★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, May 1, 2016

இராமநாதபுரத்தில் சிங்கம் கூட்டணி வேட்புமனு தாக்கல்

மறத்தமிழர் சேனை, அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு ஆகியவைகள் இணைந்து சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்க பார்வர்ட் பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்தோடு  'சிங்க கூட்டணி' அமைத்தது.


சிங்க கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு கடந்த 29-04.2016 அன்று நண்பகல் 1.45 மணியளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்
இரா.இராம்பிரதீபன் அவர்களிடம் வேட்பு மனு அளித்தார். அவரோடு, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், தேசிய மறுமலர்ச்சி இயக்க துணை தலைவர் ஜெயகார்த்திகேயன் அவர்கள், பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் மற்றும் வல்லரசு உடனிருந்தனர்.


வேட்புமனு தாக்கல் செய்ததும் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், தேசிய மறுமலர்ச்சி இயக்க தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது "தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான முக்குலத்தோர்களை தொடர்ந்து அரசியல் ரீதியாக புறக்கணித்து வருகிற திராவிட கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டவே 'சிங்க கூட்டணி' தேர்தலை தனித்து எதிர்கொள்கிறது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இந்த தேர்தல் களத்தை பார்க்கிறோம். முன்னெப்போதையும் விட தேவர் சமூக இளைஞர்கள் மிகுந்த அரசியல் விழிப்போடு இப்போது இருக்கிறார்கள். ஆளுகின்ற அதிமுக அரசு தொடர்ந்து இந்த சமூகத்திற்கு இழைத்த கொடுமைகளையும், தேசிய தலைவர்கள் மற்றும் இந்த நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட போராளிகளுக்கும் கூட 'சாதிய முத்திரை' குத்தி 144 தடை உத்தரவிட்டு வணங்கவிடாமல் செய்த துரோகத்தையும் மறந்துவிடாமல் தக்கபதிலடி கொடுக்க காத்துக்கொண்டிருந்தனர்.


தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுதேர்தல் அதற்கான வாய்ப்பை எங்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆகவே தென் தமிழகம் முழுக்க பரவி வாழக்கூடிய தேவரினத்தின் பலத்தை நாங்கள் போட்டியிடக்கூடிய அத்தனை தொகுதிகளிலும் நிச்சயமாக உணர்த்துவோம். எதிர்வரக்கூடிய காலங்களில் எங்களின் ஆதரவில்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற நிலையை உருவாக்க கடுமையாக போராடுவோம். அது இந்த இராமனாதபுரம் சட்டமன்ற தொகுதியிலும் எதிரொலிக்கும்" என்றனர்.

பின்பு அனைத்து கட்சி நிர்வாகிகளோடும் நகர் பகுதி, பேருந்து நிலையம், சந்தைக்கடை பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து 'சிங்கம் சின்னத்தில்' வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் செய்தனர்.