மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், மேட்டு நீரேத்தான் கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம பொதுமக்கள்
அனைவரும் இணைந்து தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு
தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் ஆலயம் அமைத்தனர். திறந்த வெளியில் இல்லாமல்
கோவிலாக கட்டிடத்தை எழுப்பி தேவர் திருமகனாருக்கு சிலை வைத்தனர்.
ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆர்க்கும் திடீர்
திடீரென சிலை திறந்து வரும் தமிழக அரசு ‘தேவர்
திருமகனாருக்கு சிலை திறப்பதை மட்டும் தடுக்கும்’
நோக்கத்தோடு இருப்பது போல, காவல்துறையின் மூலம் கோவில்
கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, சிலை அமைக்கும்
பணிகளை மேற்கொண்டு வந்த மரியாதைக்குரிய சகோதரர் எம்.கே.கணேசன் அவர்களின் மீது
சோழவந்தான் காவல் நிலைய குற்ற எண்.327/2016 இன் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதன்
காரணமாக நீண்ட நாட்களாக தேவர் சிலை திறக்கப்படாமலும்,
கட்டிடப்பணிகளும் முழுமையாக நடைபெறாமல் இருந்து வந்தன.
மறத்தமிழர் சேனை மாநில
அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் 19.01.2018 அன்று மேட்டுநீரேத்தான்
கிராமத்திற்கு இயக்க நிர்வாகிகளோடு நேரில் சென்று சிலை அமைப்பு குழுவினர்களை
சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து சிலை அமைக்கும் பணிக்கு அரசு
தவறுதலாக ஏற்படுத்தி வரும் தடங்களுக்கு எதிராக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை விரைந்து
பணியாற்ற உத்தரவிட்டிருந்தார். மறத்தமிழர் சேனை சார்பில் கட்டிட பணிகளை மீண்டும்
மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 15.03.2018 அன்று
வாடிப்பட்டி வட்டாட்சியர் பார்த்திபன் அவர்கள் தலைமையில் சிலை அமைப்பது குறித்த
பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணைப்
பொதுச்செயலாளர் மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் து.தினேஷ், மதுரை மாவட்ட
தலைவர் மணிகண்டன், மதுரை மாவட்ட பொருளாளர் பெ.திருப்பதி
தேவர், மேட்டுநீரேத்தான் எம்.கே.கணேசத்தேவர் ஆகியோர்கள்
கலந்து கொண்டனர்.