பாரத் சேனா கட்சியின் கோவை மாநகர மாவட்டத்தின் சார்பில்
23.02.14, அன்று மாலை 6.00 மணியளவில் கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர்
அருகில் ‘மாபெரும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு பாரத்சேனா மாவட்ட இளைஞர் அணிச்
செயலாளர் கோவை எஸ்.ஆர்.ஜெகதீஸ் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள்
டவுன்ஹால் பிரேம்ஜீ அவர்களும் பி.ஜெ.குமார் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
பாரத்சேனா மாநில பொதுச்செயலாளர் செந்தில்கண்ணன் அவர்களும்,
மாநில அமைப்பு செயலாளர் உங்கள் சிவா அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
விழாவில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். மேலும், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை மாநிலதலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் அவர்களும், தமிழ்நாடு இந்துமஹா சபை மாநிலத்தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மறத்தமிழர் சேனை சார்பில் தலைவர் புதுமலர் பிரபாகரன்
அவர்களும், மாநில தொண்டர்சேனை செயலாளர் பசும்பொன் முத்துக்குமார்
அவர்களும், மறத்தமிழர் சேனை கோவை மாவட்ட செயலாளர் தங்கவேல்
அவர்களும் கலந்து கொண்டனர்.
புதுமலர் பிரபாகரன் அவர்கள் பேசும்போது “தெற்கு சீமைக்கும்
கொங்கு மண்டலத்திற்கும் பசும்பொன் தேவர் காலம்முதல் பிரிக்கமுடியாத அளவிற்கு ஓர்
பந்தம் உண்டு. இன்றைய சூழலில் நாம் தனித்தனியானவர்களாக பிரிந்துகிடப்பதால் தான்
நமது வாக்குகள் தவறான திசையில் மடைமாற்றப் படுகிறது. நாங்கள் தேவர்களாகவும்
நீங்கள் கவுண்டர்களாகவும் இருக்கின்ற பட்சத்தில் நம்மிருவரையும் ஒன்றிணைக்கும்
பலமான சக்தியாக இந்து மதம் திகழ்கிறது. வலிமையான கூட்டமைப்பு நம்மிடையே
உருவாக்கப்பட்டால் தான் இரண்டு பகுதி மக்களிலிருந்து ஒருவர் முதல்வராக உயர
முடியும்.
கோவை பகுதியின் மொத்த வர்த்தகமும் இன்று மலையாளிகள் வசமாகிக் கொண்டிருக்கிறது. நமது பண்பாட்டு அடையாள விழாக்களெல்லாம் மறக்கடிக்கப்பட்டு ஓணமும், வெண் சேலையும் தமிழர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இந்த நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டுமெனில் நமக்குள் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் கூடிய ஓர் கூட்டமைப்பு நிச்சயம் உருவாக்கப்பட வேண்டும். நாம் தெய்வமாக வணங்கக்கூடிய, பெற்ற தாய்க்கு அடுத்தநிலையில் இருக்கக்கூடிய பசு மலையாளிகள் கொன்று தின்பதற்காக இந்த பகுதியின் வழியாகவே கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தடுத்துநிறுத்த வேண்டிய காவல்துறையும், தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் இதனை செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் இந்தப்பகுதியிலே இருக்கக்கூடிய இந்து அமைப்புகளுக்கும், குறிப்பாக பாரத்சேனாவிற்கு உண்டாகிறது.
பொது சிவில்சட்டம் என்பதும் வெறுங்கனவாக இருக்கிறது. இனி
அமையப்போகும் ஆட்சியிடம் அது குறித்த கருத்தியலை ஏற்படுத்திட கடுமையான
போராட்டங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். பொதுநலன் சார்ந்து, இந்துமத மேன்மைக்காக பாரத் சேனா எடுக்கும் அத்தனை போராட்டங்களுக்கும்
நாங்கள் ஆதரவுக்கரம் நீட்ட தயாராக இருக்கிறோம்.” என்று தமது உரையை நிகழ்த்தினார்.