மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7)      பின்தங்கிய மாவட்டங்களை வஞ்சிக்கும் மாநில பதிவு மூப்பின்படி அரசு பணி வழங்குவதை நிறுத்தி, மாவட்ட பதிவு மூப்பின்படி அரசுபணி வழங்கிட வேண்டும் என்று அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8)      இராமநாதபுரத்தில் அரசு பொறியியல் கல்லூரியும், திருவாடானையில் அரசு கலைக்கல்லூரியும் துவக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9)      முக்குலத்தோரின் நீண்டநாள் கோரிக்கையான தேசியத்தலைவர் தேவர் திருமகனின் பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10)   சேதுபதி தேசிய நெடுஞ்சாலைப் பெயர்ப்பலகையை அகற்றி மறவர் இன வரலாற்று அழிப்பு வேலையில் ஈடுபடும் இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

11)   சுற்றுச்சூழலுக்கு கேடான சேதுக்கால்வாய் திட்டத்தை உடனே கைவிடும்படி மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12)   இராமநாதபுரம் மாவட்டத்தை வஞ்சிக்கும் பொருட்டு காமராஜர் அரசால் தூவப்பட்ட விஷக்கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றிட தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13)   ஒன்று முதல் உயர்கல்வி வரை தமிழை கட்டாய பாடமொழியாக்கிட தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

14)   மறவர் சாதியினருக்கு மீண்டும் D.N.T என்று சாதிச்சான்றிதழ் வழங்கும்படி தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மறத்தமிழர் சேனை மாநில பொருளாளர் இ.இரவிராஜசேதுபதி நன்றியுரை நிகழ்த்த முதல் அமர்வு நிறைவு பெற்றது.


பூலித்தேவர் வரலாற்று ஆய்வாளர், வரலாற்று செம்மல், முனைவர் ந.இராசையா அவர்களது திருஉருவ படத்திறப்பு விழா மாலை 6.00 மணியளவில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பூலித்தேவர் வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், மாந்தன் இதழ் ஆசிரியருமான ஞா.ஆண்டோ அவர்கள் முன்னிலை வகித்தார். விழாவில் பூலித்தேவன் வரலாற்று நாடக ஆசிரியர் சிவகிரி வீ.மா.முத்து அவர்கள், திருவேங்கடம் கலைமாமணி பாவலர் ஓம்.முத்துமாரி அவர்கள், அ.இ.மூவேந்தர் முன்னணி கழக மாநில அமைப்புச் செயலாளர் மு.செந்தூர்பாண்டியன் அவர்கள் மற்றும் ராணி வீரப்பேரரசி வேலுநாச்சியார் அறக்கட்டளை தலைவர் ஜெ.கோபால்துரை அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

பூலித்தேவர் வரலாற்று ஆய்வாளர் முனைவர் ந.இராசையா அவர்களின் திருஉருவ படத்தினை இராமநாதபுரம் மாட்சிமை தங்கிய மன்னர் நா.குமரன் சேதுபதி அவர்கள் திறந்து வைத்து, ந.இராசையா அவர்களின் வரலாற்று ஆய்வுப்பணி, எழுத்துப்பணி ஆகியவை குறித்து விரிவாக பாராட்டி, அவரது புகைப்படத்தினை திறந்து வைத்திட வாய்பளித்த மறத்தமிழர் சேனைக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டவன் என புகழுரை நிகழ்த்தினார். நிறைவாக இராசபாளையம் தமிழ்ச்சங்க தலைவரும், ந.இராசையா அவர்களின் மகனுமாகிய இரா.நரேந்திரகுமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.