★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, February 4, 2012

ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு - maraththamil ar senai

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை 65 பக்கங்கள் கொண்‌டதாக இந்த தீர்ப்பின் அமைந்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கி‌ய முற்போக்கு கூட்டணி அரசு நிம்மதி அடைந்திருக்கிறது .




                             இதற்கென சு. சாமி இன்று காலை கோர்ட்டுக்கு முதல் ஆளாக வந்தார். பின்னர் கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய சு.சாமி., கூறுகையில்: மதியம் 12.15 க்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ‌தெரிவித்தார். என்வே நான் இன்னும் சிறிது நேரத்தில் போய் வருகிறேன். சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும். இந்த தீர்ப்பு ஊழலுக்கு எதிராக கிடைத்த வெற்றியாக இருக்கும் என்றார். சிதம்பரம் அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பு என்பதால், அரசியல் வட்டாரங்கள் உச்சகட்ட பரபரப்பில் இருந்தன. ஆனால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் சிதம்பரம் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

                                              .கோர்ட்டுக்குள் சு. சாமிக்கு மட்டும் அனுமதி: இன்றை தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் போது கோர்ட் அறைக்குள் சு. சாமி மட்டும் அனுமதிக்கப்பட்டார். ஏனையோர் அனைவரும் கோர்ட்டுக்கு வெளியே இருந்தனர். கோர்ட் வளாகம் சுற்றிலும் நிருபர்கள், அரசியல்வாதிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் சு. சாமி கோர்ட் வளாகத்திற்கு மாற்று வழியில் சென்றார்.  

                                                சு. சாமி அதிர்ச்சி பேட்டி : இந்த மனு தள்ளுபடியானதை அடுத்து கோர்ட்டுக்கு வெளியே வந்த சு.சாமியை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர். இப்போது அவர் இந்த உத்தரவு எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தருகிறது. நான் ஆனால் இன்னும் பின்வாங்க மாட்டேன் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்றார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த செப்டம்பரில், சி.பி.ஐ., கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., கோர்ட்டில் சாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தவிர, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக, பல முக்கிய ஆவணங்களையும் நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்தார்.சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜரானபோது, சுப்ரமணியசாமி முன்வைத்தகுற்றச்சாட்டுகள்: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ராஜா மீது இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. முதலாவது, 2008ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கு 2001ம் ஆண்டு விலையை நிர்ணயம் செய்தது. இரண்டாவது, ஸ்வான், மற்றும் யூனிடெக் கம்பெனிகளின் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளான எடிசாலட் மற்றும் டெலினார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலும் அன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு பங்கு இருக்கிறது. ஏனென்றால், ஸ்பெக்ட்ரத்திற்கு விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகளை, நிதி அமைச்சரும், தொலைத் தொடர்பு அமைச்சரும் இணைந்து தான் எடுக்கவேண்டும் என்று, 2003ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் கூறுகிறது.  

                                         ராஜாவுக்கு யோசனை :அதன்படி நிதி அமைச்சர் சிதம்பரமும், தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவும், 2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த, இந்த இரண்டு அமைச்சர்களும் தாங்கள் எடுத்த முடிவு பற்றி தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற எந்த நிறுவனமும், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் லைசென்சை விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம். ஆனால், "2ஜி' லைசென்சைத்தான் விற்கக் கூடாது. பங்குகள் மூலம் கம்பெனியை விற்பனை செய்யலாம் என்ற யோசனையை ராஜாவிடம், சிதம்பரம் தெரிவித்திருக்கிறார் என்றார்.அத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் ஆவணத்தையும், கோர்ட்டில் சாமி ஒப்படைத்தார். இந்த ஆவணத்தில்தான், "சிதம்பரம் வலியுறுத்தியிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைபிடித்திருக்கலாம்' என,
குறிப்பிடப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு:ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2008 ஜனவரி மாதத்தில் இருந்து, தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ததோடு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமா என்பதை சி.பி.ஐ., கோர்ட்டே முடிவு செய்யும் என, குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று அறிவித்தது.

சிதம்பரம் தப்பியதால் காங்., மகிழ்ச்சி: இன்றைய சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வெளியான பின்னர் காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில்: சிதம்பரம் மீது குற்றம் இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது. விசாரணை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்துள்ளது. அரசியல் லாபத்திற்காக அரவ் மீது அவதூறாக குற்றம் சாட்டிய எதிர்கட்சிகள் குறிப்பாக பா.ஜ., இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மத்திய அமைச்சர் கபில்சிபல் கருத்து தெரிவிக்கையில் இந்த தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பது எனக்கு தெரியும் இதனால் எவ்வித ஆச்சரியமும் இல்லை. பா.ஜ.,வுக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கும் என்றார்.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறுகையில்: போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் மேல்முறையீடு வரை செல்ல வழி இருக்கிறது. இன்றைய தீர்ப்பு மத்திய அரசு மீதான ஊழல் கறையை போக்கிடாது என்றார்.