மறத்தமிழர் சேனை
கட்சி இராமநாதபுரம்,
மண்டபம் ஒன்றியங்களின் சார்பில் 18-07-2010 அன்று பிற்பகல் 3.00 மணியளவில்
இராமநாதபுரம் வெங்கடேஸ்வரா மஹாலில் “மறவர் அரசியல் உரிமை மாநாடு மற்றும் முனைவர்
ந.இராசையா படத்திறப்பு விழா” நடைபெற்றது.
மறவர் அரசியல் உரிமை மாநாட்டிற்கு மறத்தமிழர் சேனை கௌரவத்
தலைவர் முகவைத்தம்பி இ.கணபதி தேவர் அவர்கள் தலைமை வகித்தார். ரிபெல்
முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கத்தலைவர் சி.சுந்தரசாமித்தேவர் அவர்கள்
முன்னிலை வகித்தார்.