தமிழரின், தமிழின் பண்பாட்டு அடையாளங்களை காத்து,
உலகளாவிய அளவில் தமிழ் நிலத்தின் புகழை பரவல் செய்து கொண்டிருக்கும் தமிழ்ச்சாதி தமிழர்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
உலக அரங்கில்
அனைத்துக்கும் காரணம் அமைத்து கடைபிடித்த ஒரே இனமாகிய தமிழர்கள் நாம் என்பதும், அதனின் தலையாய இனக்குழுக்கள் யாம் என்பதும் பிறப்பின் மகிழ்வை
ஒவ்வொரு நாளும் உணர்த்திச் செல்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித
வாழ்க்கையின் நியதி. அந்த இயற்கைக்கும், தம்மோடு தோழமையாக
நின்று மண்ணை பண்படுத்தி பயனடைய உழைத்த காளைகளுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாக
அமைவதே தை பொங்கல் திருநாள் ஆகும். உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றைக்கருத்தோடு
நின்று மகிழும் பொங்கல் திருநாளில் ‘மறத்தமிழர் சேனை
குடும்பத்தின் சார்பில்’ வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதில்
பெருமகிழ்வு கொள்கிறேன்.
‘பழையன கழிதலும் புதியன
புகுதலும் வழுவல கால வகையினானே’ என்கிறது நன்னூல் நூற்பா அதன்படி, தமிழர்கள் அனைவரும் ‘காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதைக்கு உதவாத பழைய சிந்தனை தடைவாதங்களை தவிர்த்துவிட்டு
இன்றைய நவீன உலகியலுக்கு உகந்த கருத்தாக்கங்களோடு முன்னோர் கடைபிடித்த, பாதுகாத்த பண்பாட்டு அடையாளங்களோடு வீரியத்தோடு களம் அமைக்க; போராட வேண்டிய நேரமிது.’