★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, February 23, 2012

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை

சென்னையை கலக்கிய வங்கி கொள்ளையர்கள் சென்னை வேளச்சேரி அருகில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொள்ளையர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கொள்ளையர்கள் பதிலுக்கு தாக்கியதில் 2 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 2 போலீசாரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போலீசாரை பார்த்து ஆணையர் திரிபாதி ஆறுதல் கூறினார்.



கமிஷனர் விளக்கம்...

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 5 பேரும் வெளிமாநிலத்தவர்கள் என்று காவல் துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார். ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். வீட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையரை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஜன்னல் வழியே போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை தாக்கப்போவதாகவும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதலில் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். 1 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில் 5 பேரும் வீழ்த்தப்பட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வடமாநில கொள்ளையர்கள்...

போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 5 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வங்கி கொள்ளை தொடர்பான போலீஸ் வீடியோவில் இருந்தவர் கும்பலின் தலைவன் என்றும் வீடியோவில் இருந்த நபர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி முன்னாள் மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. என்கவுண்டர் நடந்த வீட்டிலிருந்து கட்டுகட்டாக பணம் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொள்ளையர்களின் கூட்டாளிகள் பற்றி போலீசார்
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குகள் என்ன...

கொல்லப்பட்டோர் ஒரே மாத இடைவெளியில் 2 வங்கிகளில் கைவரிசையை நிகழ்த்தியுள்ளனர். முதல் கொள்ளை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி நடந்தது. வங்கி ஊழியர்களை மிரட்டி 20 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். இதனையடுத்து, கடந்த திங்களன்று சென்னை கீழ்க்கட்டளை ஐ.ஓ.பி.வங்கியில் 2 வது கொள்ளை சம்பவம் நடந்தது. கீழ்க்கட்டளை வங்கியிலும் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சத்தை சுருட்டி கொள்ளையர்கள் கைவரிசை நிகழ்த்தினர். கொள்ளையர்களை பிடிக்க சுமார் 45 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விசாரணை...

கொள்ளை கும்பல் தலைவன் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவன் என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பல் தலைவனின் மற்ற கூட்டாளி பற்றி அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவர் சிலரை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். கும்பலின் தலைவன் தங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் மாணவன் என்பதால் மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி அறிய எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிர்வாகிகளையும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லாமே 23ம் தேதி..

சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் ஜனவரி 23ம் தேதி கொள்ளை நடந்தது. அதே போல் கொள்ளையர்கள் 5 பேரும் பிப்ரவரி 23ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய என்கவுண்டர்...

தமிழ்நாட்டில் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு போலீஸ் இதற்கு முன் 2002ல் பெங்களூரில் 5 பேரை கொன்றது. பெங்களூரில் தீவிரவாதி இமாம் அலி உட்பட 5 பேர் 2002ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நடந்துள்ள மிகப்பெரிய என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010ல் திண்டுக்கல் பாண்டி உட்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


அடையாளம் தெரிந்தது...

சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேர் யார் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. வினோத் குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் ஆகியோர் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஐந்தாவது நபரான சரிகரே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

14 லட்சம் பறிமுதல்

என்கவுண்டர் நடந்த வீட்டில் இருந்து 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய 7 துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். எஞ்சிய பணத்தை கைப்பற்ற தேவைப்படின் எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதிகளில் சோதனை நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்களின் கூட்டாளி வேறு யாரேனும் உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. கொள்ளையரின் டைரியில் உள்ள முகவரியிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வேறு யாருக்காவது பணத்தை பங்கிட்டு கொடுத்தார்களா அல்லது கொள்ளையிட்ட பணத்தை உல்லாசமாக செலவிட்டார்களா என்றும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


என்கவுண்டர் நடந்தது எப்படி?

வங்கி கொள்ளையர் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்களை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் போலிசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால்  சண்டை மூண்டது. பொதுமக்களை தாக்கபோவதாகவும் கொள்ளையர் மிரட்டியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கொள்ளையர் சுட்டதில் ஆய்வாளர் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதிலடி கொடுத்தனர். ஒரு மணிநேரம் நீடித்த இந்த சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

வீடு எடுத்தது எப்படி

கொள்ளையர்கள் 3 மாதங்களாக வேளச்சேரியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். கொள்ளையரின் வீடு ஏ.எல்.முதலி தெருவில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பாகும்.  3 மாடிகள் கொண்ட குடியிருப்பின் தரை தளத்தில் கொள்ளையர்கள் குடியிருந்தனர். ரூ.20,000 அட்வான்ஸ், ரூ.5,000 வாடகை கொடுத்து டிசம்பரில் குடிபுகுந்தனர். கொள்ளையர்கள் 5 பேரும் கல்லூரி மாணவர்கள் என வேளச்சேரி மக்களிடம் கூறி வந்தனர். கொள்ளையர்களுக்கு வீடு கொடுத்தவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.


தகவல் தந்தது யார்?

போலீசார் வெளியிட்ட சி.சி.டி.வி உருவத்தை பார்த்து கொள்ளையர்கள் அடையாளம் தெரியவந்தனர்.  சந்தேகத்தின் பேரில் ஒருவர் காவல்துறை உயர் அதிகாரிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரித்ததில் கொள்ளையர்கள் பற்றி வந்த தகவல்கள்  உண்மை என உறுதியானது.

ஆயுதம் வந்தது எப்படி ?

பீகாரை சேர்ந்த 4 பேரும் தமது மாநிலத்தில் கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்தனர். வங்கி அதிகாரியை மிரட்ட பயன்படுத்திய துப்பாக்கி மூலம் போலீசாரை சுட்டனர்.துப்பாக்கி குண்டுகளும் பீகாரில் இருந்து வாங்கிவரப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்த போலீஸ்...

குண்டடிப்பட்ட ஆய்வாளர்கள் 2 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆய்வாளார்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி (துரைப்பாக்கம்), ரவி (தேனாம்பேட்டை) ஆகியோர் காயமடைந்துள்ளனர். கொள்ளையர்கள் சுட்டதில் ஜெயசீலிக்கு இடது கையிலும், ரவிக்கு இடுப்பிலும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.