இராமநாதபுரம் சீமை அரசாண்ட
மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 258 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக
ஆண்டுதோறும் மார்ச் -30 அன்று நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களுக்கு
சிம்ம சொப்பனமாக விளங்கிய மாமறவர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த
நாளை மதுரை மாவட்ட மறத்தமிழர் சேனை வெகு விமரிசையாக கொண்டாடியது.
மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ்
அவர்களின் தலைமையில் 30.03.2018 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவிற்கு மாநில துணை பொதுச்செயலாளர்
மு.முத்துக்குமார் அவர்களும் மாநில துணை பொருளாளர் சுவ.அருணாச்சலம் அவர்களும் முன்னிலை
வகித்தனர். மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்டத் தேவர் வரவேற்புரை ஆற்றிட மதுரை மாவட்ட
பொருளாளர் பெ.திருப்பதி தேவர் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர்
சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி
அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மற்றும் மதுரை
மாவட்ட இளைஞர் சேனை செயலாளர் கி.உலகநாதன், பழங்காநத்தம் பகுதி இளைஞர் சேனை செயலாளர் இரா.அருள் மற்றும் நிர்வாகிகள்
கலந்து கொண்டு மாமன்னரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.