வைகை நதி மக்கள் இயக்கம்
சார்பில் வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க
வலியுறுத்தியும் 07.04.2018 அன்று மாலை 05.00 மணியளவில் மதுரை பேச்சியம்மன்
படித்துரை ஆறுமுகசந்தி திலகர் திடல் சந்தை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வைகை நதி மக்கள்
இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில்
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன், மாநில துணை பொதுச்செயலாளர்
மு.முத்துக்குமார், மதுரை மாவட்ட தலைவர் சு.மணிகண்ட தேவர், மதுரை மாவட்ட ஆலோசகர் அ.கி.கணேசத்தேவர், மதசார்பற்ற
ஜனதாதளம் மாநில பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், மக்கள் சட்ட
உரிமை இயக்கம் தலைவர் ப.அண்ணாதுரை, நவீன நீர்வழிச்சாலை
தலைவர் ஏ.சி.காமராஜ், வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாதுரை, இந்து இளைஞர் சேனா மாநில தலைவர் எம்.சோலைக்கண்ணன், இந்து
இளைஞர் சேனா மாநில அமைப்பாளர் கே.ரவிக்குமார், நம்மாழ்வார்
சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.சித்தன், இயற்கை
ஆர்வலர் வழக்கறிஞர் இ.த.சீமான் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு
கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக மதுரை கல்லூரி
நிர்வாகக்குழு உறுப்பினர் இல.அமுதன் வரவேற்புரை ஆற்றிட வைகை நதி மக்கள் இயக்கம்
ஒருங்கிணைப்பாளர் எம்.மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.