Saturday, October 27, 2012
Tuesday, October 2, 2012
மது ஒழிப்பு பொதுக்கூட்டம் மறத்தமிழர் சேனை கொள்கை முழக்கம்
மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில் தமிழத்திலே
நிலவக்கூடிய மதுவிற்பனை என்னும் அரக்கனை ஒழித்திட தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் நகர், சேதுராஜா தெருவில் மதுவிலக்கினை அமல்படுத்திட வலியுறுத்தி 30-09-2012 அன்று
மாலை 6.00 மணியளவில் ‘மதுஒழிப்பு மாபெரும் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு மறத்தமிழர் சேனை திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் காயல் எம்.முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் துர்க்கை ஈஸ்வரன் அவர்கள், மாவட்ட துணைத்தலைவர் நங்கை எஸ்.முருகன் அவர்கள், மாவட்ட பொருளாளர் கே.சந்தானக்கிருஷ்ணன் அவர்கள், காயல்பட்டினம் நகர தலைவர் எஸ்.காசிபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
Subscribe to:
Posts (Atom)