தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை நோக்கி முரண்பாடான பல கூட்டணிகளை உருவாக்கி பிரச்சாரத்தை துவக்கிவிட்ட நிலையில் தேவரின கட்சிகள் தங்களுக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி தனித்து நிற்பதென முடிவெடுத்து மதுரை அ.இ.மூ.முன்னணி கழக அலுவலகத்தில் 21.04.2016 அன்று அனைத்து கட்சிகள் கூட்டத்தை நடத்தியது.
கூட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழ்மாநில தலைவர் P.V.கதிரவன் அவர்கள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் தலைவர் மருத்துவர் ந.சேதுராமன் அவர்கள், பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், தேசிய மறுமலர்ச்சி இயக்கம் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள், நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் அவர்கள், தீ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜாமறவன் அவர்கள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் ஒருமித்த கருத்தாக பார்வர்ட் பிளாக் கட்சியின் 'சிங்கம் சின்னத்தில்' தேர்தலை எதிர்கொள்ள சம்மதித்தனர். அமைந்த கூட்டணிக்கு 'சிங்க கூட்டணி' என்று பெயர் சூட்டப்பட்டு ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. பின்பு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரித்துக்கொள்ளப்பட்ட தொகுதிகள் பட்டியலையும், வேட்பாளர்களையும் அறிவித்தனர்.
மாலை 6.00 மணியளவில் கூட்டணி கட்சித்தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பசும்பொன் சென்று தேவர் திருமகனார் ஆலயத்தில் வணங்கி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.